TWO POEMS BY
SRINESAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1) THIS DUST BEING I
In this world where wading through a dream imperishable
proves ever impossible
this spec of dust that wanders along with you
has a world of its own to experience.
Those three wells in that exclusive world of it
springing till date
Now everything ceased to be yet the scars of soil that still remain bleeding
The eyes closed never to see again
The watery marble surfaces having no strength to reflect those myriad young womanlike images
Today in the dark depth of the unfilled Time of that which is well’s belly
in memory of the dust not yet become captive of amnesia
a startling scratch
Blood streaming in that ever fresh wound
Alas, for washing it all, all the oxen-fetched waters won’t suffice at all
In the blood streaming in farmland canal swarming all over
memory in accordance
True this is the futile lament of the dust.
True this is the shaky visual of the dust
that could never be seen
This is the fine acumen of realizing this
to be the dust of dust
Till all these last and thrive
so does the dust too.
The wells that were buried in one corner of the dust
would always remain with eyes wide-open
and heart brimming
pervading all over the land
far and wide
as the world.
நானாக இருக்கும் இந்தத் தூசி
அழிவற்றதாய் ஒருபோதும் கனவை ஊடுருவிச் செல்லவியலா இந்தப் பூமியில்
உங்களோடு அலைந்து கொண்டிருக்கும் இந்தத் தூசிக்கு
தன்னால் மட்டுமே உணர முடிந்த உலகம் ஒன்றுண்டு
தனிப்பட்ட அதன் உலகிலிருந்த இன்றும் ஊற்றெடுத்து நிரம்பிக் கொண்டிருக்கும் அந்த மூன்று கிணறுகள்
இப்போது எல்லாம் தூர்க்கப்பட்டும் ரணமாறா எஞ்சிய நிலவடுக்கள்
இனி ஒருபோதும் பார்க்க வாய்ப்பற்ற மூடுண்ட கண்கள்
இளம் பெண்ணை நிகர்த்தும் பல்லுரு பிம்பங்களைப் பிரதிபலிக்கத் திராணியற்ற நீர்மப் பளிங்கங்கள்
இன்று கிணற்றின் அதுவாகிய வயிற்றின் நிரம்பாத காலத்தின் இருளார்ந்த ஆழத்தில்
இன்னும் மறதிக்காட்படாத தூசியின் ஞாபகத்தில் ஒரு திடுக்கிட்டக் கீறல்
அந்தப் பச்சை ரணத்தில் ரத்தப் பீரிடல்
கழுவத் திரும்பப் பெறவியலாக் கவலைமாடுகள் இறைத்துக் கொடுக்கும் துளைக்குழிநீர் போதாதே
செங்குருதியோடும் கழனிக் கால்வாயில் அதன் மீது மொய்த்து ஒத்திசைவோடும் நினைவு
இது தூசியின் பொருளற்றப் புலம்பல்தான்
இது தூசியின் ஒருபோதும் புலப்படாதமாட்டாத அலைவுக் காட்சிதான்
இது தூசியின் தூசியென்றுணர்ந்துவிட்ட நுண்ணறிவுதான்
இவை உள்ளவரை தூசியும் நிலைத்திருக்கும்
தூசியின் ஒரு கோடியில் புதைந்த கிணறுகள் என்றும் கண்திறந்து மனம்நிரம்பி நிலம்பரவி உலகென்று விரிந்திருக்கும்.
(2)
I will be here
simultaneously I would be ascending a mountain
and half way through would have halted on a rock.
Pardon me. For asking you to come early in the morn
and thus going somewhere not knowing where
you can’t blame me nor I to be held responsible.
For I am a dual-man
While climbing as suits my convenience I alight too.
The Months ‘thai’ and ‘Chitthirai’ are one and the same.
For praying to goddess Amman with head bent
No need for the arrival of the month Aadi.
During day with snow spent out
scorching heat reigning supreme
causing rain to come
I would be in the field
relishing the heat and gulping the shade.
To see, for no rhyme or reason
long distance travellers who simultaneously cross landscapes
to and fro, back and forth
I would visit the desolate railway station
and return.
En route
I would collect the joy
scattered by children returning from school
happily hopping
and adorn myself with them.
Till dusk comes to embrace
I would remain lying on the lake-bank
in festive solitude
contemplating erratically
At times I would also shed a few drops of tears.
When darkness grasps my hand and lifts me,
holding it I would stroll among crescent moon , stars.
If fatigue overcomes I would lie in clouds.
On your earth
upon the arrival of tomorrow
I would come with the Sun.
சூரியனுடன் வருவேன்
ஸ்ரீநேசன்
நான் இங்கிருப்பேன் இதேநேரம்
ஏதோ மலையேறிப் பாதி வழியில்
ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன்
மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி
இப்படி எங்கென்றே தெரியாமல்
எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு
நீங்கள் பழியுரைக்கவோ
நான் பொறுப்பேற்கவோ ஆகாது
நானோ ஓர் இரட்டை ஆள்
வசதிக்கு ஏறிக் கொண்டிருக்கும்போதே இறங்கியும் கொள்பவன்
தையும் சித்திரையும் ஒன்றேதான்
அம்மனை வணங்கி நிற்க ஆடி வர வேண்டியதில்லை
பனி ஓய்ந்து அனல் காய்ந்து
மழையாக்கித் தரும் பகலில்
இந்த வயல்வெளியில் வெயில் தின்று
நிழல் பருகி நிற்பேன்
ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக நிலவெளிகளைக் கடக்கும்
நீண்ட தூரப் பயணிகளை
ஒரு காரணமுமில்லாமல் காண
அரவமற்ற ரயில் நிலையம் போவேன் வருவேன்
வழியில் பள்ளி விட்டுத் துள்ளிவரும் குழந்தைகள்
இறைத்துச் செல்லும் மகிழ்ச்சியைப்
பொறுக்கி அணிவேன்
அந்தி வந்து அணைக்கும்வரை ஏரிக்கரைமீது
கொண்டாட்டத் தனிமையில்
சீரற்றுச் சிந்தித்துக் கிடப்பேன்
சிலதுளி கண்ணீரும் உகுப்பேன்
இருள் என் கைப்பிடித்தெழுப்புகையில் பற்றிப்
பிறை நிலவு நட்சத்திரங்களிடையே நடப்பேன்
களைத்தால் மேகங்களில் படுப்பேன்
உங்கள் பூமியில்
நாளை என்று வரும்போதே
சூரியனுடன் வருவேன்.
No comments:
Post a Comment