A POEM BY
J.WAHABDEEN
That is my dirge.
Our sea has not become so subdued
as to listen to your hue and cry.
If I lament in the name of my land
Oh, you lose nothing
It would at east reach
the ears of those crows that cry
in a voice turned dry
for want of fish.
At least for those small stony lumps
heaped that melt everyday in the waves’ misery
my elegy would offer solace.
Let my elegy prove a balm to those floats
That are waiting on the shore
gazing at the sea, sky
Not being able to celebrate
the holy day of fishes
Alas, will the shame of having the dhoti untied
for the whole world to see
and laugh in glee
would leave on buying a hat for us?
Or
Is it the abject clownish act
of breaking apart the throat
and quenching thirst diabolic
then buying a whistle
and asking us to blow that?
Not forgotten
the depth of our dirge
the house well lit knows it all.
Tomorrow
could recall.
I would continue to chant
the sorrow of my seashore.
It is my song of lament.
..........................
என் கடலோரத்து துயரத்தை
நான் பாடிக்கொண்டே இருப்பேன்;
அது என் ஒப்பாரி.
நான் ஒப்பாரி வைப்பதால்
உங்களுக்கொரு நஷ்டமில்லை.
மீனின்றி வரண்ட குரலால் கத்துகின்ற
காகங்களுக்காவது கேட்கும்.
கடலைக் காக்க வந்து
அலைகளின் பரிதாபத்தில் தினமும் கரையும்
கொட்டிக்கிடக்கும் முண்டுக்கற்களுக்காவது
ஆறுதல் கொடுக்கும் என் ஒப்பாரி.
மீன்களின் பெருநாளைக் கொண்டாட
கடல் வானைப் பார்த்தபடியே
கரையில் காத்துக்கிடக்கின்ற
தோணிகளுக்காவது
இந்த ஒப்பாரி ஒத்தடமாகட்டும்.
சாரனை அவிழ்த்துவிட்டு
உலகமே சிரிக்க வைத்த அவமானம்
தொப்பி வாங்கித் தந்து நீங்கிப்போகுமா?
அல்லது
குரல் வளையை முறித்து
வெறிதீர்த்துவிட்டு
சீட்டி வாங்கித் தந்து ஊதச்சொன்ன
மறந்து போகவில்லை
நமது ஒப்பாரியின் ஆழம்
வெளிச்ச வீட்டுக்குத் தெரியும்.
நாளை
ஞாபகமூட்டலாம்.
என் கடலோரத்து துயரத்தை
நான் பாடிக்கொண்டே இருப்பேன்;
அது என் ஒப்பாரி.
ஜே.வஹாப்தீன்
No comments:
Post a Comment