INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Showing posts with label YAVANIKA SRIRAM. Show all posts
Showing posts with label YAVANIKA SRIRAM. Show all posts

Tuesday, December 31, 2024

YAVANIKA SRIRAM

A POEM BY
YAVANIKA SRIRAM
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



BANANA PEEL

I too am waiting for those who laugh too much at my expense.
More than the mockery of God they tell something so funny that make us clap and laugh to our heart’s content.
By and large those who make others laugh would be in sorrow, though an age-old belief prevails
So be it! Animals with their funny acrobatics make us happy
And we begin to laugh.
Everything is but the purposes of fellow-humans wrongly planned
Ambitions or the slips and tumblings of the bodies on the floor
For all and more even if it takes place on us when some such thing takes place
We invariably begin to laugh. Some would say that our life is for all to laugh at our expense.
In those days stamping on the banana peel and slipping down _ Ho, what a classic comedy it was perceived to be then?
Now we slip and fall here there everywhere and become a laughing stock.
These days even when waterfalls are flooded and dragging people into them we begin to laugh.
If the women’s attires moved off in anger
The booster sending a satellite into the space returned to the launching site
If rain pours in the desert
If a stage-speaker spits on our face
We begin to laugh.
That’s why we have to ponder over. God has turned this world into something to laugh at. See the moustache of Dali! See that sideways glance!
Contemplating on this absurdity and laughing to his heart’s content Kafka died young. His father was a fool of an age gone by
In truth, those who make fun of
Are those who cause laughter.
In Nature there is a gas to cause laughter. I have seen old men gathering and laughing in the beach. Laughing will increase our life-span!
Suffice to have you zip unsealed and come out thus
Or, even if you remember your mother in a public place, it would be a cause to laugh for sure.
And, I recommend the short stories ‘_ The woman who is falling down) and - ‘Someone is hitting me with an umbrella’)
Thanks
To
Shankara Rama Subramanian
..........................................................................................................................................

வாழைப்பழத் தோல்

என்னை மிகவும் கேலி செய்பவர்களுக்காக நானும்தான் காத்திருக்கிறேன்
படைத்த கடவுளின் கேலியை விட அவர்கள் மிகச் சிறந்த வகையில் கைகொட்டிச் சிரிக்கும்படி ஒன்றைச் சொல்லிவிடுகிறார்கள்
பொதுவாகச் சிரிக்க வைப்பவர்கள் துன்பத்தில் தான் இருப்பார்கள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது
இருக்கட்டும்!சிறு விலங்குகள் வேடிக்கை காட்டி நம்மை மகிழ்விக்கின்றன
நாம் சிரிக்க தொடங்கி விடுகிறோம்
அனைத்தும் தவறுதலாக திட்டமிட்ட மனிதர்கள் நோக்கங்கள் லட்சியங்கள் அல்லது தரை மீதான உடல்களின் சறுக்கலகள் அனைத்திற்கும் அப்படியான நிலைகளில் நம் மீதேயாயினும் அப்படியான ஒன்றுநிகழும் போது சிரிக்கத் துவங்கி விட்டோம்.
சிலர் வாழ்க்கைச் சிரிப்பாய் சிரிக்கிறது என்பார்கள்.
அந்த காலத்தில் வாழைப்பழ தோல் வழுக்கி மனிதர்கள் தரை விழுந்ததெல்லாம் மிகப்பெரிய நகைச்சுவை அல்லவா?
இப்போது நாம் எங்கெங்கெல்லாம் தவறி விழுந்து நகைச்சுவை ஆகிறோம்.
இப்போதெல்லாம் அருவிகளில் அதிகம் வெள்ளம் வந்து மனிதர்களை இழுத்து போய் விட்டாலும் கூட நாம் சிரிக்கத் தொடங்கி விட்டோம் .
கோபத்தில் பெண்களின் ஆடைகள் விலகினாலும்
ஒரு சாட்டிலைட்டை விண் வெளிக்குள் செலுத்தி விட்ட பூஸ்டர் ஏவு தளத்துக்கே திரும்பினாலும்
பாலைவனங்களில் மழை பொழிந்தாலும்
ஒரு மேடைப்பேச்சாளர் நம் முகத்தில் காரித்துப்பினாலும்
நாம் சிரிக்கத் தொடங்கி விடுகிறோம்.
அதனால்தான் யோசிக்க வேண்டியதிருக்கிறது!
கடவுள் இந்த உலகத்தை ஒரு கேலிப் பொருளைப் போலவே உண்டாக்கி விட்டார்.
டாலியின் மீசையைப் பாருங்கள்! அந்தக் கண்களின் பக்கவாட்டுப் பார்வையை!
காஃப்கா இந்த அபத்தத்தை நினைத்துத் சிரித்து சிரித்தே இளம் வயதில் இறந்து விட்டான்.
அவனது தந்தை ஒரு வரலாற்றின் முட்டாள்.
உண்மையில் கேலி செய்பவர்கள்
சிரிப்பை உண்டாக்குபவர்கள்
இயற்கையில் சிரிப்பை மூட்டுவதற்கென ஒரு வாயு இருக்கிறது.
கடற்கரையில் வயதான கிழவர்கள் ஒன்று கூடி சிரிப்பதை ப் பார்த்திருக்கிறேன்.
சிரித்தால் ஆயுள் கூடும்!
நீங்கள் ஒரு ஜிப்பை மூடாமல் வெளியில் வந்து விட்டாலே போதும்
அல்லது பொது இடத்தில் பெற்ற தாயை நினைவு கூர்ந்தாலும் கூட அது சிரிப்பை உண்டாக்குவது தான்.
இந்த இடத்தில் ’கீழே விழுந்துகொண்டிருக்கும் பெண்’ அல்லது ’என்னை ஒருவன் குடையால் அடித்துக் கொண்டிருக்கிறான்’ என்கிற சிறுகதைகளைப் பரிந்துரை க்கிறேன்.

நன்றி!
ஷங்கர் ராமசுப்பிரமணியனுக்கு
//*கீழே விழுந்து கொண்டிருக்கும் பெண்" "என்னை ஒருவன் குடையால் அடித்துக் கொண்டிருக்கிறான்" இரண்டும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அபத்தச் சிறுகதைகள்//

Wednesday, October 6, 2021

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Too bad I remained totally unaware; extremely sorry.
(Pause; build up)
Somehow the cuffs had clasped round the legs
The travelers return home
Vagabonds blabber
He who postponed time
would turn the Place into a memory-lapse
Dreams never have the prospect of coming true
Moreover it has no beginning nor end.
When I come to know of startling news
I stand lost and blinking.
Can entrust just this much _
to the fruit left on earth by the tree
to be as suits its whims and fancies
to the waves to roar ever and again
for going without word equivalent
Further the wearisome kinship with the too long a role
being played by god in the chain of life – that also.
Searching for those who declare their love for us
becomes
an all-time struggle.
Sea is but a pond filled with rain water
It is not some kind of riot like taking water for our field
from a pool
The scale sufficient to scorn Birth .
Siddhartha is escaping; fleeing.
Silly Fool.
Yavanika Sriram
அறியாமல் இருந்துவிட்டேன் மன்னிக்கவும்
(பீடிகை)
கால்களை எப்படியோ விலங்குகள் பூட்டிக்கொண்டு விட்டன
பயணிகள் இல்லம் திரும்பி விடுகிறார்கள்
நாடோடிகள் பிதற்றுகிறார்கள்
காலத்தை ஒத்தி வைத்தவர்
இடத்தை ஞாபகப்பிசகாக்குவார்
கனவுகளுக்கு எக்காலத்திலும் நடைமுறைச்சாத்தியமில்லை
மற்றும் அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை
.
திடுக்கிட்டுப்போகும்படியான செய்திகளை அறியும் போது அலங்கமலங்க விழிக்கிறேன்
இவ்வளவிற்குத்தான் ஒப்புக்கொடுக்க முடியும்
தோன்றியதைச் செய்யும்படிக்கு
ஒரு மரம் பூமியில் கைவிடும் கனிக்கு
அந்த அலைகள் திரும்பத்திரும்பஆர்ப்பரிப்பதற்கு
அதற்கு இணையான சொல்லற்றும் போவதற்கு
மேலும் உயிர்ப்பின்னலில் கடவுளின் நீண்டகாலப் பங்கின் மீது சோம்பலுறவும்தான்
நேசிக்கிறேன் என்பவர்களைத் தேடுவது ஒருவருக்கு
வாழ்நாள்ப்பிரயத்தனமாகிவிடுகிறது
கடல் என்பது மழைநீரால் நிரம்பிய ஒரு குட்டை
ஒரு குட்டையில் இருந்து நம் வயலுக்கு நீர் எடுப்பது போன்ற கலவரம் அல்ல அது
பிறவியை உதாசீனப்படுத்த போதுமான அளவுகோல்
தப்பிப் போய்க்கொண்டிருக்கிறான் சித்தார்த்தன்
முட்டாள்.

-------------------------------------------------------------------------------

மொழிபெயர்ப்பின் விசித்திரத்தன்மை

 கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் கவிதையொன்றை என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்துப் பதிவேற்றியுள்ளேன். இன்னும் திருத்தங்கள் தேவைப்படும். அது குறித்து கமெண்ட் பகுதியில் எங்களுக்கிடையே நடந்த நட்பு ரீதியான உரையாடல் இது: லதா ராமகிருஷ்ணன்

Yavanika Sriram :Anaamikaa Rishi கவிதைக்கும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் அம்மொழி பெயர்ப்பை மீண்டும் தமிழில் கன்வர்ட் செய்யும்போது உண்டாகும் விசித்திரதன்மைக் கும் இடையே (அது வேறு என்னவோ செய்கிறது) மூன்று காலங்கள் உண்டாகிவிடுவது போல் இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

Anaamikaa Rishi : மூல கவிதைக்கு மிக நெருக்கமான மொழி பெயர்ப்புக்கு மிக முக்கியத் தேவை ஒரு தெளிவான வாசகப் பிரதி கிடைத்தல். ஒரு வாசகராக உங்கள் கவிதையில் அது எனக்குக் கிடைத்ததாகச் சொல்லவியலாது. என் போதாமையே இதற்குக் காரணம்.

அதற்காக முற்றும் புரியக் கூடிய நேரிடையான கவிதை களைத்தான் மொழி பெயர்ப்பது என்ற நிலைப்பாடு சரியல்ல. சில வார்த்தைகளின் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கவிதையில் பொருந்தி வருவதாகத் தோன்றும் போது மொழிபெயர்ப்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. (உதார ணம்: பீடிகை)

நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள், எதைப் பற்றி எழுதினீர்கள், இந்த வார்த்தையை எந்த அர்த்தத் தில் பயன்படுத்தினீர்கள் என்றெல் லாம் கவிஞரிடம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு மொழி பெயர்த்தால் மொழி பெயர்ப்பு இன்னும் நேர்த்தியாக அமையக் கூடும். ஆனால்,அது கவிஞரிடம் நிகழ்த்தப்படும் அத்துமீறலாகி விடக்கூடுமோ என்ற தயக்கமும், ஒரு கவிதைக்கு எழுத்தாளர் பிரதி ஒன்றும் (ஒன்று தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா) ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளும் உண்டுஎன்ற நவீன தமிழ்க்கவிதைப் போக்கில் பெற்ற பார்வையின் காரணமாக கவிஞரிடம் அர்த்தத்தைக் கேட்பதில் உள்ள ஒவ்வாமையுணர்வும் சேர்ந்து எனக்குக் கிடைக்கும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கிறேன்.

பல சமயங்களில் பூடகக் கவிதை பகுதியளவே அர்த்த மாகி ஆனாலும் அதில் உணரக்கிடைக்கும் ஒரு ஆழம் அதை மொழிபெயர்க்கத் தூண்டு கிறது. மேலும் மூலமொழிக்கும் இலக்குமொழிக்கும் உள்ள தனித்து வமான வாக்கிய அமைப்புகளும் விரிபொருள்களும்கூட மூல கவிதை யின் மொழிபெயர்ப்பில் நெருட லாக அமையலாம்.

நீங்கள் விரும்பினால் உங்களுடைய இந்தக் கவிதையில் நீங்கள் சொல் லியிருப்பதை சொல்ல முற்படுவதை குறிப்புணர்த்தலாக கமெண்ட் பகுதியிலோ உள்பெட்டியிலோ தெரிவிக்கலாம். அதன் மூலம் என் மொழி பெயர்ப்பின் முதல் வரைவில் செய்யும் திருத்தங்களையும் இங்கே வெளியிடலாம்.

எப்படியுமே, மூலமொழிப் பிரதியை இலக்குமொழியில் பெயர்த்த பின் அதை மீண்டும் மூலமொழியில் செய்தால் அது ஒருவித விசித்திரத் தன்மையோடுதான் இருக்கும். இது உரைநடைக்கும் பொருந்தும்! ஆனா லும், இந்த வாதத்தை சரியில்லாத மொழிபெயர்ப் புக்கு சாதகமாக்கி விடலாகாது!

லதா ராமகிருஷ்ணன்.


Thursday, May 27, 2021

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

While waiting for God
It had happened thus.
My dear, wonder at which century you had left me
I am still struggling for a lone line of Love Divine.
I embrace an egg
At the instant it breaks
In East the twilight sun
descends into the ocean.
By way of response
I place my lips upon your teary reddish eyes and quench my thirst
Along the river course the crops would ripen or in the spell of your growth
I was on its shore with a hook.
When the animals give birth to their calves
I witnessed in my lifetime
your placenta and water seeping at the slopes
and torrential downpour.
The Moon-juice that the fruity trees dropped
Along those boobs thousands of miles I go on foot
With the snowfall proving unbearable
late-night hours in your tight embrace
Unable to bear the summer a spring in your lips
Yes, there they dig out iron, here they cremate the corpses
There bridges for Paradise being constructed.
Till our jackfruits turn ripe
Till the heat of your urine subsides
When such demonic times draw closer
In truth during your pains periodical gripped by ages bygone
that had betrayed everything
My Love
atleast a lone line in my language
tasting bitter in my throat deep down
I would be writing somehow.
Yavanika Sriram
கடவுளுக்காக காத்திருந்த போது
இப்படி நிகழ்ந்து விட்டது
அன்பே எந்நூற்றாண்டில் கைவிட்டு போனாயோ
உன்னதமான ஒரு காதல் வரிக்கு இன்னும் தடுமாறுகிறேன்
ஒரு கோழி முட்டையை தழுவுகிறேன்
அது உடையும் நேரம் கிழக்கே
கடலிறங்குகிறது அந்திச் சூரியன்
பதிலாக உன் கண்ணீர் மல்கும் செவ் வரிப்படலங்களில் வாய் வைத்து தாகம் தீர்க்கிறேன்
நதியின் வழியில் கதிர்கள் முற்றும் அல்லது நீவளர்ந்துவந்த பருவத்தில்
ஒரு தூண்டிலுடன் அதன் கரையில் இருந்தேன்
மிருகங்கள் கன்றுகளை ஈனும் போது உன் பனிக்குடத்தையும் சரிவுகளில் நீர்க்கசிவையும் பெரும் அடைமழையையும் வாழ்நாளில் கண்டேன்
கனிமரங்கள் உதிர்த்த நிலவின் சாறு
அந்த முலைகளின் வழியே பல ஆயிரம் மைல்கள் என் கால்நடை
பனிதாங்காமல் உன்னுடன் ஜாமங்களின் இறுக்கம்
கோடை தாங்காமல் உன் இதழ்களில் ஒரு நீரூற்று
ஆமாம் அங்கே இரும்பைத்தோண்டி எடுக்கிறார்கள் இங்கே பிணங்களை எரியூட்டுகிறார்கள்
அங்கே சொர்க்கத்திற்கான பாலங்கள் கட்டப்படுகின்றன
நாம் பலாக்கள் கனியும் வரை
உனது சிறுநீர்சூடு தணியும் வரை
அப்பிடியான கொடுங்காலங்கள் நெருங்கும்போது
உண்மையில் அனைத்தையும் கைவிட்ட கடந்த காலங்கள் பற்றிய உன் விடாய் வலிகளின் போது அன்பே
ஒற்றை வரியேனும் எனது மொழியில் அது அடித்தொண்டையில் கசக்கும்படி எழுதித்தான் இருப்பேன்.


  • Anaamikaa Rishi
    கவிஞருக்கு நன்றி. திருத்தங்கள் தேவையெனில் தெரிவிக்கவும். நிறைய கவிதைகள் பிடித்திருந்தும் அவை மொழிபெயர்ப்புக்குப் பிடிபடுவதில்லை. இந்தக் கவிதையும் ஒருவகையில் அப்படியே. செவ்வரிப்படலம் எதைக் குறிக்கிறது. விடாய் - தாகவிடாயா மாதவிடாயா - இப்படி நிறைய புரிந்தும் புரியாமலுமான வார்த்தைகள் வரிகள் அவற்றின் இணைவுகள்... கடலை ஒலிநயத்திற்காக ஆங்கிலத்தில் ocean ஆக மாற்றினேன் - எல்லாம் நீர்மயம் என்ற தத்துவார்த்தப் பார்வையில்! புரிந்தும் புரியாமலுமாயிருந்தும் கவிதையில் புரிந்தது உண்டாக்கிய நெகிழ்வில், மொழிபெயர்ப்பு கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும்(????) பெரியமனதுக்காரத் தோழர் யவனிகா கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் கவிதையை மொழிபெயர்த்துப் பதிவேற்றிவிட் டேன்! நாளை மொழிபெயர்ப்பை மேலும் செம்மைப்படுத்த வழி பிறக்கும் என்று நம்புகிறேன்.
    3
    • Like
    • Reply
    • 2w
    • Edited
  • Yavanika Sriram
    செவ்வரிப்படலம் கண்ணின் வெண்படலம்தான் தோழி
    விடாய் தாகத்திற்கும் உதிரநாட்கள் இரண்டிற்கும் ஆனதுதான்
    மிகச்சிரமமான இக்கவிதையை மொழிபெயர்க்கத்தேர்ந்தமைக்கு எனது நன்றி
    கூடார்த்தங்கள் ஆங்காங்கே உள்ள இதை மறுபடி உங்களால் எளிதாகச் செப்பனிடமுடியும்
    வாசகங்களுக்கிடையே
    சைலன்ஸ் வந்திருந்தால் அருமைதானே
    எனக்கு ஆங்கிலத்தின் நுட்பங்கள் தெரியாது
    இந்த அளவில் உங்களுக்கு அன்பும் நன்றியும் தோழமையே

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS