INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

INSIGHT - JULY 2022

 INSIGHT - JULY 2022

 1.    Shanmugam Subramaniam

2. Leena Manimekalai

3.  Velanaiyoor Thas

4.  Rajaji Rajagopalan

5.  Fathima Minha

6.  Iyyappa Madhavan

7.  Uma Shanika

8.  VathilaiPrabha

9. G P Elangovan

10.S.Faiza Ali

11.K.Saraswathi

12. Shifana Aseem

13. Kaniamuthu Amudhamozhi

14. Thenmozhi Das

15. Ilango Krishnan

16. Ma.Kalidas

17. Marimuthu Sivakumar

18.Nesamithran

19. Mohamed Batcha

20. Abdul Jameel

21. Nasbullah. A

22.Palamunai Mufeeth

23.Athmajiv

24. Chandra Manoharan

25.Paalai Nilavan

26. Vasanthadheepan


 


 

 

 

 


SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The attentiveness on the key while opening
and upon opening
on the usual place of keeping the key
eluding
on throwing it into the hitherto unused niche
in the speed of the swirling fan
the moisture of the mess slowly drying
though the glow of the tube-light
in the front room
slightly dispersing the dark quietude
of the other ones
eager to enjoy the bliss of composure
prevailing everywhere
when I stepped inside
the void-filled whiteness of the mercury-light
moving away
the shape of the key leaving me
now the sound of the unlocked door
being opened is heard.
The count of keys in the hands
of one and all
to unlock _
the doors wide-open, in stock,
exceed, after all.

Shanmugam Subramaniam
திறக்கும்போது சாவியின் மீதிருந்த கவனம்
திறந்ததும் வழக்கமாக வைக்கும் இடத்தின் மீதான கவனம் வழுவிவிட
இதுவரை பயன்படுத்தாத மாடத்தின் மூலையில் வீசியதும்
மின்விசிறியின் ஓட்டவேகத்தில் கலைப்பின் ஈரம்
மெல்ல உலர
முன் அறையிலுள்ள குழ்ல்விளக்கின் துலக்கம்
மற்ற அறைகளின் இருளமைதியை லேசாக கலைத்தாலும்
படர்ந்திருக்கும் பதட்டமின்மையின் சுகத்தைத் துய்க்க
உள்ளே நுழைந்ததும்
குழல்விளக்கின் வெறுமை பூத்திருக்கும் வெண்மை விலகிச் செல்ல
சாவியின் வடிவம் என்னைவிட்டுவிட
இப்போது பூட்டாத கதவைத் திறக்கும் சத்தம் கேட்கிறது
திறக்க எல்லோரிடமுள்ள சாவிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும்
விசாலமாய் விரிந்துள்ள கதவுகளின் எண்ணிக்கை
மிகையானதே.

-எஸ்.சண்முகம் -

LEENA MANIMEKALAI

THREE POEMS BY
LEENA MANIMEKALAI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



1. STATISTICS

Every three minutes
Every five minutes
Every ten minutes
A woman is sexually abused
A female infanticide is taking place
A woman is tortured
Three Where Five Why Ten When
Why hands have ten fingers
I crossed
The road stretched on
Longer than a chewing gum
The old man of the shop –
Would he have hit his wife
within a span of thirty minutes
He who rides on a bike
Would he have grabbed
the tits of the little girl of his household
Yesterday
Last week
For ten kilo weight reduction
Ten percent discount for women
So an ad on the cell-screen
Will each ten minutes change to fifteen minutes
Is there any connection between weight reduce
and sexual abuse
I let go two buses
Should protect my bums from the youths
who travel hanging at the footboard
By my side two more women
They too might be having something
to safeguard from men
Four, Six, Eight
I have got into the Route No.9 bus
A boy, around seven years of age…
In a few years
He might force and harass someone into
loving him
Or might break the dolls of his little sister
this evening.
Numbers are not in order
Why the clock is circular
Whenever the bell rings
My memory invariably recalls
Virginity acid-borne
Cloth soaked in excessive bleeding
Burning semen
The thigh bearing the wound
caused by hot iron
or a gas cylinder
Oh damn Oh damn
Should ask my mom
whether it was due to escaping the ‘Arukkam’ plant
that my body remains blue
and that my writings too bear the hue
_some argue.
TV Commercial
A white-skinned female’s backside
Could it be that I am still left alive
for buying the cream that would
turn one and all fair.
The coffee is turning cold
The thin layer floating therein
resembled the mangled cloth of
the corpse of a female
washed ashore on the river-bank
One in ten women
is being trafficked across the border
Could it be that one of the women
who I chance to come upon
I won’t be able to see tomorrow
Will the child next door
go missing without a trace
Am I given
a number by someone
For me you and she
Every ten minutes every five minutes
Every three minutes
Should check the shirt-pockets of the men
who go past
There might be the smell of
the little girl familiar to me
Or a harsh abusive word
Or a Viagra capsule
Have you hurt anybody
within the spell of a few hours
Within the spell of a few months
have you wounded anybody
Within the spell of a few years
have you had intercourse by force
Queries
there could be
in the mothers, sisters, beloveds
We can release women
can kill man among our own men
can cite Love
as the instantaneous reason
Or, can try counting from One to Ten.

புள்ளிவிவரம்
ஒவ்வொரு மூன்று நிமிடமும்
ஒவ்வொரு ஐந்து நிமிடமும்
ஒவ்வொரு பத்து நிமிடமும்
ஒரு பெண் மானபங்கம்
ஒரு பெண்
சிசுக்கொலை
ஒரு
பெண்
துன்புறுத்தப்படுதல்
மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது
கைகளுக்கு ஏன் பத்து விரல்கள்
கடந்தேன்
சாலை மிக நீளம்
ஒரு சூயிங் கம்மை விட
கடைக்கார கிழவன் தன் மனைவியை ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா
பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின் முலையைப் பற்றியிருப்பானா
நேற்று
சென்ற வாரம்
கைபேசியில் பத்து கிலோ எடை குறைப்புக்கு பெண்களுக்குப் பத்து சதவிகிதம் தள்ளுபடி அறிவிப்பு குறுஞ்செய்தி. எடை குறைத்தால்
ஒவ்வொரு பத்து நிமிடம் என்பது ஒவ்வொரு பதினைந்து நிமிடம் என்று மாறுமா?
வன்புணர்ச்சிக்கும் எடைக்கும் தொடர்பு உண்டா?
இரண்டு பேருந்துகள் தவற விட்டேன்.
படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போகும்
இளைஞர்களிடமிருந்து என் பின்புறத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டும். என்னருகில் இன்னும் இரண்டு பெண்கள். அவர்களுக்கும் பேருந்து ஆண்களிடமிருந்து தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கலாம்.
நான்கு, ஆறு, எட்டு
ஒன்பதாம் எண் பேருந்தில் ஏறி விட்டேன்
ஒரு சிறுவன், ஏழு வயதிருக்கும்.
சில வருடங்களில் அவன் யாரையாவது காதலுக்கு வற்புறுத்தலாம்
இல்லை தன் தங்கையின் பொம்மைகளை இன்று மாலை உடைக்கலாம்
எண்கள் ஏன் வரிசையாக இல்லை
கடிகாரம் ஏன் வட்டமாக இருக்கிறது
மணி அடிக்கும் போதெல்லாம்
ஒரு திராவகம் ஊற்றப் பட்ட கன்னிமையோ
ரத்தப் பெருக்குத் துணியோ
கொதிக்கும் விந்துவோ
தொடை சூட்டுக் காயமோ
கேஸ் சிலிண்டரோ
நினைவுக்கு வந்து தொலைக்கிறது
என் அம்மாவிடம் கேட்க வேண்டும். அருக்கஞ்செடிக்கு தப்பியதால் தான்
என் உடல் நீலமாக இருக்கிறதா என்று
என் எழுத்துக்களும் நீலமாக இருப்பதாக தான் புகார் இருக்கிறது
தொலைக்காட்சி விளம்பரம்
ஒரு சிவந்தப் பெண்ணின் புட்டம்
ஒருவேளை சிவப்பழகு கிரீம் வாங்குவதற்காக
உயிருடன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறேனா
காபி ஆறிக் கொண்டிருக்கிறது
அதில் மிதக்கும் ஆடை
நாளிதழின் அடையாளம் தெரியாமல் ஆற்றங்கரையில் ஒதுங்கியிருந்த பெண் பிணத்தின் கலைந்திருந்த ஆடையை ஒத்திருந்தது
பத்தில் ஒரு பெண் எல்லைகளில் கடத்தப் படுகிறாள்
எதிர்ப்படும் பெண்களில் ஒருவரை நாளை பார்க்க முடியாமல் போய் விடுவேனா
பக்கத்துக்கு வீட்டுக் குழ்ந்தை காணாமல் போய்விடுமா
என்னை யாரவது எண்ணிட்டிருக்கிறார்களா
எனக்கு உனக்கு அவளுக்கு
ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் ஒவ்வொரு மூன்று நிமிடமும்
கடந்து செல்லும் ஆண்களின் சட்டைப் பைகளை சரி பார்க்க வேண்டும்
அதில் நானறிந்த சிறுமியின் வாசனை இருக்கலாம்.
அல்லது ஒரு வன்மையான வார்த்தை
மேலும் ஒரு வயாக்ரா மாத்திரை
யாரையாவது துன்புறுத்தினாயா
சில மணிநேரங்ககளுக்குள்
சில மாதங்ககளுக்குள் யாரையாவது காயப்படுத்தினாயா
சில வருடங்களுக்குள்
யாரையாது வன்நுகர்ந்தாயா
கேள்விகள்
தாய்களில், தங்கைகளில், காதலிகளில் இருக்கும் பெண்களை விடுவிக்கலாம்
சொந்த ஆண்களில் இருக்கும் ஆணைக் கொல்லலாம்
உடனடி காரணமாக அன்பை சொல்லலாம்
அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிப் பார்க்கலாம்
2.PRETENSES

That he had seen
in the droplet of tear
fallen between the wine-cup and the lip
my replica begging for Love
he vowed.
That made me cry all the more
I liked him then
when he said
that he understood everything
I had left unsaid.
Thanks to the cup he brought
the wine got its companion.
Better to allow ourselves
to go with the flow of life
and that it is good to believe only that
which we see with our own eyes
ahead
on rising our head
he said.
For the only reason of his hand
caressing my head
I nodded.
As the fingers stroked in the manner of unravelling
the entangled lifelines of the palm
The body thirsting for touch
sobbed as the mother bird
that has lost its chick.
Cups brimmed.
Between alien and known
how so many a colourful light
Along the pathways of night
Love runs stark naked
The knock being heard
could be right on your door.
பாவனைகள்
மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும்
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில்
அன்பை யாசித்து நிற்கும்
என் பிரதிமையை கண்டதாக
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது
நான் எதுவும் சொல்லாமலேயே
எல்லாம் விளங்குகிறது
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால்
மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன்
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல
கைவிரல்கள் வருடியதும்
தொடுதலுக்கு பசித்த உடல்
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது
கோப்பைகள் நிறைந்தன
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும்
இடையே எத்தனை வண்ண விளக்குகள்
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம்

_ லீனா மணிமேகலை 

(3)

[*இந்தக் கவிதையை கூகுளில் பார்த்தேன். மொழிபெயர்க்கத் தோன்றியது. பசி என்ற சொல்லுக் குரிய மேலதிக அர்த்தத்தை HUNGER என்ற சொல் ஓரளவு ஈடுசெய்துவிடுகிறது. ஆனால், இதில் வரும் நிர்வாணம் என்ற ஒரு வார்த்தையின் இரண்டு அர்த்தங்களைத் தரும் இணைச்சொல்லை ஆங்கிலத் தில் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. இது என் மொழியறிவு சார் போதா மையா அல்லது இலக்குமொழியான ஆங்கிலத்தின் போதாமையா தெரிய வில்லை. அதனாலேயே இந்தக் கவிதையின் அடர்வும் ஆழமும் மொழிபெயர்ப் பில் நீர்த்துப் போய்விட்டதுபோல் ஓர் இழப்புணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.]
HUNGER
In the end
the police officer
apprehended my
Poem and dragged it away.
During interrogation
He had his eyes tied
For he felt terribly afraid
of facing my naked poem
As my poem has admitted that
its foremost mission is to cause
transgressions
passing order that there would be penalty
or detention
but no bail for certain
he is now closing not just his eyes
but ears also.
The new meanings of the words
uttered by my poem
jolted him, it seems.
Having no money to pay the penalty
and imprisoned
my Poem
was stringing the bars
and singing soulfully forever
As days passed
the other prisoners
too shed their attires
and the new language coming into vogue
among them
turned the officials deranged.
The madness that gripped the prison
gradually spread all over the city.
In the city that has attained ‘Nirvana’
since then
No State
No family
No Culture
No coins, no sales
No Crime nor Punishment.

பசி
இறுதியில்
காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்
விசாரணையின் போது அவர் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண
அவருக்கு அச்சமாக இருந்ததாம்.
குற்றங்கள் விளைவிப்பதே
தன் தலையாயப் பணி என்பதை
என் கவிதை ஒத்துக் கொண்டதால்
அபராதம் அல்லது சிறைத்தண்டனை, பிணை இல்லையென்று
ஆணையிட்ட நீதிபதி
தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்
என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்
அவரை திடுக்கிடச் செய்தனவாம்
அபராதம் கட்ட பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளை களைந்தனர்
அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்
அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்
சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்
மெல்ல நகரமெங்கும் பரவியது
நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்
அதன்பிறகு
அரசும் இல்லை
குடும்பமும் இல்லை
கலாசாரமும் இல்லை
நாணயங்களும்இல்லை விற்பனையும் இல்லை
குற்றமும் இல்லை
தண்டனையும் இல்லை

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE