INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, September 1, 2020

NUHA'S POEMS(2)

 A POEM BY 

NUHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THEE, HIDING IN THE WAVES

With the tiny salt-particles

sprouted in the stings of
the crab called ‘Seppu nandu’
piercing through the wet sand and going out
mating again as the word implied
of the dream-sentence
and in harmonious intimacy
Poem for me is chiselled
and tries to smile
without the First Person I.

Sitting with hands entwined over the legs
in the extremely magnificent rim
of the eyes looking intently above
magical music with scarlet flourish and splendour
finely blended
as cluster of butterflies
flutter and turn alive.
In the eyelids closed weighing heavy
scenes flanked by elation and abstraction
seep as salt-heaps

The waves that caress the feet so soft so cool
and go away
bestow the ashes of blazing words;
stealthily leave behind the burnt marks of breaths exhaled.
The challenge of fire glowing in the waves is immense
The deadly divine venom _
When the sediment of ash it had scalded
frothing attempts to speak to me
the sprouting red with cheeks ruptured
is not of shyness for sure.


அலைகளில் பதுங்கியிருக்கும் தீ
______________________________________
ஈரமணலில் துளைத்து வெளியேறும்
செப்பு நண்டின் கொடுக்குகளில்
பூத்திருக்கும் உப்புக் குருணல்களால்
கனவு வாக்கியத்தின் தொக்கி நிற்கும்
சொல்லாக மீண்டும் முயங்கி அணுக்கமாய்
எனக்கான கவிதை இழைக்கப்படுகிறது
நான் தோன்றா எழுவாயாய்
புன்னகைக்க முயல்கிறது
கால்களை கைகளால் கோர்த்தபடி அமர்ந்து
மேற்றிசையில் வியாபித்த
கண்களின் அதியுன்னத எல்லையில்
செம்மையும் மங்களமும் குழைத்த மாய இசை
வண்ணத்துப்பூச்சிக் கூட்டமாய்
படபடத்து உயிர்ப்பாகிறது
பாரமாய் மூடிய இமைகளில் உவப்புக்கும் அரூபத்துக்குமிடையிலான காட்சிகள்
உப்புக்குவியலாய் கசிகின்றன
மென்மையும் குளுமையுமாய் பாதங்களை
தீண்டிவிலகிச் செல்லும் அலைகள் எங்கோ
கருகிய சொற்களின் சாம்பலை சமர்ப்பிக்கின்றன
வெளியேறிய மூச்சுக்காற்றுகளின் வெம்மையான பதிவுகளை ரகசியமாய் விட்டுச் செல்கின்றன
அலைகளில் கனன்றுகொண்டிருக்கும் தீயின் சவால் அபரிமிதமானது
ஆலகால விஷம்
அது பொசுக்கிய சாம்பல் படிவுகள் நுரைத்து என்னிடம் பேச விளைகையில்
கன்னங்கள் வெடித்து முளைக்கும் செம்மை
கண்டிப்பாக நாணத்தால் அல்ல
நுஹா


(2)


Amidst the whirl and swirl of the waterfalls do I collect
words mine

Sounds as the infinity of the grand chain
attempts to tighten further
the knots of opportunities

Divergence is peace magnificent
the resonating sound of uniqueness
is capable of offering tranquility.

If exclusivity is born of digression
giving it a push
then hesitation is hazardous.

The yellow bird being a beacon light
in the dense blue darkness
that drowns as route alternate
carves its radiance in the hillock
and straightens.

In the history of self-confidence
being drawn in the windscape
Sounds are golden stairs born of fire
_ so it is firmly declared.

Wading through the
cool haze of early morn
are walking
I and I.


அருவியின் சுழிப்பினூடே எனக்கான சொற்களை
சேமித்துக்கொள்கிறேன்
பேரிழையின் முடிவிலியென சப்தங்கள் சந்தர்ப்பங்களின்
முடிச்சுகளை இன்னும் இறுக்க முனைகின்றன
விலகல் மகத்தான அமைதி
தனித்துவத்தின் பேரிரைச்சல் அமைதியை நல்க வல்லது
தனித்துவம் விலகலின் உதைப்பில் உந்தப்படுகிறதெனில்
தயக்கம் ஆபத்தானது
மாற்றுவழியென மூழ்கடிக்கும் அடர்நீல இருளில்
ஒளியூட்டும் மஞ்சள் பறவை
தன் பிரகாசத்தை குன்றில் பதித்து நிமிர்கிறது
காற்றுவெளியில் வரையப்படும்
தன்னம்பிக்கையின் வரலாற்றில்
சப்தங்கள் தீயில் உயிர்த்த தங்கப் படிக்கட்டுகள் என
அழுத்தமாய் மொழியப்படுகிறது
அதிகாலை குளிர்ந்த புகையூடே நிதானமாய்
நடக்கிறோம்
நானும் நானும்

நுஹா

 — 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE