A POEM BY
THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
the Ocean….
That something related to someone
you would dump on my self
as silence intense…
the reliefs of the common man
returning from voyage
would resurrect
the depleted love on god
Of an instrument that can’t play
the loneliness of the night-singer
you are the strings…..
Lusts for water
amidst tongues of flames;
The still alive stories of
Land-retrieval.
With the hopes pinned on
With the hopes pinned on
a page gone past
Pages innumerable
yet unread.
Words _
The ocean.
Thirugnanasampanthan Lalithakopan
சொற்கள்
பெருங்கடல் ....
யாரின் மீதோவான
ஏதோவொன்றை
என் மீதே திணித்து போவாய்
பெரும் மௌனமென .....
யாத்திரை மீளும்
சாமான்யனின்
ஆறுதல்கள்
கடவுளின் மீதான
தீர்ந்து போன காதலை
மீள உயிர்ப்பிக்கும் ....
இரவுப்பாடகனின்
அந்தரிப்பினை
மீட்ட முடியாத
வாத்தியமொன்றின்
நரம்புகள் நீ ......
தீயின் தீராத
நாவுகளிடையே
நீர் குறித்தான
வேட்கைகள்;
இன்னமும் வாழும்
நிலமீட்பின்
கதையாடல்கள் .....
கடந்து போன
ஒரு பக்கத்தின்
மீதான நம்பிக்கைகளுடன்
இன்னும் புரட்டப்படாத
கணக்கற்ற பக்கங்கள் .....
சொற்கள்
பெரும்கடல் ....
-லலித்தா -
— -லலித்தா -
No comments:
Post a Comment