INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

INSIGHT -MARCH 2022 - POETS IN THIS ISSUE

 INSIGHT -MARCH 2022 
POETS IN THIS ISSUE
 THANK YOU 
FOR YOUR SUPPORT

THANK YOU FOR YOUR SUPPORT





K.MOHANARANGAN

 A POEM BY 

K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



WORDS WITHHELD….

Yesterday

Or a year before

Or an eon ago

When remains unclear

Calling your number

I talked to thee

It was not in the least like

talking to thee

While taking the number out of memory

one digit must have gone wrong

Or

one of those six lookalikes of thee

yet there in the world to see

must have spoken in your voice

Not even two minutes

the connection went off

midway

“When you get time

you would call me again’

thought I and remained

not calling back.

But the magical receptacle

that would bring to life

Your voice at will

never sounded again.

In the silence growing dense

and overflowing

With seas coming in between

continents moving apart

each other not being able to hear

our voices of short wavelength

we remained quiet at length

In this great grand silence

with speech subdued as a whole

tranquility I inhale.


பேசாத பேச்செல்லாம்

__________________________

முன் தினமோ

முந்தைய வருடமோ

முன்னொரு யுகமோ

உறுதியாய் தெரியவில்லை,

உனது எண்ணிற்கு அழைத்து

உன்னிடம் பேசினேன்.

உன்னோடு பேசியது போலவே இல்லை.

நினைவினின்றும் ஒற்றியெடுக்கையில்

ஒரெண் பிழையாகியிருக்கக் வேண்டும்

அல்லால்

உனது சாயலில்

உலகில் இன்னுமிருக்கும்

அறுவரில் ஒருவர்

உன் குரலில் பேசியிருக்கவும் கூடும்

இரு நிமிட நேரம்கூட இருக்காது

இடையிலேயே தொடர்பறுந்து போயிற்று.

வேளை வரும்போது

மீளவும் அழைப்பாயென எண்ணி

வாளாவிருந்தேன்.

வேண்டும்போதெல்லாம்

உனது குரலை

உயிர்ப்பித்துத் தருமந்த

மந்திரச் சிமிழ்

மறுபடியும் ஒலிக்கவேயில்லை.

அடர்ந்து பெருகிய அமைதியில்

கடல்கள் இடைபட்டு

கண்டங்கள் விலகிப் போக

குறுகிய அலைநீளம் கொண்ட

நம் குரல்களை

பரஸ்பரம் செவியுறவும் வழியற்று

மெளனம் பூண்டோம்.

பேச்சொடுங்கிய இப்பேரமைதியில்

மூச்சாய் இழைகிறது

மோனம்.

க.மோகனரங்கன்

[* மோனம் என்ற சொல்லுக்கு கூகுளில் கிடைக்கும் அர்த்தம் இது: மோனம் -பெயர்ச்சொல் -ஆன்மா தன்னைத்தானே உணர்ந்தபின் பேச்சு என்பது பொருளற்றுப் போய்விட்ட அமைதி நிலை; மௌன நிலை

(மோனம் என்பது எத்தனை அழகான, ஆழமான வார்த்தை! அதை எப்படி மொழிபெயர்க்க? ஆனாலும் என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

குறுகிய அலைவரிசை என்பதற்கு short wavelength சரிதானா என்று கூகுளில் பார்க்கும்போது அதில் கிடைத்த பொருள் அந்த வார்த்தைத்தேர்வின் அடர்செறிவைப் புலப்படுத்தியது!

The frequency of a wave is inversely proportional to its wavelength. That means that waves with a high frequency have a short wavelength, while waves with a low frequency have a longer wavelength. Light waves have very, very short wavelengths.]

SHAHIBKIRAN THAKKAI

 TWO POEMS BY 

SHAHIBKIRAN THAKKAI


Translated into English by Latha Ramakrishnan(* First Draft)

(1)

What you think you can’t tell anyone

That which you can

is something expected by none.

The fountain of spring is stone inscription

_ the language unknown

To read we need an eon.

In the folds of brain

reflections many a million

The tip of a machine not self-reliant

even be a line

the volume of its length is its contraction

With what scale can a dog and a goat

be weighed

Oh, where to fix a strand of feather

and a butterfly

A sun and a star _where to see them together?

Flight is not space infinite

Space: the infinite possibility of the finite

A withered leaf is released from the tree.

A drain in penance for ages attains deliverance.

Shahibkiran Thakkai


நீங்கள் நினைப்பதை யாருக்கும் சொல்லமுடியாது.

அப்படி சொல்ல முடிந்தது

யாரும் எதிர்ப்பார்க்காதது.

சுனையின் நீரூற்று மொழியறியா கல்வெட்டு.

படிக்க ஒரு யுகம் வேண்டும்.

மூளையின் மடிப்புகளில் கோடி பிம்பங்கள்

தனித்தியங்கா எந்திரத்தின் முனை ஒரு கோடானாலும்

நீட்டி வரையும் அளவே அதன் குறுக்கம்.

ஒரு நாயையும் ஆட்டையும் எந்த அளவீட்டில் எடைப்பது?

ஓர் இறகையும் பட்டாம்பூச்சியையும் எங்கே பொருத்துவது?

ஒரு சூரியனையும் நட்சத்திரத்தையும் ஒருங்கே எங்கே பார்ப்பது?

பறத்தல் கட்டற்ற வெளியல்ல.

வெளி, எல்லையின் நெடிய சாத்தியப்பாடு. மரத்திலிருந்து ஒரு பழுப்பு விடுபடுகிறது,

யுகமாய் தவமிருக்கும் சாக்கடை முக்தியடைகிறது.

- சாகிப்கிரான்


 (2)

 OBSCENITY

The child wrote it in the slate

That it was a mere circle

It received beating and ridicule

But the child preserved it

From the slate

a lizard and a dinosaur ran out

People closed their cooking utensils

all too tightly.

Then destroying forests

They turned victorious.

Henceforth all over the nation

We can plant trees of impalement

None should call this

Profane.


ஆபாசம்

குழந்தை சிலேட்டில்

அதை எழுதியது.

வெறும் முட்டையாகப் போட்டுவிட்டதாக

கொட்டு விழுந்தது.

ஆனால் குழந்தை

அதைப் பத்திரப்படுத்தியது.

சிலேட்டிலிருந்து

ஒரு பல்லியும் பின்னாலேயே

ஒரு டையனோசரும் ஓடின.

மக்கள்

சமையலறை பாத்திரங்களை

இறுக மூடினார்கள்.

பிறகு வனங்களை அழித்து வெற்றியடைந்தனர்.

இனி நாடெங்கும்

கழு மரங்களாக நட்டுவிடலாம்.

இதை ஆபாசம் என

யாரும் சொல்லக்கூடாது.

- சாகிப்கிரான்.

 

MOHAN CHELLASWAMY (C.MOHAN)

 TWO POEMS BY 

MOHAN CHELLASWAMY 

(C.MOHAN)


Translated into English by Latha Ramakrish nan(*First Draft)

(1)

Slowly

Still more slowly

So so slowly

Leisurely

Feeling relaxed reposing

Pleasantly

Too very pleasantly

Why not we travel along

What is wrong

That which we are going to arrive at

moving hastily

hurriedly

All too hurriedly

_ Isn’t that too Rest Perfect.

The cup of water

We can slowly

very very slowly

drink

Now and then

looking around

We can have it

sip by sip

taking our own time.

Gulping it all too fast

in bitter haste

feeling no taste

Oh, won’t it be a sheer waste.

Maybe

If we go running

we could grab the glorious fruit

of victory

and relish it.

But if damn slowly means

We can tie a swing on the aerial roots

of failure

and oscillate in gay abandon,

for sure…..

Mohan Chellaswamy

மெது மெதுவாய்


மிக மிக மெதுவாய்

இன்னும் கொஞ்சம் மெதுவாய்

சாவகாசமாய் ஆசுவாசமாய்

இளைப்பாறியபடியே இதமாய்

வெகு இதமாய்

பயணித்தால் தானென்ன.

அவசர அவசரமாய்

மிக மிக அவசரமாய்

வேக வேகமாய்

விரைந்து விரைந்து சென்று

அடையப் போவதும்

ஓர் இளைப்பாறலன்றி வேறென்ன.

கோப்பை நீரை

மெதுவாய் மிக மிக மெதுவாய்

உறிஞ்சிக் குடிக்கலாம்

இடை இடையே

வேடிக்கை பார்த்தபடி

மிடறு மிடறாய்

ஆற அமர அருந்தலாம்

அவசர அவசரமாய்

ஆகப்பெரும் ஆவலாதியாய்

மடக் மடக்கெனக் குடித்து

அடையும் அவதியில்

ஆனந்தமென்ன இருந்துவிட முடியும்.

ஒருவேளை

அவசர அவசரமாய் விரைந்தேகினால்

வெற்றிக்கனியைப் பறிக்கவும்

புசிக்கவும் முடியுமாய் இருக்கலாம்.

ஆயின் மெது மெதுவாய் எனில்

தோல்வியின் விழுதுகளில்

ஊஞ்சல் கட்டி உல்லாசமாய்

ஆடிக் களிக்கலாம். 


(2)


Looks like I have been here for centuries

So many grants

So many retributions

True to what others say

they could be God's

or Satan's

But, Just the way I have accepted

Gods grants and retributions

I have been accepting

those of Satans too.

Still

Till date all I know is that

about God and Satan

and the difference between the two

nothing I have ever known

with precision.

Mohan Chellaswamy

பல நூறு வருசங்களாக

இருந்துகொண்டிருப்பதைப் போலிருக்கிறது

எவ்வளவு கொடைகள்

எவ்வளவு தண்டனைகள்

பலரும் சொல்வதைப் போல அவை

கடவுளுடையதாகவும் இருக்கலாம்

சாத்தானுடையதாகவும் இருக்கலாம்

எனில்

கடவுளின் கொடைகளையும் தண்டனைகளையும்

ஏற்றுக்கொண்டிருப்பதைப் போலவே

சாத்தானின் கொடைகளையும் தண்டனைகளையும்

ஏற்றுக்கொண்டு இருந்திருக்கிறேன்.

ஆயினும் கடவுள் பற்றியும்

சாத்தான் பற்றியும்

இருவருக்குமான வேறுபாடுகள் பற்றியும்

எதுவுமே எப்போதுமே

நான் தெளிந்துகொண்டிருக்கவில்லை

என்பதை மட்டுமே

இதுவரை அறிந்திருக்கிறேன்.

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



With tiny little bubbles

I hauled the droplets of words
The tank of Syntax
was all dry
While attempting to spin it
for opening the lid
Sun, the Annihilator
sucked the meanings.
At that time when in no way
Writing would be filled up
in those split-second
when a small spider
impacted by the stifling heat
not being able to spin the web
clinging passionately to one corner
of the interior of the tank
I could realize the moist meaning
inside the tank of Syntax.

Ragavapriyan Thejeswi

சின்னச் சின்ன
குமிழ்களோடு
வார்த்தை நீர்த்துளிகளை
மேலேற்றினேன்..
வாக்கியவியல் தொட்டி
வறண்டிருந்தது..
மூடியகற்ற சுழற்றுகையில்
அழிவெயில் அசாத்தியமாய்
அர்த்தங்களை உறிஞ்சிக்கொண்டது..
எவ்விதமாயும்
எழுத்து நிரம்புவதாயில்லாத வேளை
சின்னச் சிலந்தியொன்று
வலை பின்ன முடியாத
வெக்கையின் தாக்கத்தில்
தொட்டியின் உள்மூலையோரம்
முயங்கும் நொடிகளில்
வாக்கியவியல் தொட்டிக்குள்
ஒரு ஈரஅர்த்தமிருப்பதை
அறிய முடிந்தது..
ராகவபிரியன்

IYYAPPA MADHAVAN

  A POEM BY

IYYAPPA MADHAVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

My cabin bursting open
there comes the sea
The ceiling moving aside
sky come into view
Beneath the moon on the shore
My trails
Faraway someone has spread the net
in search of his life therein
With a bottle of wine in hand
I sing the song of the night
drunken and alone
The Moon joins me
I compose songs on the woes of
each night elongating
The Moon hearing it would have turned
somewhat shaken
The fisherman returning to the shore
sharing my wine
Now all the three of us are dancing
In gay abandon.
Slipping through the dance
solitariness has left and gone off
quite a distance.
The fears of our lives ceased to be
Till dawn we celebrated the Moon
and gave him a warm send-off
We are not sad anymore
Nor the moon.
Now it is dawn wholesome.


என் அறை பிளந்து கடல் வருகிறது
கூரை அகன்று வானம் தெரிகிறது
நிலவின் கீழ் கடற்கரையில்
என் சுவடுகள்
தூரத்தில் ஒருவன் தன் வாழ்வைத் தேடி வலை விரித்திருக்கிறான்
கையில் மதுக்குப்பியுடன்
போதையில் தனித்த இரவைப் பற்றிய பாடலை இசைக்கிறேன்
நிலவும் என்னுடன் சேர்ந்துகொள்கிறது
நீளும் ஒவ்வொரு இரவின் சோகங்கள் பற்றி பாடல்கள் இயற்றுகிறேன்
செவி மடுக்கும் நிலவும் லேசாய் கலங்கியிருக்கும்
கரை திரும்பும் மீனவன் என் மதுவைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள இப்போது மூவரும்
நடனத்திலிருக்கிறோம்
நடங்களின் வழியே தனிமை வெளியேறி வெகுதூரம் போய்விட்டது
எங்களின் வாழ்வு பயங்கள் தொலைந்துபோயின
விடியும் வரை கொண்டாடி நிலவை அனுப்பி வைத்தோம்
நாங்களும் கலங்கவில்லை
நிலவும் கலங்கவில்லை
இப்போது நன்கு விடிந்துவிட்டது.

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE