INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

RIYAZ QURANA'S POEM

 A POEM BY 

RIYAZ QURANA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


ADAM’S SNAKE

The evening opens the lone door it has.

It would be good if a bird enters there,
I muse.

At the same time
except relishing its sight
for no other reason
I think of the bird there.

As the tree roaring with thousands of tongues
I view the leaves.

At this juncture, through the branches
moon should surface
Isn’t that what we expect

Or, have been taught to anticipate

That too happened

Now
inside my thought
the sky expands.

Enjoying the sight of the sky outside
I create one within my thought.

On the way a snake intervenes.
It wants to swim up above.

I threw it above.
It began floating through the clouds.

Can’t decide
when it would alight.

That the moon tells the snake
the reason for life _
I want not to continue
with such a figment of imagination

Thought is indeed very ancient
There snakes are dangling

with cloud turning into burrow
the moon gets inside.

The snake waiting at the entrance
the activities of our moon
are contained.

Yesterday I saw for the first time
After that,

A massive lawn upon the sea.
There

hauling water from the sea
the lawn drinks.

Thus I diverted the thought.
There also I saw a snake.

From Iime immemorial
Thinking has been
finding the snake.

Yes, imagination is
a giant snake poisonous
Inside me too
it has it's hole
so integral.

Riyas Qurana

ஆதாமின் பாம்பு
...........................
தன்னிடமிருக்கும் ஒரேயொரு கதவை
திறக்கிறது மாலைப் பொழுது
அங்கே ஒரு பட்சி நுழைந்தால்
நல்லதென நினைக்கிறேன்.
அதே நேரம், ரசிப்பதற்காகவன்றி
வேறெதற்காகவும்
பட்சியை அங்கு நினைப்பதில்லை.
பல்லாயிரம் நாக்குகளால்
மரம் சப்தமிடுவதாக
இலைகளைப் பார்க்கிறேன்.
இந்நிலையில், கிளைகளினுாடாக
நிலவு உயர வேண்டும்.
அப்படித்தானே எதிர்பார்க்கிறோம்.
அல்லது, சொல்லித்தரப்பட்டிருக்கிறோம்.
அதுவும் நடந்தது.
இப்போது சிந்தனைக்குள்
வானம் விரிகிறது.
வெளியே இருக்கும் வானத்தை
ரசித்தபடி
சிந்தனைக்குள் ஒன்றை
தயாரிக்கிறேன்.
வழியில் ஒரு பாம்பு குறுக்கிடுகிறது.
உயரத்தில் நீந்த விரும்புகிறது.
உயர எறிந்தேன்.
மேகங்களிடையே நீந்தத் தொடங்கியது
எப்போது கீழிறங்கும் என்பதை
முடிவெடுக்க முடியாது
வாழ்வதற்கான காரணத்தை
நிலவு, பாம்பிடம் கூறுவதாக
ஒரு கற்பனையிலிருந்து
தொடர விரும்பவில்லை.
சிந்தனை மிகப் பழமையானது
அங்கே, பாம்புகள் தொங்குகின்றன.
மேகம் பொந்தாக மாற
உள்ளே நிலவு நுழைந்துவிடுகிறது.
வாயிலில் பாம்பு காத்திருக்க
நமது நிலவின் நடவடிக்கைகள்
முடங்கியுள்ளன.

நேற்று முதன்முதலாக பார்த்தேன்
அதன்பின்,
கடலின்மீது ஒரு பெரிய புல்வெளி
அங்கே ஒருபோதும் மழையில்லை
கடலில் நீரள்ளி
புல்வெளி அருந்துகிறது.
இப்படி சிந்தனையை
திசைதிருப்பினேன்.
அங்கும் அந்தப் பாம்பைக் கண்டேன்.
ஆதி தொடங்கி இன்றுவரை
சிந்திப்பது என்பது
பாம்பைக் கண்டுபிடிப்பதுதான்.
ஆமாம், கற்பனை என்பது
ராட்சத விஷப்பாம்பு.
எனக்குள்ளும் அது
புற்றுவைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE