INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, June 22, 2020

POETS IN THIS ISSUE OF INSIGHT UPLOADED ON 23.06.2020

POETS IN THIS ISSUE OF INSIGHT UPLOADED ON 23.06.2020

1. SAMAYAVEL KARUPPASAMY 
2. DHARMINI
3. ANA MIKA 4. PON ILAVENIL. B
5. GIRITHARAN NAVARATHNAM
6.YAVANIKA SRIRAM 
7. PALAIVANA LANTHER
8. T.K.KALAPRIYA 9. MADHURA 
10. JAMALDEEN WAHABDEEN 
11. RANI THILAK 
12. GUNA KANDASAMI 
13. GOPAL NATHAN 
14. MUVAIS MOHAMMED 
15. K.MOHANARANGAN 
16. THEEPIKA THEEPA 
17. S.THILAKAVATHI 
18. LAKSHMI MANIVANNAN 
19.RAJAJI RAJAGOPALAN 
20. RAMESH KANNAN 
21. FAIZA ALI 
22. MULLAI AMUTHAN 
23. THAMIZHKIZHAVI(KUGADHARSANI) 
24. IYYAPPA MADHAVAN





































SAMAYAVEL'S POEMS(3)

THREE POEMS BY
SAMAYAVEL KARUPPASAMY

Translated into English by Latha Ramakrishnan


(1)
IN MEMORY MAP NOOKS APLENTY
The driver of the car speeding along the Google route
suddenly turned it into a small road.
The one sitting next asked, highly perturbed _
“Why brother, what happened?”
“Nothing, please be patient for a while”
So saying he steered the car further into another lane.
Halting the car at the intersection where a nook forked at the right
he switched off the engine.
“There , the second house”, said he to the friend at the back.
Both of them brought down the glass screens of the car hurriedly.
In that second house there was a massive gate.
In the desolate courtyard a white glow floated.
From that empty open space
From that massive gate where not even a cat seen
a retreat approached the car.
Something must’ve have happened exclusively to the driver
All too suddenly the engine was switched on
and the car setting out at great speed
began running along the international map.
In Memory Map
Nooks multiple;
Crossroads innumerable.
Samayavel Karuppasamy
May 16 •
ஞாபகங்களின் வரைபடத்திலோ எத்தனையோ முடுக்குகள்
-----------------------------------------------
கூகுள் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த காரை
ஓட்டுநர்
திடீரென ஒரு சிறிய சாலையில் திருப்பினார்.
பக்கத்தில் இருந்தவர் ‘தம்பி என்ன ஆச்சு’ என்று பதறினார்.
“ஒன்றுமில்லை கொஞ்சம் பொறுமையாக இருக்கமுடியுமா…”
என்று கூறிவிட்டு காரை
மேலும் ஒரு சிறிய தெருவில் திருப்பினான்.
வலதுபுறம் ஒரு முடுக்கு பிரியும் சந்தியில்
காரை நிறுத்தி என்ஜினை ஆஃப் செய்தான்.
பின்னால் இருந்த நண்பனிடம், அந்த இரண்டாவது வீடு தான் என்றான்.
இருவரும் வேகவேகமாக கார்க்கண்ணாடிகளை இறக்கினார்கள்.
அங்கே அந்த இரண்டாவது வீட்டில் ஒரு பெரிய கேட் இருந்தது.
ஒருவருமில்லாத முற்றத்தில் வெள்ளை வெளிச்சம்
மிதந்தது.
அந்த வெறும் முற்றத்திலிருந்து
ஒரு பூனை கூட நிற்காத அந்தப் பெரிய கேட்டில் இருந்து
ஒரு ஏகாந்தம் காரை நோக்கி வந்தது.
ஓட்டுநருக்கு மட்டும் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.
சட்டென என்ஜின் முடுக்கப்பட்டு
கனவேகம் எடுத்த கார்
மீண்டும் சர்வதேச வரைபடத்தில் ஓடத் தொடங்கியது.
ஞாபகங்களின் வரைபடத்திலோ
எத்தனையோ முடுக்குகள்
எத்தனையோ தெருமுனைகள்.


(2)FOREVER
The irrigation tank is cheerful
Even in tiny whiff of air it sways softly
and with silken sounds kisses the shore
When the cluster of frogs leap and play
round and round it spreads the waves
and glows in splendor
Happiness personified the doves are
They come together in countless numbers
and rejoice
Collecting four twigs constructing nest
hatching eggs feeding the chicks
and letting them fly away
they get ready for the next love
For welcoming the month of Chithirai
the Neem tree on a blossoming spree
scattering flowers all over the street
feels elated
With her unbroken love
flowering in her womb
an expectant mother in hue unusual
goes wandering
accompanied by the tinkling music of bangles
A poet wedded forever to sorrow
embracing everything
wanders here as the very wind.
என்றென்றைக்குமாக
கண்மாய் சந்தோஷமாக இருக்கிறது
மீச்சிறு காற்றிலும் மெல்ல அசைந்து
சிறிய சப்தங்களுடன் கரைகளை முத்தமிடுகிறது
தவளைக்கூட்டம் குதித்தாடுகையில்
வட்டவட்டமாய் அலைபரப்பி மினுமினுக்கிறது
புறாக்கள் சந்தோஷமாக இருக்கின்றன
கணக்கில்லாமல் கூடிக் கூடி களிக்கின்றன.
நாலு குச்சிகளைப் பொறுக்கிக் கூடுகட்டி
முடையிட்டு குஞ்சுகளுக்கு இரையூட்டிப் பறக்கவிட்டு
அடுத்த காதலுக்குத் தயாராகின்றன.
வேப்பமரம் சித்திரையை வரவேற்க
பூத்துப் பூத்து பூத்து
தெரு முழுதும் பூக்கள் சிந்திக் குதூகலிக்கிறது
தன்னுடைய இடை நில்லாக் காதல் கருவாக
வினோதமான நிறத்தில்
வளையல்களின் இசையோடு நடந்து திரிகிறாள்
ஒரு நிறைசூலி.
என்றென்றைக்குமாக
துயரைத் திருமணம் செய்துகொண்ட கவியொருவர்
எல்லாவற்றையும் தழுவியவாறு
இங்கே காற்றாய் அலைகிறார்.


(3) QUESTIONS QUESTIONABLE
 “No herculean task – walking on the waters’ _
states the white-breasted water hen
The ‘pheasant-tailed jacana’
walks hurriedly on the floating leaves
to where the fish would be bouncing
While swimming in the spot sans leaves
the entire pond sways and sanctifies.
The pheasant-tailed jacana
is the child of this pond
The bouncing fish
The lotus-leaves holding pearls
and swaying in velvety softness
Cormorants Jacanas, Storks sans sight
The legs gleaming under the water
at the steps of pond
Banyan trees mountain ranges of the horizon _
All and more gulping in turns
Who am I?

கேள்விக்குரிய கேள்விகள்
தண்ணீரின் மேல் நடப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை
என்கிறது நீர்க்கோழி.
குளத்தில் மீன்கள் துள்ளும் இடங்களை நோக்கி
மிதக்கும் இலைகளின் மேல் விடுவிடுவென்று நடந்து போகிறது
தாமரைக்கோழி.
இலைகளற்ற இடத்தில் நீந்துகையில்
மொத்தக் குளமே அசைந்து ஆசீர்வதிக்கிறது.
தாமரைக்கோழி இந்தக் குளத்தின் குழந்தை.
துள்ளும் மீன்கள்
வட்டவட்டமாக முத்துக்கள் ஏந்தி
வழுவழுப்பாய் அசையும் தாமரை இலைகள்
தாமரைக்கோழிகள், நீர்க்காகங்கள், குருட்டுக் கொக்குகள்,
குளத்தின் மடிக்கட்டில் நீருக்குள் ஒளிரும் கால்கள்
ஆலமரங்கள், அடிவானத்தின் மலைத்தொடர்கள்
எல்லாம் மாறிமாறிப் பருகும்
நான் யார்?
சமயவேல் கருப்பசாமி-இந்தியா

THARMINI'S POEMS(3)

THREE POEMS BY 
THARMINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Facing the computer I am
Someone stands at the back
scanning each and every word
My nape quivers
Fingers staggering
what all letters they tap?
That which was thought of
disperse
Not allowing me to think anything
a crowd here
The din and noise of people
I can hear
The door of this house
is safeguarded by just three locks
O dear….

கணினி முன் இருக்கிறேன்
யாரோ என் பின்னால் நின்று
ஒவ்வொரு எழுத்தாக உற்றுப்பார்க்கிறார்
பிடரி கூசுகின்றது
விரல்கள் தடுமாறி
எந்தெந்த எழுத்துகளைத் தட்டுகின்றன?
நினைத்தவை கலைந்து போகின்றன
ஒன்றையும் யோசிக்க விடாமல்
இங்கு ஒரு கூட்டம் மனிதர்களின் கூச்சல் கேட்கிறது
இவ்வீட்டுக்கதவு
மூன்று பூட்டுகளால் தான் பூட்டப்பட்டுள்ளது.



(2)

The raging frenzy towards finding the cause of
each and everything
has reached dangerous proportions

The brain that goes on dissecting people
has grown fatigued.
What can be done to become once again
a simpleton?
Where to remain
hanging suspended between
Good and Bad?
If not
Am I to train my thoughts
in the manner of learning to swim
inhaling lungful of air
and float
being blissfully unaware of the burden?


ஒவ்வொன்றின் காரணத்தையும் அறியும் வெறி முற்றிவிட்டது.
மனிதர்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் மூளை
களைத்துப் போனது.
திரும்பவும் அப்பாவியாக என்ன செய்ய?
நன்மைக்கும் தீமைக்கும் நடுவிலே
எங்கு போய்த் தொங்க?
இல்லையென்றால்
நுரையீரல் நிறைய மூச்சை இழுத்து
பாரத்தை மறந்து மிதக்க
நீச்சலைப் போல
நினைப்புகளைப் பழக்கவா?




(3)
That was a long day of the year
Musical evening hour.
Warm breeze after a long time.
People laugh merrily
Sit on the lawns
Looking into each other’s eyes they chat
Watch the birds flying so weightlessly
with wonder and awe
When they go lilting,
touching the hearts that are
waiting for empathy
get a little drenched.
melt a little in the chill
Love redeems those who feel hopeless.


Dharmini Ni
June 23, 2019 •

அது வருடத்தின் நீண்ட பகல்.
இசை மாலைப்பொழுது.
நெடுநாட்களின் பின் வெப்பக்காற்று.
மனிதர்கள் சிரிக்கின்றனர்.
புல் தரைகளில் அமர்கின்றனர்.
கண்களைப் பார்த்துக் கதைக்கின்றனர்.
பறவைகள் அவ்வளவு இலேசாகப் பறப்பதை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.
பரிவலைகளுக்காகக் காத்திருக்கும் மனங்களை
அவை துள்ளித் தொட்டுச் செல்லும் போது கொஞ்சம் நனைகின்றன.
குளிர்வில் துவள்கின்றன.
நம்பிக்கையிழந்தவர்களை நேசங்கள் காக்கின்றன.



ANA MIKA'S POEMS(2)

TWO POEMS BY 
ANA MIKA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
Hei you, stupid light
Damn you foolish light
Just keep your light rays
well-bundled in darkness
All too intensely
I hate your hues and shades
that bare my privacy
Do you know what a grand light
Dark is
My face sorrow-filled
My body torn by pain
My soul and all it safeguards
with such secrecy.
In this cabin in this darkness
I kneel down and pray
My Dark Light
I am a human animal that gobbles you
in excess
The colour of thee who fills my lungs and returns
is pitch black I firmly believe.
Beyond the purview of piercing light
begins the expanse of darkness.
In that I experience myself everywhere in
Soothing solitude.
My attires torn
My body filth and dirt-laden
I have concealed in this darkness
O untimely Darkness
You alone knows all too well
My deranged mind
My love
My lust
My loneliness
My hunger
Except you none other
has assimilated effortlessly
O Light you have never known
how to conceal my privacy
In the kingdom of the Light of Dark
Same hue same virtue for one and all
In the space that wears faces aplenty
Darkness never tries to ascertain itself.
It is darkness that had created the magnificent force of species
In the ensuing creation
What all I have become – do you know?
Here, I plead with the radiance
that shrinks me gradually
to let go of me.
Showing no mercy
It shines brighter.
Light determines my shade.
My Dark determines my Light.

Ana Mika
May 5 •
ஹேய் முட்டாள் வெளிச்சமே
ஹேய் முட்டாள் வெளிச்சமே
உன் ஔிக்கற்றையை
கொஞ்சம் இருளுக்குள் பொதித்து வை
என் அந்தரங்கத்தை நிர்வாணப்படுத்தும்
உன் நிறங்களை நான் மிகத்தீவிரமாய் வெறுக்கிறேன்
இருள் எவ்வளவு மகத்தான வெளிச்சம் தெரியுமா
என் துயரம் நிரம்பிய முகத்தை
என் வலி கொல்லும் உடலை
என் ஆன்மாவை அவ்வளவு இரகசியமாய் பாதுகாக்கிறது
இந்த அறையில் இந்த இருளில்
நான் மண்டியிட்டுப் பிரார்த்திக்கிறேன்
என் இருள் வெளிச்சமே
உன்னை அதீதமாய் பருகும்
ஒரு மனித மிருகம் நான்
என் சுவாசப்பையில் நிரம்பித் திரும்பும் உன் நிறம்
கரிய இருள் என்பதை நான் நம்புகிறேன்
ஔி ஊடுறுவலின் எல்லைக்கு வெளியே
இருளின் பரப்பு தொடங்குகின்றன
அதில் எங்கும் ஏகாந்தமாய் உணருகிறேன்
என் கிழிந்த உடையை
அழுக்கு நிறைந்த என் உடலை
இந்த இருளுக்குள்தான் மறைத்து வைத்திருக்கிறேன்
அகால இருளே
என் மனப்பிறழ்வை
நீ மட்டுமே நன்கு அறிவாய்
என் காதலை
என் காமத்தை
என் தனிமையை
என் பசியை
உன்னைப்போல் அவ்வளவு எளிதாய்
யாரும் அணைத்துக்கொண்டதில்லை
ஔியே உனக்கு ஒருபோதும்
அந்தரங்கத்தை மறைக்கத்தெரிந்ததில்லை.
இருள் ஔிச்சத்தின் பரப்பில்
எல்லாவற்றிற்கும் ஒரே அறம் ஒரே நிறம்
அனேகத்தின் முகங்களை அணிகிற வெளியில்
தன்னை நிறுவுவதில்லை இருள்.
உயிரியின் பேராற்றலை இருள்தானே சிருஷ்டித்தது.
உண்டுபண்ணிய இயக்கத்தில்
நான் என்னவெல்லாம் ஆகிப்போனேன் தெரியுமா
இதோ என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
சுறுக்கும் ப்ரகாசத்திடம்
எனை விட்டுவிடும்படி மன்றாடுகிறேன்
அது கருணையின்றி மேலும் ஔிகின்றது
என் நிழலை தீர்மானிக்கின்றன ஔி
என் ஔியை தீர்மானிக்கின்றன இருள்


(2) HOW TINY ‘I’ MANY

In space infinite
everything is breathing
For the squirrel that leaps down from my height
ripe fruits aplenty they have dropped
I, a human pick up one and relish it
What a wonderful tiny fruit it is
Today morning
in the fruit that the squirrel and myself eat
with no prayer
this great grand tree has brought forth the revelation
of the all too small lovely life
In the row of tiny ants upon the compound wall
sun’s time moves on
The sky of the birds that fly into forenoon
is all clear with blue all over and so glow radiantly
The roots of those trees that deliver life-breath
with soft and tender swings and sways
pervading wide and deep
have well expanded their frontiers densely
Who has given birth to the myriad hues and shades
smeared all over the world
As one gone crazy
I keep watching a mammoth butterfly
drawing the cloud which sucks the moisture
and resurrect lives and
whirring across the sky
In the space that vibrates in sounds
the soul comes into being as everything.
See in that green leaf
watery ciphers
the universe having a form
magnifying me
brimming and swaying
and
P
E
R
C
H
I
N
G
Oh, in that fluidity
How tiny I many?
Ana Mika
May 2 •
எத்தனை சிறிய நான்கள்
எல்லையற்ற வெளியிடம்
எல்லாம் உயிர் கொண்டிருக்கின்றன
என் உயரத்திலிருந்து தரைக்கு தாவும் அணிலிக்கு
கனிந்த பழங்களை நிறைய உதிர்த்திருக்கின்றன
மனிதவாசியான நான் அதில்
ஒன்றை எடுத்து ருசிக்கிறேன்
எவ்வளவு அற்புதமான குறுங்கனியது
இந்த காலையில் பிரார்த்தனையற்று
நானும் அணிலும் உண்ணும் பழத்தில்
மீச்சிறிய அழகிய வாழ்வை
தரிசிக்க தருவித்திருக்கின்றது இப்பெருமரம்
மதிலிலூரும் எறும்பின் வரிசையில்
வெயிலின் காலம் நகர்த்துகின்றன
முன்பகலுக்குள் பறக்கும் பறவைகளின் ஆகாயம் முழுக்க
தெளிந்து நீலம்பூசி வெளிச்சம் ப்ரகாசிக்கின்றது
சன்ன மிருதசைவுகளோடு
உயிர் காற்றை பிரசவிக்கும் மரங்களின் வேர்கள்
ஆழம்பரப்பி தன்னெல்லையை
அடர்த்தியாய் விரித்திருக்கின்றன
நிலமெழுகிய வர்ணங்களை இங்கு யார் பிரசவித்தது
ஈரம் உறிந்து உயிர்ப்பிக்கின்ற
மேகம் வரைந்து வானத்தை சலம்பிக்கொண்டு
பெரிய வண்ணத்துப் பூச்சியொன்று
அபாரமாய் பறக்கின்றதை
ஒரு பிறழ்ந்தவனைப்போல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சப்தங்களில் அதிர்வுரும் வெளியிடம்
எல்லாமுமாக ஆன்மா உருகொள்கின்றன
பார் அந்த பச்சை இலையில்
நீர்மை சுழியங்களில்
பிரபஞ்சம் பிம்பம் தாங்கி
என்னை உருபெருக்கி
தளும்பி அசைந்து
கீ
ழி

ங்
கு
கி
ன்

அந்நீர்மையில்
எத்தனை சிறிய நான்கள்


PON ILAVENIL.B'S POEMS(2)

TWO POEMS BY 
PON ILAVENIL.B

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) SKY INDISTINCT

The moon banging against
has got entangled inside the cloud
Even in dark clouds
there was glow atop as identity distinct
The moon too might’ve experienced
similar travails
as buying veggies in the
lockdown market.
People filled with despair
with ailing hearts are
carrying the burden of fear
The respective social distance
between them
is drawn so rigorously
Almost stretching as usual
for a warm handshake
the hands struggle to get accustomed
to the new habit
With all heads swollen with hair
faces concealed by masks
have become unknown
As the anguish of people
having to live with Corona
the Moon was feeling restive.
With light scattering in practical difficulties
the sky so blurred
keeps waiting.


தெளிவில்லாத வானம்
____________

முட்டிக் கொண்டிருந்த நிலவு
மேகத்திற்குள்
சிக்கிக் கொண்டிருந்தது
கருத்த மேகங்களிலும்
உயரமாக
வெளிச்சம்
அடையாளப் பட்டிருந்தது
ஊரடங்குச் சந்தையில்
காய்கறிகள்
வாங்கும்
இன்னல்கள் போலான
சிக்கல்கள்
நிலவுக்கும் இருந்திருக்கலாம்
பயமுற்ற மக்கள்
பாதிப்பு மனதுடன்
அச்சத்தை
சுமந்து
செல்கிறார்கள்
அவரவர்களுக்கான
இடைவெளி
இறுக்கமாய் வட்டமிடுகிறது
வழக்கம் போல
கைகுலுக்கிக் கொள்ளும்
கரங்கள்
வரைமுறைகள் மீறி
நீளத்துடிக்கும்
தருணம்
புதிய பழக்கத்திற்கு
தடுமாறுகிறது
எல்லாம் தலைகளும்
முடிகளாக பெருத்திருக்க
மாஸ்குகள்
மறைத்துக் கொண்டமுகங்கள்
அடையாளம்
தெரியாமல் மறைத்துக் கொண்டது
கொரோனோவுக்கு
பழக்கப்படும் மனிதர்களின்
தவிப்பு போல
நிலவு துடித்து கொண்டிருந்தது
நடைமுறைச் சிக்கல்களில்
வெளிச்சம்
சிதறிக் கொண்டிருக்க
தெளிவில்லாமல்
வானம்
காத்திருக்கிறது
9.5.2020

2. TRANQUIL


Even a tiny ant knows
the dividing line between 
Poesy and News
A tiny strand of grass
sways there as a poem
At one corner of the road
in calm so deep
it keeps swaying
A tiny strand of grass
I stand in front of it
palms pressed together,
paying tribute
A tiny strand of grass
that lives in all grandeur
with no haste whatsoever _
as poem perfect .
Feeling elated
I keep reading it
forever.
Pon Elavenil B
April 30 •
அமைதி / 156
____

துளி
எறும்புக்கும்
தெரியும்
செய்திக்கும்
கவிதைக்கும்
இடைவெளி
எதுவென்று
சிறு
புல்
கவிதையாக
அசைந்து கொண்டிருக்கிறது
தெருவோரத்தில்
அமைதியான
அமைதியில்
அசைந்து கொண்டிருக்கிறது
சிறு
புல்
அதற்கு
முன்னால்
கை கூப்பி நிற்கிறேன்
சிறு
புல்
அது
அவ்வளவு
அழகாக
நிதானமாக
கவிதையாக வாழ்கிறது
நான்
அகம் மலர
அதை
வாழ்நாளெல்லாம்
வாசிக்கிறேன்

V.N.GIRITHARAN

A POEM BY 
GIRITHARAN NAVARATHNAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


  Dear Father, you are ever alive
in my heart, in the depth of my being.
Though I had seen you in person
long ago, during my adolescence
Till date I have not felt in my heart
that you did indeed depart.
In my reading, in my writing,
In my personality
You are still breathing
Remaining as seed within seed
You are
When I was a child
you loved me more and more _
as a boon so rare
In my formative years
You taught me the wonders
of reading;
You made me ponder over
Paradise on Earth.
My father!
You ‘ll always be in my spirit and core.
As long as I live on this shore
Giritharan Navaratnam
Yesterday at 3:31 AM •

எந்தை நீ எப்போதும் உள்ளாய்
என்னுளத்தில், என்னுள்.
பார்த்தது உன் இருப்புடலையென்
பதின்ம வயதிலென்ற போதும்
இன்றுவரை உனை நான் இழந்ததாக
இதயத்திலென்றும் எண்ணியதில்லை.
என் வாசிப்பில், என் எழுத்தில்,
என் ஆளுமையில்
இருக்கின்றாய் நீ இப்போதும்.
வித்தின் வித்தாகவின்னும் நீ
விளங்குகின்றாய்.
நேசித்தாயெனைக் குழந்தையாக,
நல்லதொரு நண்பனாக.
வாசிப்பில் பால்யத்தில் மூழ்க வைத்தாய்.
விண்காட்டி மண்ணின் இருப்புப் பற்றி
எண்ணிட வைத்தாய்.
தந்தையே! இருப்பாய் நீயென்
சிந்தையில் இருப்புள்ளவரை.

YAVANIKA SRIRAM'S POEM


A POEM BY 
YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

WAILS SUCCINCT
Asked in a line, too brief
Your tombstone statement
Or the message of your entire life – everything
Asking the child 'Who is your favourite'
the very moment Parents die in land yonder
It is the same one who declares proudly ‘My Country’
expresses apprehension “But, there is something disquieting”
It is the same one who had shed tears “O, how much I loved”
turned into a murderer.
Toor dhall grains, music of love, god’s fleeting glance,
the howl of dog and so on
are but brief indeed
In his verdict to many pages
the judge underlining sentences coming under Sections,
Further
men asking their women ‘what at all you want , my dear’
are but wails so brief
The voluminous text Crime and Punishment
is just the synopsis of Hunting and Farming
_ claim some.
What to do _ pathetic indeed
Since birth voices are being heard in the ears of one and all.
In the meanwhile
They who don’t know how to say things ‘in short’,
to put it comically
swoon in the queue to prove
collapsing.
Yavanika Sriram

சுருக்கமான கதறல்கள்

மிகச்சுருக்கமாக கேட்கப்படுகிறது
ஒருவரியில்
உங்கள் கல்லறை வாசகம் அல்லது முழுவாழ்வின் செய்திகள் எதுவும்
யாரைப்பிடிக்கும் என குழந்தைகளிடம்
கேட்கும் போதே பெற்றோர்கள் அப்பாலையில்
இறந்துவிடுகிறார்கள்
எனது தேசம் என நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொள்ளும் ஒருவர்தான் ஆனால் அதில் ஒரு சங்கடமான விசயம்
என்று அச்சம் தெரிவிக்கிறார்
எவ்வளவு நேசித்தேன் என்று கண்ணீர் சிந்தியவர்தான் கொலையாளியாகிவிட்டார்
துவரைப்பருப்புகள் காதலிசை கடவுளின் கடைக்கண்பார்வை
நாய் குரைக்கும் ஓலம் போன்றவை
சுருக்கமானவைதான்
பலபக்கக்
குற்றப்பத்திரிக்கையில் நீதிபதி
செக்ஷனுக்குள் வரும் வாக்கியங்களின் கீழ் அடிக்கோடிடுவது மேலும்
வெகுநாட்களாய்
பெண்களிடம் ஆண்கள் உனக்கு என்னதான்மா வேண்டும் எனக்கேட்பது போன்றவை மிகச்
சுருக்கமான கதறல்கள்
குற்றமும் தண்டனையும் என்ற பெரும்பிரதி
வேட்டையாடுதலுக்கும் விவசாயத்திற்குமான
வெறும் சுருக்கம் என்பாரும் உண்டு
என்னசெய்வது பரிதாபம்தான்
பிறந்ததிலிருந்து எல்லோர் காதுகளிலும் பேச்சுக் குரல் விழுந்தபடிதான் இருக்கிறது
இதற்கிடையில்
எதையும் சுருக்கமாகச் சொல்லத் திராணியற்றவர்கள் ஒரு நகைச்சுவைக்காகச் சொல்கிறேன் நிரூபணத்திற்தகான வரிசையில் மயங்கித் தரை விழுந்து விடுகிறார்கள்


INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE