INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 27, 2021

INSIGHT - DECEMBER 2021


 

NESAMITRAN

 A POEM BY

NESAMITRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

This Sun of the rainy season has spread light
as solid as the rhino’s skin
Its weight shifts slowly along the earth’s back
with the feet of elephant dragging wooden logs
As a pregnant earthworm I am moving past
Now creeping inside this massive mount
soon as it reaches its axis
the mount would turn into a tiger-faced
pyramid
The magnificent magnet called Sky losing its grip
and let slip
the rain would pour in glee
and the earth would melt and soften
_ So the crop growing in molten rocks
whispered.
The footsteps being heard so loud
above the head
moves you to the Cape of Good Hope
Upon waiting a little while
all the steel hauled off this soil for fences
can be stomached and digested.
In my sky the clouds have started making love.
The ‘sudalai kuyil’ that comes in rainy season alone
has started singing.
My very own
shady season
has almost begun.
நேச மித்ரன்
இந்த மழைநாளின் சூரியன் காண்டாமிருகத்தின் தோலடர்த்தியில் ஒளி விரித்திருக்கிறது.
இதன் கனம் மரமிழுக்கும் யானையின் பாதங்களுடன் பூமியின் முதுகில் நகர்கிறது .
ஒரு கர்ப்பமுள்ள மண்புழுவாய் கடந்து கொண்டிருக்கிறேன்
இப்பெரு மலையின் உள் ஊர்ந்து .
இதன் மையம் அடைந்ததும் மலை புலிமுகத்து பிரமிடாக மாறுமென்றும்
ஆகாயமெனும் பெரும்காந்தம் தன் பிடி நழுவ விட உவந்து பெய்ய நிலம் நெகிழும் எனவும்
லாவாக்களில் வளரும் பயிரின் வேர் கிசுகிசுத்தது
தலைக்கு மேல் உரக்க கேட்கும் பாதச் சுவடுகளின் பேரோசை நன்னம்பிக்கை முனைக்கு நகர்த்துகிறது
சற்று காத்திருந்தால்
இம்மண்ணிலிருந்து வேலிகளுக்கு அகழும் எஃகையெல்லாம் தின்று செரித்து விடலாம்
என் ஆகாயத்தில் மேகங்கள்
புணரத்துவங்கி விட்டன
மழைக்காலத்தில் மட்டும்
வரும் சுடலைக் குயில்
கூவத் துவங்கி இருக்கிறது
எனதேயான நிழற்காலம் சமீபித்து விட்டது

RAM PERIYASAMI

 A POEM BY

RAM PERIYASAMI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Mother is blowing air
into the firewood-stove
A long strain of flute
Worse than volcanic eruption
deep down
burns the abdomen.
Unable to bear it
the rice is boiling
House with thatched roof
Rain seeps through
The vessel kept too
is flawed
It would taste sweeter than the honey-candy
when father feeds with his hand
The Moon that usually leaves and comes
is resting today.
Mother introduces the fireflies.
Some refer to us as poor
By the way
We have not even a rupee of loan
to repay.

ராம் பெரியசாமி

அம்மா அடுப்பூதுகிறாள்
எரியும் விறகில்
நீண்ட புல்லாங்குழலிசை
கற்குழம்பை விட
அடிவயிறு எரிகிறது
அதைத் தாளாது சாதம்
கொதித்துக்கொண்டிருக்கிறது
கூரை வீடு
ஒழுகிறது மழை
வைத்த பாத்திரமும் ஓட்டை
தேன்மிட்டாயை விட
தித்திப்பு அப்பா ஊட்டிவிடுகையில்
வழக்கமாய் வரும் நிலவு
இன்று ஓய்வு
மின்மினிப் பூச்சிகளை
அறிமுகம் செய்தாள் அம்மா
ஏழையென்கிறார்கள்
சிலர்
எங்களுக்கு ஒரு ரூபாய்
கூட கடனில்லை
ராம் பெரியசாமி

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Just one word of yours
rejecting me
has grown into a Neem tree
at the entrance.
Your eyes that scanned me in the name of
ceremonial bride-parade
are on the Neem tree as tiny bulbs
in hues myriad
Your eyes on my boobs
in green excessive
keep winking all too often.
In that Neem word
that lay at the threshold
throughout the night
all my colours flowing _
all the Neem fruits
that you hhad uttered from the start
turn sweeter and sweeter with every bite and munch
A bubble of saliva
that couldn’t be sucked in
in torment breaks apart
failing to reflect shades all.

என்னை வேண்டாமென்ற
உன் ஒரு சொல்
வீட்டு வாசலில்
வேப்ப மரமாகிவிட்டது..
பெண் பார்த்த உன் பார்வைகள்
வேப்ப மரத்தில்
சிமிட்டும் சின்ன மின் விளக்குகளாய்
வண்ணங்களில்..
என் மார்பின் மீதான உன்பார்வை
அதீத பச்சை நிறமுடன்
அடிக்கடி கண் சிமிட்டிய படியே..
இரவு முழுதும்
வாசலில் கிடந்த அந்த
வேப்பஞ்சொல்லில்
எல்லா வண்ணங்களும் பாய்ந்தபடியிருக்க..
முதலில் இருந்து நீ சொன்ன
அத்தனை வேப்பம் பழங்களும்
தின்னத் தின்ன
இனித்துக் கொண்டே இருக்கிறது..
கீழே விழுந்த
விழுங்கமுடியாத எச்சில் குமிழொன்று
எல்லா வண்ணங்களையும்
பிரதிபலிக்க முடியாதபடி
தவித்து உடைந்து கொண்டிருக்கிறது...
ராகவபிரியன்

Sunday, December 26, 2021

MULLAI AMUTHAN

TWO POEMS BY

MULLAI AMUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)

The child standing with the placard
'WILL MY FATHER COME'
sobs asking.
'Have you seen my husband?'
asks the wife.
My mother
who despite having seen him
shot and fallen
without letting it out
weeping within.
Responding ‘We will see’
with a smile
and moving ahead
_Ministers
He who overheard
has gone into hiding
For how long I have to remain
a portrait suspended.
Mullai Amuthan

அப்பா வருவாரா
பதாகையுடன்
நின்ற குழந்தை
கேட்டு அழுகிறது..
கணவனைப் பார்த்தீரா என்று
மனைவி கேட்கிறாள்.
குண்டடிபட்டு
வீழ்ந்தவனைக்
கண்டும்
சொல்லாமலேயே
மனதுள்
அழும்
என் அம்மா
பார்க்கலாம் என்று
புன்னகைத்தபடி
நகரும்
மந்திரிகள்...
ஓட்டுக்கேட்டவனும்
ஒழிந்துகொண்டான்..
எத்தனை காலத்திற்கு
நான் படமாய் தொங்குவது?
முல்லை'


(2)


A Man to the core

yet
tamed we are
by
Mother
Father
Elder sister, elder brother
Beloved
Higher authority
Wife
Daughter
God, the Omnipotent
A Man to the core
Yet tamed
We are
Mullai Amuthan

ஆண் பிள்ளைதான்
எனினும் அடங்கிப்போகிறோம்.
அம்மாவிடம்,
அப்பாவிடம்,
அக்காள்,அண்ணாவிடம்,
காதலியிடம்,
உயர் அதிகாரியிடம்,
அரசியல்வாதியிடம்,
மனைவியிடம்,
மகளிடம்
எல்லாம் வல்ல இறைவனிடம்
ஆண் பிள்ளை தான்
எனினும் ,
அடங்கிப்போகிறோம்
முல்லை

THARMINI

 A POEM BY

THARMINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The shore I Am
beyond the reach of Sea and Storm
Those who know not my dream
have forsaken me
My hands turn numb
Escaping the eyes of others
I hide myself inside Darkness
Unknown to others
I dig a pit
The lips that have swallowed things too bitter
too many
I have sealed all too tightly
Throttling with my hands
the throat that has gulped fire
I swoon
Shrunken timeworn fingers
Fingers faking affection
Fingers with chalk-piece coating
Unsafe fingers of yours _
Unreachable to all of them
faraway
deep down
I conceal myself
There is a letter for thee
Torn to pieces my body lies
therein.


Tharmi Ni

கடலும் புயலும்
கரை தொட முடியாதவளாக
நான்
என் கனவறியாதவர்கள்
கை விட்டனர்
என் கைகள் சோர்கின்றன
மற்றவர்கள் காண முடியாமல்
இருளுக்குள் மறைந்து கொள்கிறேன்
எவரும் அறியாத நேரம்
குழியொன்றை வெட்டுகிறேன்
கசப்புகளை விழுங்கிய உதடுகளை
இறுக்கி மூடினேன்
நெருப்பைக் குடித்த தொண்டையை
என் கைகளால் நசித்தபடி விழுகிறேன்
சுருங்கிப்போன முதிய விரல்கள்
நேசமென்ற போலி விரல்கள்
வெண்கட்டித்துகள் படிந்த விரல்கள்
பாதுகாக்காத உங்கள் விரல்கள்
எல்லாம்
தொடமுடியாத துாரத்தில்
ஆழத்துள்
ஒளிந்து கொள்கிறேன்
உங்களுக்கு
ஒரு கடிதம் இருக்கிறது
கிழிபட்டு அதனுள்ளே என்னுடல் கிடக்கிறது.

SHARMILA VINOTHINI

 A POEM BY

SHARMILA VINOTHINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE GREAT GRAND TIMESPACE

The tear-line of the Mother crossing the road
in the all too dense rain of ’Karthigai’
that the pregnant sky
pouring incessantly
dissolves and disappears.
The droplets of sand scattered from the tombs
dug and thrown away
sobs dissolving in the rain
Remembering the flowers strewn some day far away
the ‘Poovarasu’ by the fence
showers its leaves and swings its branches.
Words uttered inside mouths shut
and songs sung
light the lamp in hearts aplenty.
In the smiles that the faces seen in the wreckage
attacked and smashed
give out
the great grand Timespace is resurrected.
• Whoever it be, after death the body should be treated with due respect and dignity. This is the hallmark of human excellence. And, this is the greatest virtue and the noblest trait of the soldiers of a Land.
SHARMILA VINOTHINI.
காலப் பெருவெளி
கருக்கொண்ட வானம்
இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில்
சாலையைக் கடக்கின்ற தாயின் கண்ணீர்க்கோடு
கரைந்து மறைகின்றது.
தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த மணற்துளிகள்
மழையில் கரைந்து அழுகின்றன.
அன்றொருநாள் தூவப்பட்ட
பூக்களின் நினைவுகளில்
வேலியோரப் பூவரசு
இலைகளைச் சொரிந்து
தன் கிளைகளை அசைக்கின்றது.
மூடிய வாய்களுக்குள் பேசப்படும் வார்த்தைகளும்
இசைக்கப்படும் கீதங்களும்
உள்ளங்களில் தீபம் ஏற்றுகின்றன,
அடித்தும் உடைத்தும் வீசப்பட்ட
சிதிலங்களில்
தெரிகின்ற முகங்களில்
சிந்தப்படும் புன்னகையில்
உயிர்க்கிறது காலப்பெருவெளி.

சர்மிலா வினோதினி.
யாராக இருந்தாலும் மரணத்தின் பின்பு அந்த உடலுக்குரிய மரியாதையை செலுத்துவது மனித மாண்பு, அதுவே ஒரு நாட்டு வீரனின் உன்னத பண்பும் உயரிய ஒழுக்கமுமாகும்.

SAFNAS HASIM

 A POEM BY

SAFNAS HASIM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



1.
She asks me to blow air on her
fanning her from the burning heat of childbirth
From the amniotic fluid
that tear into shreds
milk and minuscule faeces
dangle.

2.
For the swelling finger-shoot
they have torn and kept open
the abdomen
as far as the hand can reach.
The baby’s feet kicking the
abdomen-skin
protruding amidst the sutures
were scar-borne.

3
I hear her through metallic sounds.
In the baby’s sobs
sounding Bronze
sounding Brass
pains one by one
fall upon the warehouse
All along the surgery-span
throughout the surrounding
bloody walls thereon
sobs of metallic sound
resound.

Safnas Hasim

1.
பேறுகால வெப்பத்திலிருந்து
அவளை ஊதிவிடச்சொல்கிறாள்.
நாராக கிழியும் மல்லிலிருந்து
பாலும் பிஞ்சு மலமும்
தொங்குகின்றன.
2.
திரண்டெழும் விரல்பிஞ்சுக்கு
கையெட்டும் தூரம் வரை
வயிற்றைக் கிழித்து தைத்திருந்தனர்.
தையல் நடுவில்
பிதுங்கும் வயிற்றுத் தோலில்
எட்டி உதைத்த சிசுப் பாதங்கள்
வடுவுற்றிருந்தன.
3.
லோக சத்தங்களிலிருந்து
அவளை செவிமடுக்கிறேன்.
வெண்கலமாய்
பித்தளையாய்
குழந்தை விசும்பலில்
ஒவ்வொன்றாய் வலிகள்
துண்டுபட்டுக்கிடக்கின்ற
கிடங்கில் மேல்
அறுவை நேர ஆயிடையில்
விழுகின்றன.
சுற்றி ரத்தச் சுவரெங்கும்
எதிரொலிக்கின்றன
உலோக சப்த விசும்பல்கள்.
சப்னாஸ் ஹாசிம்

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE