TWO POEMS BY
NEDUNTHEEVU NETHAMOHAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Last night you had sent a ‘meme’ to my mobile
“The way a woman pierces the heart with a knife.
Viewing it without feeling bitter
I went to sleep
The room you were all alone
swelled with the blood of the heart you sliced,
began overflowing
The photograph wherein we stand together
happily laughing
even when you cut it
eyed us laughing.
Remaining in my still beating heart
that sharp knife was shivering all the time.
From the blood flowing out of my heart
the sea turned red.
And, in that, my soulful silence
was getting submerged.
நேற்று இரவு என் தொலைபேசிக்கு
ஒரு மீம்ஸ் அனுப்பி இருந்தாய்
"ஒருத்தி கூரான கத்தியால்
இதயத்தை குத்துவது போல்"
வருத்தமில்லா மனதோடு
பார்த்துவிட்டு
தூங்கப்போனேன்
நீ தனித்திருந்த அறை
குத்திய இதயத்தின் குருதியால்
நிறைந்து பெருகீற்று
நானும் நீயும் சிரித்துக்கொண்டு
எடுத்த புகைப்படம்
நீ குத்திய பொழுதும்
அதே சிரிப்புடன்தான் பார்த்துக்கொண்டிருந்தது
துடிப்பு அடங்காத என்
இருதயத்தில் இருந்து
நடுங்கிக்கொண்டிருந்தது அந்த கூரான
கத்தி
என் நெஞ்சிலிருந்து வழிந்தோடிய
செங்குருதியால் கடல் சிவந்துபோனது
என் ஆத்மார்த்தமான மெளனம்
அதே கடலில் மூழ்கிக்கொண்டிருந்தது
-நேதா-
(2)
with eyes closed
when I am feeling the wind
as the very air
You are there.
In pitch dark
deprived of electricity
as grand radiance within my eyes
You are there.
In my isle-voyage
in the raging waters
causing waves surge as mountain
You are there.
Drinking Tea
right till the last drop
You are there
When the pain within
chokes me
You are there.
When Time slips by
in tears
At the opposite direction, smiling
You are there.
As the child that wails aloud
having lost its mother
so intensely
You are there.
Indeed You are there.
Yet,
a drop of being non-being
surging as flash flood
loses your presence
I know not where.
மலை உச்சியில் நான்
கண்ணை மூடி காற்றை உணர்கையில்
காற்றில் நீ இருக்கிறாய்
மின்சாரம் இழந்த இருட்டில்
என் கண்களுக்குள் பேரொளியாய்
நீ இருக்கிறாய்
மலைபோல் அலைஎழுப்பும்
என் தீவுப் பயணத்தில்
கோபமாய் அடிக்கும் கடல் நீரில்
நீ இருக்கிறாய்
தேனீர் அருந்தி அதன் ரூசியின்
கடைசி துளிவரை நீ
இருக்கிறாய்
உள்ளுணர்வின் வலியினில்
மௌனம் படர்கையில்
நீ இருக்கிறாய்
கண்ணீரில் மெல்ல மெல்ல
காலம் மறைகையில்
மறுதிசையில் புன்னகையோடு
நீ இருக்கிறாய்
தாயைத் தொலைத்து
கத்தும் குழந்தை போல
அவ்வளவு கனதியாய் நீ இருக்கிறாய்!
நீ இருக்கிறாய்
இருந்தும் இல்லாமையின் ஒரு துளி
காட்டாற்றாய் பெருக்காகி எங்கோ
தொலைத்து விடுகின்றது உன் இருப்பை.
-நேதா-
No comments:
Post a Comment