INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 8, 2023

SENDHOORAM JAGADEESH

 ……………………………………………………………………………………

A POEM BY
SENDHOORAM JAGADEESH
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MOON GONE


Science has scaled the Moon
Henceforth Chandhamaamaas would be lost
Where would all those
moon-faced beloveds go
which moon
the lyricists would sing
from now on
Our brothers and sisters who wait to see
the sacred crescent-moon day – how
and when would they declare the holy day now
Which moon mother dear can show to her child
to have the food swallowed?
‘Moon should remain where it is
for all these epics to flourish’
_ Mused the kingly poet Kannadasan
Will these epics lose their golden hue
In the days to ensue?
They would construct houses in the moon
Demarcate plots and sell, soon
Destroying the forests in the earth as a whole
they would search for it in the moon’s soil.
Will there be poverty in Moon also?
Castes, religions and dirty politics might settle there
Are we to hide somewhere
The moon reflecting in Basho’s pond-water?
Science knows not poetics
just as it is ignorant of spirituality.
For the eyes that always dwell in poetry
Moon henceforth is well beyond reach
Will Poornimas and Buddhas
be lost always
Will there just be remnants of Science
offered by New Moons
and darkness absolute
An appeal to Chandrayaan
Please retrieve our moon
that has gone missing.
Let Nilaave Vaa of our dear SPB
go on .......

*The Old Pond By Matsuo Bashō

Old pond...
a frog jumps in
water's sound
*Matsuo Bashō, the poet of this haiku, was a famous poet of the Edo period in Japan. He is recognized as the greatest master of haiku or hokku. In ‘The Old Pond,’ also known as ‘The Ancient Pond,’ Bashō plays with the sound of the frog leaping in the old pond and imagery of that ancient place.
** Poornima – Full Moon
*** SPB - Famous Singer


• நிலாவைக் காணவில்லை
நிலவைத் தொட்டு விட்டது அறிவியல்
இனி சந்தாமாமாக்கள் காணாமல் போய் விடுவார்கள்
நிலா போன்ற முகம் கொண்ட காதலிகள் எங்கே போவார்கள்
பாடலாசிரியர்கள் இனி எந்த நிலவைப் பாடுவார்கள்
பிறை நிலா பார்க்கும் சகோதர பந்தங்கள்
இனி எப்போது புனித நாளை அறிவிக்கப் போகிறார்கள்?
எந்த நிலாவை் காட்டிஇனி தாய் தன் குழந்தைக்கு சோறூட்டுவாள்?
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான் இத்தனை காவியம் உண்டு
என்றார் கவியரசர் கண்ணதாசன்
இந்தக் காவியங்களின் நிறம் இனி பொன்னிறம் இழக்குமா?
நிலவில் வீடு கட்டுவார்கள், பிளாட் போட்டு விற்பனை செய்வார்கள்
பூமியில் உள்ள காடுகளை அழித்து நிலவின் வனம் தேடுவார்கள்
நிலவிலும் வறுமை இருக்குமா?
சாதி மதங்களும் அரசியல் அழுக்கும் குடியேறலாம்
பாஷோவின் குளத்து நீரில் பிரதிபலிக்கும் நிலவை
எங்கேயாவது ஒளித்து வைப்போமா?
விஞ்ஞானத்துக்கு ஆன்மீகம் தெரியாதது போலவே
கவித்துவமும் தெரியாது.
கவிதையிலேயே வாழும் கண்களுக்கு நிலவு இனி எட்டாத தூரம்தான்.
பூர்ணிமைகளும்
புத்தர்களும் இனி காணாமல் போய்விடுவார்களோ?
அமாவாசைகளும் ஆரிருளும் தரும் அறிவியல்தான் எஞசியிருக்குமா என்ன?
சந்திரயானுக்கு ஒரு கோரிக்கை
காணாமல் போன எங்கள் நிலாவை மீட்டுக் கொண்டு வா
நிலாவே வா என்று எஸ்.பி.பி பாடிக் கொண்டிருக்கட்டும்
செந்தூரம் ஜெகதீஷ்
27.8.23

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE