INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

KAALATHATCHAN'S POEM

 A POEM BY 

KAALATHATCHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


BURDEN UNBEARABLE….




Already you have received enough caning and are returning
with the smarting pain in bums
Can’t you just keep quiet in this jampacked travel at least
What if the northern horn rise or the southern horn
fall
doesn’t the moon sleep in the cool breeze
where physical impairments and old age
recline?
Brimming with compassion you received upon your lap
the minuscule one caught in the toes of
she who was crushed under the debris
Feeling its cotton-ball cheek
You ask it fondly ‘Where are you going?’
To father’s house with small door fixed in big door
says she.
Now, see _
With the axle breaking apart
Your cart has fallen flat..


(‘சால மிகுத்துப் பெயின்’ என்பது தமிழ் வாசகர்களுக்கு ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும்’ என்ற வரியையும் நினைவுக்குக் கொண்டுவரும். அந்த அர்த்தத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டுவர இயலவில்லை. இயலுமா தெரியவில்லை. - TRANSLATOR)



சாலமிகுத்துப் பெயின் -

காலத்தச்சன்
-----------------------------------------------------
ஏற்கனவே
புட்டம் பழுக்கப் பிரம்படி பெற்றுத்தான்
திரும்பகிறீரே
நெரிசல் பிதுங்குமிந்தப் பயணத்திலாவது
பொத்திக் கொண்டிருக்க ஏலாதா
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன
ஊனமும் மூப்பும் ஒதுங்குமிடத்தில்
காற்றாட கண்ணுறங்கவில்லையா
வான்பிறை
இடிபாடுகளில் நசுங்கியவள் காலிடுக்கில்
மலங்க மலங்க விழிக்கும்
குட்டியூண்டை
பரிவு மேலிட மடியில் வாங்கிக்கொண்டீர்
பஞ்சுருண்டைக் கன்னந்தொட்டு
எங்கே செல்கிறாய் எனவும் உசாவுகிறீர்
பெரிய கதவில் சிறிய கதவு வைத்த
அப்பா வீட்டிற்கு என்கிறாள்
இப்போது பாருங்கள்
அச்சு முறித்து
உங்கள் வண்டி படுத்தேவிட்டது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE