INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

INSIGHT - AUGUST 2021

 



INSIGHT AUGUST 2021

 






PAADHASAARI VISHWANATHAN[TWO POEMS]

  TWO POEMS BY

PAADHASAARI VISHWANATHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


[1]

At home I would arrange everything in order
My better half would leave them all
lying helter-skelter.
At the doorway she will not leave the footwear in pair.
One slipper would lie looking northward;
The nose of the other would lie turning southward
As reason she would say
only then we would have our sharp focus
on the things concerned;
that insects would always crouch
in well-organized rows and
remain unseen if everything is
spic and span.
Am I aligning the fragments of my heart
outwardly!
For me who is a cosmic speck
pests, insects make no difference!
Terribly agitated on seeing a cockroach
upon being asked to thrash it with a broomstick
I would hold it in my palm and
turning it face upward
would kiss it lovingly
and instantly run outside
and leave it there!

Paadhasaari Vishwanathan

வீட்டில் பொருட்களை சீராக அடுக்கி வைப்பேன்.
வீட்டம்மா கோணல் கோணலாக , பப்பரப்பே என
சிதறலாக வைப்பார்.
வாசலில் செருப்பை ஜோடியாக வைக்க மாட்டார்.
ஒரு செருப்பின் மூக்கு வடக்கு பார்த்திருக்கும்..
இன்னொன்றின் மூக்கு தெற்கு பார்த்துக் கிடக்கும் .
காரணமாக அவர் சொல்லுவார் :
அப்போது தான் பார்க்கையில்
பொருள் மீது கூரிய கவனம் படியும் .
பூச்சிபொட்டெல்லாம் சீரான அடுக்கலில் தான்
இடுக்கலாகப் பதுங்கி யிருக்கும்..
ஒழுங்காக நேராக இருந்தால் தெரியாது.
நான் மனதின் சிதறல்களை
புறத்தில் அடுக்கிச் சீராக்குகிறேனோ !
பிரபஞ்சத் தூசி யான எனக்கு பூச்சியாவது
பொட்டாவது !
கரப்பானைக் கண்டு பதறிக் கதறி
அதை 'வெளக்கு மாத்தால் ' அடிக்கச் சொன்னால் ,
நான் கைகளில் ஏந்தி , மல்லாத்தி முத்தமிட்டு
நொடியில் ஒடி வெளியில் எறிவேன் !


[2]
Running fast in a floating walk
Leaving the hall and climbing down the doorway stairs
went away a wonderful spider
of beauty exemplary.
At the wall-nook you have built
a beautiful house.
She who landed in station and reached home
as usual cast it off as cobweb
What to do, my friend
The house is not mine
In my house, why, even in this world
I am but just a wayfarer.
While climbing down and leaving my house
Ho, you could’ve have looked back
and glanced at me one last time.

Paadhasaari Vishwanathan
மிதந்தொரு நடையில் விரைந்தோடி
வீட்டின் ஹால் நீங்கி வாசல் படியிறங்கிப் போனது ஒரு
பேரழகுச் சிலந்தி..
சுவர் முடுக்கில் நீ கட்டியிருந்தாய்
ஒரு அழகிய இல்லம்.
ஊர்திரும்பி வீடேகியவள்
வழக்கம் போல் அதை ஒட்டடை எனத் தட்டி எறிந்தாள்..
என்ன செய்ய நண்பா
வீடு என்னுடையதல்ல..
நானிருக்கும் வீட்டில் , ஏனிந்த உலகிலும் கூட
நானொரு வழிப்போக்கன் தான்..
வீடிறங்கிப் போகையில் ஒருமுறை நீ என்னைத் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றிருக்கலாம் ..

 


MISBAH UL HAQ[2 POEMS]

TWO POEMS BY
MISBAH UL HAQ
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. WARTIME ISOLATION

In wartime isolation
I was searching for the point of fear
I have heard the fingers buried in the
shudder of muscles
speaking of how they shroud themselves with fear.
That the primal night of the wizard
having lost the power of alchemy
is still stretching all the while trembling
a note you have concealed in a tale of
the bygone era.
In wartime isolation
silences don’t send chill down our spine.
Black-soaked darkness ceases to terrorize us
Amidst the wails and screams heard afar
Fear is still lurking somewhere
Shivers and shudders too.
In wartime isolation
the weeping prayer slowly seeping
this aloneness keeps telling.

போர்க்காலத்தின் தனிமையொன்றில் –
போர்க்காலத்தின் தனிமையொன்றில்
பயத்தின் புள்ளியை தேடிகொண்டிருந்தேன்…
பயம் தன்னை உடுத்திக்கொள்ளும் மாயை பற்றி
தசைகளின் நடுக்கத்தில் புதைந்த விரல்கள் சொல்லக் கேட்கிறேன்.
ரசவாதம் தொலைத்த வித்தைக்காரனின் ஆதி இரவு
இன்னும் நடுக்கத்தில் நீள்வதாய் ஒரு குறிப்பை
பழங்கால கதையொன்றில் புதைத்து வைத்திருக்கிறாய்…
போர்க்காலத்தின் தனிமையொன்றில்
நிசப்தங்கள் நம்மை பயமுறுத்துவதில்லை…
கருமை அடர்ந்த இருள் நம்மை பயமுறுத்துவதில்லை…
தூரத்தில் எழும் ஓலங்களுக்கு நடுவில்
இன்னும் பயம் எங்கோ மறைந்திருக்கிறது…
தூரத்தில் எழும் குழந்தையின் கதறலில்
இன்னும் நடுக்கம் எங்கோ மறைந்திருக்கிறது…
போர்க்காலத்தின் தனிமையொன்றில்
ஒரு விசும்பும் பிரார்த்தனை மெல்ல கசிவதை
இந்த தனிமை சொல்லிக்கொண்டிருக்கிறது.

மிஸ்பாஹுல் ஹக்


[2]

Only he who struggles with all his might to spring up unleashed
is able to run again Or at least move a little.
Life doesn’t offer one and all
All things in abundance
Whoever wants whatever
that make him feel fulfilled
when he goes seeking for it and strives to get it
He accesses it
Or the charm of it coming to him on its own
happens.
Have you seen the eyes of those who are afraid to face Life?
They would surely be having reasons for all their inabilities
When they fail to get hold of some reason they point at Gods
conveniently
They would screech
for things beyond their reach
he who is on the move always
with well entrenched prayers leading the way
would have gone past the Divine Life Force
which is the very source of cosmos
and would have arrived at an altogether impossible
destination
Admiring all things exquisitely magical
happening around him
he would keep them a secret for all time
to come.

Misbah Ul Haq

திமிறி எழுமுனைகிறவனால் மட்டுமே மீண்டும் ஓட முடிகிறது,
அல்லது கொஞ்சமேனும் நகரமுடிகிறது...
வாழ்க்கை அப்படி எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாரிக்கொடுத்துவிடுவதில்லை..
எவனுக்கு எது தேவையோ, எது திருப்தியோ அதை நாடி தேடி முயலும்போது அதை அவன் அடைந்துக்கொள்கிறான்,
அல்லது அதுவாக அவனை வந்துசேரும் மாயம் நடந்துவிடுகிறது..
வாழ்வைப் பார்த்து அஞ்சுபவர்கள் கண்களை தரிசித்திருக்கிறாயா..
எல்லா இயலாமைகளுக்கும் அவர்களிடம் காரணங்கள் இருக்கும்..
காரணங்கள் இல்லாதபோது கடவுள்களை கைகாட்டுவார்கள்..
தனக்கு கிடைக்காத எல்லாவற்றிற்கும் கூச்சலிடுவார்கள்..
ஊறிப்போன பிரார்த்தனைகளின் மீது, இயங்கிக் கொண்டே இருப்பவன், முயன்றுக் கொண்டே இருப்பவன்
பிரபஞ்ச சக்தியின் மூலம்என்கிற இறை ஜீவ சக்தியை கடந்தே ஒரு அசாத்தியமான முடிவிடத்தை அடைந்திருப்பான்..
அவனை சூழ்ந்து நடக்கும் மாயாஜாலங்களை அவன் வியந்து பின் ரகசிமாகவே வைத்திருப்பான்..

THENMOZHI DAS[FIVE POEMS]

  FIVE POEMS BY

THENMOZHI DAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. JOY IS BUT THE DANCE ON DISTRESS
The wild flower has no complaints against the
Mantis bug
dancing with its hand outstretched dreadfully
The incense stick swirls as the very fragrance
its body turning to ashes
Aren’t there fireworks
even after wiping out a race, a land
by betrayals and means underhand
Aren’t there enemy groups
piling up the corpses, mocking decrying
In a vast nation
doesn’t power blunt its own citizens
Many a human heart
may lose their peace and remain
anguished.
In the silence stretching, elongating
the veins of leaves too
pound in pain
Even upon the ones turned rotten
mushrooms of multi-colour
gleam as sacred chant
Upon me too sounds
the soul of Wind
Grumbling not
the Earth
endures all that it could take
for our sake.

Thenmozhi Das

மகிழ்ச்சி என்பதே துயரத்தின் மீதான நடனம்
மோசமாக கைவிரித்தாடும் மேன்டிஸ் பூச்சி மீது
ஒரு புகாரும் இல்லை காட்டுப் பூவுக்கு
உடல்புகைவதையே
வாசனையாக ஆடிச் செல்லும் ஊதுபத்தி
மகிழ்ச்சி என்பதே துயரத்தின் மீதான நடனம்
ஒரு இனத்தை ஒரு தேசத்தை
வஞ்சகமாக வீழ்த்திய பிறகும்
வான வேடிக்கை இருப்பதில்லையா
இறந்த சடலங்களைக் குவித்துப் பரிகசிக்கும் பகை குழுக்கள் இருப்பதில்லையா
அகண்ட தேசத்தில் அதிகாரம்
சொந்த மக்களை மழுங்கடிப்பதில்லையா
அமைதியற்று மனித மனங்கள் அவதியுறலாம்
நீட்சிமிக்க மெளனத்தில்
இலை நரம்புகளும் துடிக்கின்றன
மக்கிப் போனவை மீதும் பலநிறமிக்க காளான்கள்
மந்திரச் சொற்களாய் ஒளிருகின்றன
எதன் மீதும் குரல் எழுப்புகிறது காற்றின் ஆன்மா
எந்தப் புகாரும் இன்றி
நிலம்
யாவற்றையும் யாவருக்காகவும் சகிக்கிறது

2. EYES OF DRAGONFLIES
Two seas
Twin cosmos
Two gallbladders
Glassy boobs
Pebbles that can see
Wandering wisdoms of painting
Tears unshed
Crystal rotating
The luscious radiance of waterbeds
Buddha’s soul
prior to attaining enlightenment.
The dreams of those visionaries
before Christ’s birth
The core chants of Freedom Absolute.
The traveller’s medulla
Light’s sieve
Field of Music
The ductless glands that fly in anguish
Plants’ Moons _
The eyes of dragonflies.


Thenmozhi Das
.
தட்டானின் கண்கள்
இரண்டு கடல்
இரண்டு பிரபஞ்சம்
இரண்டு பித்தப்பை
கண்ணாடி ஸ்தனங்கள்
பார்வை கொண்ட கூழாங்கற்கள்
அலையும் ஓவிய ஞானங்கள்
உதிராக் கண்ணீர்
உருளும் ஸ்படிகம்
நீர் நிலைகளின் காம ஒளிகள்
ஞானம் பெருவதற்கு முன்னிருந்த
புத்தனின் ஆன்மா
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிருந்த
தீர்க்கதரிசிகளின் கனவுகள்
சுத்த சுதந்திரத்தின் மூல மந்திரங்கள்
யாத்ரீகனின் பின் மூளை
ஒளியின் ஜல்லடை
இசையின் இயங்கு தளம்
தவித்துப் பறக்கும் நாளமில்லா சுரப்பிகள்
தாவரங்களின் நிலாக்கள்
தட்டாம் பூச்சியின் கண்கள்
Composed by Thenmozhi Das
14.4.2016
9.10 pm
3. INTO THE DARK WILDERNESS
My hill station lingers in me as
Teardrops.
The Tea Factory afloat on a waterbed
remains as the ship with the scent of smoke missing.
Though the rain poured year after year
have failed to erase
the resounding lines of those Tea Estate labourers
fighting for their rights
their emotions keep straying in the wilderness
sans light
searching for a way out.
Mostly
all those flowers sprouting in bloody red
must have bloomed out of the branches
Of those roots that had sucked in the blood
oozing out after the leeches had their happy share
It is there that the song of the guardian angel
wanders as the wind
While bush abound all around the Church
and sparrows on the pedestals thrive
the music-loving ears
crouching in the compound walls
flap their lobes
as fish-scales.
In those places where the Lily flowers have strolled
searching for the Crown of Thorn
the joys of
receiving the First Holy Communion in White
stand there as blooming trees.
The holy Paska festival taking place in candle light
counting the stars
must have turned frozen with that winter season.
The hill-road
where the love-filled kind body of Rebecca aunt
strolled
Lies there as broken string of Guitar .
Oh, my dear mountain-trail
Hey tomb, keeping Esmi’s memories evergreen
Oh the sounds myriad of days bygone
Oh the eyes of Tea-seeds!
My hill station lingers in me
as teardrops.
Thenmozhi Das

.•
ஒளியறியா காட்டுக்குள்
என் மலை வாசஸ்தலம் எனக்குள்
கண்ணீர்த் துளிகளாய் இருக்கிறது
நீர்த்தேக்கத்தின் மேல் மிதக்கும்
தேயிலைத் தொழிற்சாலை
புகைவாசமிழந்த கப்பலாய் நிற்கிறது
தேயிலைத் தொழிலாளர்களின்
உரிமைப் போராட்ட வரிகளை
ஆண்டாண்டு காலமாய் பெய்த மழை அழிக்காத போதும் அவர்களின் உணர்வுகள்
ஒளியறியாக் காட்டுக்குள்
பாதை தேடித் திரிகின்றன
அநேகமாய்
இரத்தச் சிவப்பில் பூக்கும் பூக்களெல்லாம்
அட்டைகள் குடித்தபின் வழிந்த
இரத்தம் ஈர்த்த வேர்களின் கிளைகளிலிருந்துதான் பூத்திருக்கக் கூடும்
ரட்சகியின் பாடல் காற்றாய் அலைவதும் அவ்வழியில்தான்
தேவாலயத்தைச் சுற்றிலும் புதர்களும்
பீடங்களில் அடைக்கலான் குருவிகளும் வாழ்கையில்
மதில்களில் பதுங்கியிருக்கும்
இசை விரும்பும் காதுகள்
மீன்களின் செதில்கள்போல் மடல்களை அசைக்கின்றன
முள்முடி தேடி
லீலிப்பூ செண்டு தேடி அலைந்த இடங்களில்
புதுநன்மை பெற்றுக்கொண்ட
வெள்ளை தினத்தின் மகிழ்வுகள்
பூமரங்களாகி நிற்கின்றன
மெழுகுத்திரி வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் எண்ணியபடி நடந்த
பாஸ்கா பண்டிகை
அக்குளிர் காலத்தோடு உறைந்து போயிருக்கக்கூடும்
ரெபேக்கா அத்தையின் கனிந்த உடல் உலவிய மலைப் பாதை
உடைந்த கிடார் கம்பியாய் கிடக்கிறது
ஏ மலைப் பாதையே !
எஸ்மியின் நினைவுகளை மறக்காமல் வைத்திருக்கிற கல்லறையே !
வழிநெடுக மண்ணிலிருந்து உடைந்து வெளிப்படும் கடந்த காலச் சத்தங்களே !
தேயிலை விதைகளின் கண்களே !
என் மலை வாசஸ்தலம் எனக்குள் கண்ணீர் துளிகளாய் இருக்கிறது
Composed by Thenmozhi Das
2.9.2004
ஒளியறியாக் காட்டுக்குள் தொகுப்பிலிருந்து

