INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

MANONMANI 'S POEM

 A POEM BY 

MANONMANI 


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


SHAHENSHAH


Shahenshah had a horse-cart

Even after Shahenshah’s demise

the horse-cart was there.

Even after the death of the horse

the cart was there.

When the cart would be gaining speed

Inserting the stick into the wheel

In one circular motion

he would suddenly bring it to a halt

– ga da ga da ga da druuuuuu….

By then the place of alighting would have

 arrived.

Shahenshah’s son’s name is Shahenshah

Shahenshah having no income

sold the horse for survival.

The second Shahenshah

is an auto-driver.

Buying auto

and father’s horse - both

familial ambition.

Second Shahenshah’s son’s name is also

Shahenshah.

Without pouring oil

without plying

Shahenshah is happily petting and playing.

Grandpa’s horse was

Arabian horse.

That wouldn’t eat grass at all.

Tall as camel

wouldn’t drink water.

Child Shahenshah

not laughing cries in hunger.


Manonmani Pudhuezuthu


ஷாஹென்ஷா


ஷாஹென்ஷா குதிரை வண்டி வைத்திருந்தான்

ஷாஹென்ஷா செத்த பின்னும்

குதிரை வண்டி இருந்தது

குதிரை செத்த பின்னும்

குதிரை வண்டி இருந்தது

குதிரை வேகமெடுக்கையில்

சக்கரத்தில் குச்சியை விட்டு

கடகடகட டகடகடக ர்ர்ரூ வென

ஒரு சுற்றில் வண்டியை

சட்டென நிறுத்தி விடுவான்

இறங்கும் இடம் அதற்குள்

வந்து விட்டிருக்கும்

ஷாஹென்ஷாவின்

மகன் பெயர் ஷாஹென்ஷா

ஷாஹென்ஷா

வருவாய் இல்லாததால்

குதிரையை விற்றுத் தின்றான்

ரெண்டாம் ஷாஹென்ஷா

ஆட்டோஒட்டி

ஆட்டோ வாங்குவதும்

அப்பாவின் குதிரை வாங்குவதும்

பரம்பரை லட்சியம்

ரெண்டாம் ஷாஹென்ஷாவின்

பிள்ளை பெயரும் ஷாஹென்ஷா

எண்ணெய் ஊற்றாமல்

சவாரிக்குப் போகாமல்

கொஞ்சிக் கொண்டிருக்கிறான்

ஷாஹென்ஷா

தாத்தாவின் குதிரை

அரபுக்குதிரை

அது புல்லே தின்னாது

ஒட்டகம் போல் உயரம்

தண்ணீர் குடிக்காது

குழந்தை ஷாஹென்ஷா

சிரிக்காமல் பசிக்கு அழுகிறான்.
 —

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024