INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, September 1, 2020

VATHILAIPRABHA'S POEM

 A POEM BY 

VATHILAIPRABHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


In that night filled with deadly quiet

From house adjacent came floating scent intense
At the entrance of the house stood hapless
a solitary Neem tree.
As the mushroom sprouting all at once
for the Northeastern monsoon
a few chairs
Some remained empty.
With some seated in chairs here and there
swaying sleepily
in a chair close by there sat a corpse.
Which chair who he couldn’t ascertain that night
That night so still so silent
Something hitherto he had not seen
At dawn fireworks, drum-beats _
so there would be sounds galore
Cry outcry wail bewail – thus a huge crowd would
be causing tumultuous uproar
‘Kodithuni ’ , ‘ Neermaalai,
the norms of performing last rites
would be discussed exhaustively.
The dance of the tipplers
The grin of Rummy jokers
could be deafening
Elegiac wails scaring those
in the neighbouring areas
Double entendres - thus
the spitting loud speakers
would make hearts shudder
True, ‘Kalyaana saavu’ would indeed be
endowed with festivities.
Deeply contemplating he went to sleep.
The dawn broke as a great surprise.
The house stood there
with no trace of the corpse there
a day earlier
How so baffling a surprise happened
in just one night
With the dead and the death
out of sight
from the life that ended does commence
anew
a social distance.


*P:S; Kodithuni _ funeral clothing : Neermaalai – Holy waters with which the dead body is bathed.
Kalyaana Saavu _ Death at the ripe age after having seen everything in life.


VathilaiPraba


பேரமைதி கவிந்திருந்த அந்த இரவில்
பக்கத்து வீட்டிலிருந்து அடர் நறுமணம் கமழ்ந்து வந்தது ,
வீட்டின் வாசலில் அழுது வடிந்தபடி நின்றிருந்தது
ஓர் ஒற்றை வேப்பமரம்.
வடகிழக்குப் பருவமழைக்குப் பூத்த திடீர் காளான் மாதிரி சாமியானா.
நாலைந்து நாற்காலிகள்
சில காலியாய் இருந்தன.
ஆங்காங்கே நாற்காலிகளில் சிலர் தூங்கி விழ
அருகேயிருந்த நாற்காலியில் பிணமொன்று அமர்ந்திருந்தது..
எந்த நாற்காலியில் எது என்று
அந்த இரவில் அவனால் கணிக்க முடியவில்லை.
ஆள் அரவமற்ற அந்த இரவு
அத்தனை அமைதியாய் அவன் பார்த்ததில்லை.
விடியலில் வான வேடிக்கையும்,
தாரை தப்பட்டையென அமர்க்களப் படலாம்..
அழுகையும் ஆரவாரமென ஒரு பெருங்கூட்டம் ஆர்ப்பரிக்கலாம்.
விண்ணை முட்டும் பட்டாசு காது பிளக்கலாம்.
கோடித்துணியும், நீர்மாலையும்
கருமாதி செய்முறையும் பேசித்தீர்க்கலாம்..
மதுப்பிரியர்களின் ஆட்டமும்,
ரம்மி ஜோக்கர்களின் இளிப்பும் ஜவ்வு தெறிக்கலாம்.
பக்கத்து ஊர்க்காரன் மிரள ஒப்பாரிகளும்,
ரெட்டை வசன ஆட்டங்களும் என
காரி உமிழும் குழாய் ரேடியோக்களால் இதயம் அதிரலாம்.
கல்யாணச் சாவு களைகட்டும்தான்..
பெருத்த சிந்தனையோடு தூங்கிப்போனான்.
காலை ஆச்சரியமாக விடிந்தது.
பிணமிருந்த வீடென அடையாளமற்று இருந்தது அந்த வீடு..
ஓர் இரவில் எத்தனை ஆச்சரியம்?
இறந்தவனும் தெரியாமல் இறந்ததும் தெரியாமல்
முடிந்துபோன வாழ்விலிருந்து தொடங்குகிறது
புத்தம் புதிதாய்
ஒரு சமூக இடைவெளி.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE