INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, September 1, 2020

REGARAJAN VEERASAMY'S ( YUGA YUGAN'S) POEMS(3)

 THREE POEMS BY 

YUGA YUGAN

[rengarajan veerasamy]


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


Despite having holes innumerable

the sky doesn’t cease to be
seeping all night.

The destination of those
getting inside sieve’s gates
and going out
would be either heaven
or hell.

In stone-throwing scatter
the bees that keep vigil
blocking the doorways.

For water to enter
the Sea has gates all over.
To exit
wings should sprout.

The house made of entrances
revolve with no walls
carrying locksmiths
for doors eaten by termites.


Rengarajan Veerasamy

எத்தனை துளைகளிருந்தும்
ஒழுகித் தீர்வதில்லை வானம்
இரவில்
சல்லடைகளின் வாசல்களில்
புகுந்து வெளியேறியவை
சென்று சேர்வது சொர்க்கமாகவோ நரகமாகவோ இருக்கலாம்
கல்வீச்சில் சிதறுகின்றன
வாயில்களை அடைத்தபடி
காவலிருக்கும் தேனீக்கள்
நீர்புக கடலுக்கு
உடலெங்கும் நுழைவாயில்கள்
விட்டு வெளியேற இறக்கைகள் முளைக்க வேண்டும்
வாயில்களாலான வீடு
சுவர்களற்று சுழல்கிறது
கரையான்கள் அரித்துவிடும் கதவுக்கு
பூட்டுகள் செய்பவர்களைச் சுமந்து.
-யுகயகன்



(2)




Not like

wearing a torn attire

or reading a torn book

But so majestic

as donning the 
sky

torn by lightning _

loving one whose vagina mutilated

in sexual assault.


Rengarajan Veerasamy


கிழிந்த ஆடையை

அணிந்து கொள்வது போலவோ

கிழிந்த புத்தகத்தை

வாசிப்பது போலவோ அல்ல

மின்னல் கிழித்த

வானைச்சூடிக்கொள்வது போல 

கம்பீரமானது

வன்புணர்வில்

உறுப்பு சிதைந்தவளை நேசிப்பது.


-யுகயுகன்
 


(3)

A stone moves
all over the radius-tracks
of the pond.

A spark
spreads into octopus- hands
of the woodlands.

For splitting the atom
and burying it unseen
depth insufficient.

Buddha buried
The light
has sprouted its branches.

From atop
a drop of dark
descends.
I am all quivering
like Hiroshima

A word has
the keys of
oh! myriad pathways.

Read this poem and see.
The closed windows
would've been opened.

Rengarajan Veerasamy

ஒரு கல்
குளத்தின்
ஆரத்திசைகளெங்கும் நகர்கிறது

ஒரு பொறி
வனத்தின்
ஆக்டோபஸ் கரங்களாய் பரவுகிறது

அணுவைப் பிளந்து
அறியாமல் புதைக்க
ஆழம் போதுவதில்லை

புத்தன் புதைத்தான்
வெளிச்சம்
கிளைவிரித்து விட்டது.

உச்சியிலிருந்து
இருளினொரு துளி இறங்குகிறது
நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்
ஹிரோஷிமா போல

ஒரு சொல்
எத்தனை பாதைகளின்
சாவிகளை வைத்திருக்கிறது

இக்கவிதையை
வாசித்து விட்டுப் பாருங்கள்
சாத்தியிருந்த சாளரங்கள்
திறந்திருக்கும்.

-யுகயுகன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024