4.LIFE IS NOTHING BUT SUBLIMATION
Some more formulae required, they say
Having seven strategies, at the least.
Like three magical chants
poetry should be, they lament.
The wisdom of the Enlightened revolves
in one point.
The delirium of a poet
can spread the world into a net.
Life is nothing but sublimation, that is it.

வாழ்வு என்பது வெறும் பதங்கமாகுதல்
````````````````````````````````````````````````````````````
இன்னும் சில சூத்திரங்கள் தேவை என்று சொல்கிறார்கள்
குறைந்த பட்சம் ஏழு தந்திரங்களாவது
மூன்று மந்திரவிதிகளை போன்றாவது
கவிதை இருக்க வேண்டும் எனப் புலம்புகிறார்கள்
ஞானியின் அறிவு ஒரிடத்தில் சுழல்கிறது
கவிஞனின் பித்து
உலகை வலையென விரிக்க வல்லது
வாழ்வு என்பது வெறும் பதங்கமாகுதல் அவ்வளவே
Composed by Thenmozhi Das
2.10.2016
sublimation
the act of expressing strong emotions or using energy by doing an activity or creating something, or the activity or work itself:
(*Cambridge Dictionary)
Description(from Google)
பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை, திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் செல்வதாகும்.
Sublimation is the transition of a substance directly from the solid to the gas state, without passing through the liquid state.

5. MIRROR
By breaking the looking glass into pieces
you would see
the cross-sectional appearance of water
The heart flown
of reflections.
The eyes born hungry
The puzzle of topsy-turvy philosophy
White bloods of razor-sharps
Words sans scars
Mercurial kinship
Rain growing as creeper
Chips of truths unpretentious
Angles of impeccable directions
Propriety of parting
Inner turbulence of emotions
Deathless distresses
People multi-faced
Sky’s shivering legs
By turning the mirror to the other side
without breaking it
you would cradle
quietude.
A droplet of tear – flower.
By not looking into the mirror
You would fall in love
with World Entire.
Thenmozhi Das

கண்ணாடி
கண்ணாடியை உடைப்பதன் மூலம்
தண்ணீரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை
பிம்பங்களின் பறந்த மனதை
பசித்துப் பிறக்கும் கண்களை
தலைகீழ் தத்துவத்தின் புதிரை
கூர்மைகளின் வெண்குருதிகளை
வடுக்களற்ற வார்த்தைகளை
பாதரச உறவை
மழை கொடியாய் வளர்வதை
பாசாங்கற்ற உண்மைகளின் துருவல்களை
கச்சிதமான திசைகளின் கோணங்களை
பிரிவின் பரிசுத்தத்தை
உணர்வுகளின் உள்கொதிப்பை
மரணமற்ற துயர்களை
பன்முகப் பித்துக் கொண்ட மனிதர்களை
பயப்படும் வானத்தின் கால்களை
காண்பீர்கள்
கண்ணாடியை உடைக்காமல் திருப்பி வைப்பதன் மூலம்
அமைதியை தாலாட்டுவீர்கள்
ஒரு சொட்டு கண்ணீர் - மலர்
கண்ணாடியை பார்க்காமல் இருப்பதன் மூலம்
உலகையே காதலிப்பீர்கள்
Composed by Thenmozhi Das
23.8.2021
9.32 ,pm


INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE