INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

SIBICHELVAN'S POEM

 A POEM BY 

SIBICHELVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

WHAT IS THE PRICE OF A GRASSHOPPER?



With a lot of pungent spice

and a little salt
roasting it in medium heat
as golden-hued crispy chips
filtering in a cup
the golden fluid
having a puff of the ash-coated white cigar
a ring
another ring in that ring
ring within ring
In between
let another battalion of grasshopper come
so the chieftain
eating grasshopper between one puff and one gulp
of golden liquid
waiting In terrible hunger
in order to see his beloved
being in a desert-like barren city
Thus a scene and some more segments.
when flashing along the retina and fading
a cup of fluid and clusters of grasshoppers aplenty
screeching and screaming
each one of them falling as
well-fried golden chips in the plate
with scenes fading and
halting
the chieftain turning his head
eating his beloved to his heart’s content
feeling the taste of sweet in his lips
and goes on asking the cost of a grasshopper
in the 16 _Lane Highway of a capital city.

Sibichelvan Muthu


ஒரு வெட்டுக்கிளி என்ன விலை?

அதை நிறைய காரம்
கொஞ்சம் உப்பு
மிதமான இளஞ்சூட்டில்
பொன்வருவலாக வறுத்து
ஒரு கோப்பையில்
தங்கநிற திரவத்தை வடித்து
சாம்பல் பூத்த வெண்சுருட்டை இழுத்து ஒரு சுருள்
அதற்குள் இன்னொரு சுருள்
சுருளுக்குள் சுருள்
இதற்கிடையில்
இன்னொரு வெட்டுக்கிளி படை வரட்டும் என
ஒரு சுருளுக்கும்
ஒரு வாய் பொன்னிற திரவத்திற்குமிடையில் வெட்டுக்கிளி தின்று
பெரும்பசியில் காத்திருக்கும் தலைவன்
தன் தலைவியைக் காண
பாலைவனம் போல் இருந்த ஒரு நகரத்தில் இருந்துகொண்டு
இருக்கும் காட்சி மற்றும் சில பகுதிகள்
விழித்திரையில் தெறித்து மங்கும் சமயத்தில் ஒரு
கோப்பை திரவம் மற்றும் பல வெட்டுக்கிளி கூட்டம்
க்றீச்சென அலறி
ஒவ்வொன்றும் தட்டில்
பொன்வறுவலாக விழுந்தபடியே
காட்சிகள் மங்கலாகி
நிற்க
தலையை திரும்பிய தலைவன் தலைவியை இதழ் தித்திக்க
தின்று
ஒரு வெட்டுக்கிளி என்ன விலையென்று விசாரித்து கொண்டே
இருக்கும் இடம்
ஒரு தலைநகரத்தின் பதினாறு வழிச்சாலையில்
#
சிபிச்செல்வன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024