A POEM BY
IYARKKAI
Translated into English by latha Ramakrishnan(*First Draft)
before arriving here
That’s why
on reaching the ground
thoroughly fatigued
lies all stretched _
The Rain.
***
The Rain that stops with the leaves
seeing the droplet brimming on the grass-blade
laments
‘O you have gone that far
Tell it
Please tell it all’
But what at all can a lone word do
being confronted with such a massive
silence.
***
Upon the soft little heat of hatching
with a sense of guilt
falls the Rain.
***
Devarasu who runs again and again
placing vessels
looks at the entrance.
Giving a thorough waterwash to the
palymra fruit-wagon
the Rain seeks pardon.
***
The ordeal of somehow shoving and
The ordeal of somehow shoving and
bringing along
the hapless puppy that keeps moaning,
and leave it at last inside
the flower-shop wooden box
goes well beyond midnight
to the Rain.
மழை
ஒரு சில விஷயங்கள் சொன்னது
**************************
- இயற்கை
☔
எத்தனை இலைகளைத் தாண்டி
வரவேண்டியிருக்கிறது
அதனால்தான்
தரைக்கு வந்தவுடன்
அசதியில்
அப்படியே படுத்துக்கொள்கிறது
மழை.
☔
இலைகளோடு
நின்றுவிட்ட மழை
புல் நுனியில் திரண்டிருக்கும் துளியிடம்
அத்தனை தூரம் சென்றுவிட்டாய்
சொல்லிவிடு
சொல்லிவிடு
என்று அரற்றுகிறது
ஆனால் அத்தனை பெரிய மௌனத்திடம்
ஒரு சொல்
என்ன செய்துவிடமுடியும்.
☔
அடைகாக்கும்
சின்னஞ்சிறு
சூட்டின்
மேல்
குற்றவுணர்வுடனே
விழுகிறது
மழை.
☔
ஓடியோடி
பாத்திரங்கள் வைக்கும் தேவராசு
வாசலைப் பார்க்கிறான்
பனங்காய் வண்டியை
வாட்டர் வாஷ் செய்து
மன்னிக்கக் கோருகிறது
மழை.
☔
திக்கற்று
முனகும் நாய்க்குட்டியை
ஒருவழியாக
தள்ளிக்கொண்டு வந்து
பூக்கடை மரப்பெட்டிக்குள் விடுவதற்குள்
நள்ளிரவுத் தாண்டிவிடுகிற்து
மழைக்கு.
No comments:
Post a Comment