INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

NESAMITHRAN

    A POEM BY

NESAMITHRAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

I am entering into the Time-phase
where just as prayers turning invalid
grievances too turn null and void
No curse upon thee
Nor any misgiving against me
As the old man who has stopped
bolting the door
while sleeping
I have become one
with secrets none.
Just one thing is there to convey:
The fortune of flying backward is
bestowed on hummingbirds alone.

பிரார்த்தனைகள் காலாவதி
ஆவது போலவே புகார்களும்
காலாவதி ஆகிவிடும் காலத்திற்குள்
நுழைந்து கொண்டிருக்கிறேன்
உன் மீது எந்த சாபமும் இல்லை
என் மீதும் எந்த வருத்தமும் இல்லை
உறங்கும் போது
கதவை தாழிட்டுக் கொள்வதை
நிறுத்திக் கொண்டுவிட்ட
முதியவனைப் போல
இரகசியங்களற்றவனாகி விட்டேன்
சொல்வதற்கு ஒன்றுண்டு
பின்னோக்கிப் பறத்தலானது
தேன்சிட்டுகளுக்கு மட்டும்தான்
வாய்த்திருக்கிறது.
நேச மித்ரன்


DANISHKARAN KANDASAMY

  A POEM BY

DANISHKARAN KANDASAMY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

WORDS CARRYING WEAPONS
About getting accustomed to living inside fire
we were discussing.
Surfacing all too suddenly from a familiar direction
blocked us some words aflame.
The words that were surrounding us till then
turned silent.
A little apprehensive
we were looking at each other.
In a flash the heat shrouding us burnt our skin
Tomorrow also the same fire would burn
We would also turn silent
The words with us would move a little away
Then for a long time
are but the clock hands alone
would be chitchatting
Tik …Tik…. Tik
You who are reading this poem now
sometimes you may have research-findings
on how to remove burning words.
We too have.
Some words would burn…
Some words would prove cold….
But never ever their names
are Fire or Snow, you know….

ஆயுதமேந்தும் சொற்கள்

நெருப்பினுள் வாழப் பழகுதல் பற்றி
உரையாடிக்கொண்டிருந்தோம்
தெரிந்த திசையொன்றில் இருந்து
தீடிரென வந்து எங்களை இடைமறித்தன
வெப்பம் நிறைந்த சில சொற்கள்
அதுவரையிலுமாக எங்களை சுற்றி இருந்த சொற்கள்
அமைதியாகின
சற்றே சலனத்தோடு
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்
சொடுக்கும் நேரத்துள் தோலைச் சுட்டது எங்களை சூழ்ந்த வெப்பம்
நாளையும் அதே நெருப்பு சுடும்
நாங்கள் அமைதியாவோம்
எங்களிடமிருக்கும் குழிர்நிறை சொற்கள் சற்று அகலும்
பின் நீண்ட நேரத்துக்கு டிக் டிக் என
பேசிக்கொண்டிருக்கப்போவது
கடிகாரத்தின் முட்கம்பிகள் மட்டும்தான்
இப்போது இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களிடம்
சிலவேளைகளில் சூடான சொற்களை அகற்றுவது பற்றிய ஆய்வுக்குறிப்புகள் இருக்கலாம்,
எங்களிடமும் இருக்கின்றன.
சில சொற்கள் சுடும்
சில சொற்கள் குளிரும்
ஆனால் ஒருபோதும் அவற்றின் பெயர்கள் தீயோ பனியோ அல்ல.
All reactions:
K

MARI MAHENDRAN

A POEM BY
MARI MAHENDRAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Every time they said the same tale
and so stole my vote.
To keep me oblivious of the way I am being cheated
Every now and then they would sprinkle as magical seed
a poisonuous weed.
For me too
despite being aware of being taken for a ride
unable to escape the bizarre net
I remain an invalid vote.
When all is over
and the play is once again restaged
I realize how vicious these performers are.
That till date
not once have I cast my vote
for my own sake
is something I never knew before
But
Let them come this time
as ever
they would know better.
i will cast my vote
meant for my future prospect.

ஒவ்வொரு முறையும் ஒரே கதையை சொல்லி தான் எனது ஓட்டை திருடினார்கள்...
நான் ஏமாற்றப்படுவதை எனக்கு தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு வஞ்சகத்தை மாய விதை போலவே தூவி விடுவார்கள்..
எனக்கும் என்னை ஏமாற்றி தான் எனது ஓட்டை எடுக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட அந்த மாய வலையில் இருந்து நான் மீண்டு வர முடியாது ஒவ்வொரு முறையும் அவர்களிடம் தோற்றுப்போன ஓட்டாய் கிடக்கிறேன்..
எல்லாம் முடிந்து மறுபடியும் நாடகம் தொடரும் போதுதான் இந்த நடிகர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்று உணர்கிறேன்..
இதுவரை நான் எனது ஓட்டை ஒரு முறை கூட எனக்காக வாக்கு அளித்தது இல்லை
என்பது மட்டுமே இதுவரை எனக்கு தெரியாது போன செய்தி..
ஆனால்
இம்முறை
அவர்கள் வரட்டும்
எனக்கான
ஓட்டை இந்த முறை வாக்களித்து வருவேன்..

மாரி மகேந்திரன்
All reactions:

IYARKKAI

A POEM BY

IYARKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THANKS TO THUNDERSTORM

How so much of shrunken leaves

How so many a twig

This green tree had
For shedding off all things unnecessary
A thunderstorm is essential, it seems.
For shaking one or two leaves at first
And then shaking their ribs
And their
And their branches
For taking steps with composure
and to seize it lock stock and barrel
a thunderstorm is indeed essential, it seems
A bird would soar above
A piece of paper would do the same
A bird would be reaching its nest
A piece of paper would be reaching its ground
For understanding the heights
A thunderstorm is indeed essential, it seems.
When the announcement came asking the people
to move to safer places
A woman not an insider of the people
stretches out the roadside roof and ties it taut
When the comments were being made
that the people have suffered heavy loss
She loosens her roof and folds it
For being smart
in the hour of haste
A thunderstorm is indeed essential, it seems.

இயற்கை
நன்றி புயலே
**************
- இயற்கை

எவ்வளவு சருகையும்
எவ்வளவு சுள்ளிகளையும்
இந்தப் பச்சை மரம் வைத்திருந்திருக்கிறது
தேவையற்றதை உதறிப் போட
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது.
முதலில் ஒன்றிரண்டு இலைகள் அசைத்து
அவற்றின் ஈர்க்குகள் அசைத்து
அவற்றின் சிமிருகள் அசைத்து
அவற்றின் கிளைகள் அசைத்து
அவற்றின் மரம் அசைத்து...
நிதானமாய் அடியெடுத்து ஆட்கொள்ள
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது.
மேலெழும்பும் ஒரு பறவை
மேலெழும்பும் ஒரு காகிதம்
கூடடையும் பறவை
தரை சேரும் காகிதம்
உயரங்களைப் புரிந்துகொள்ள
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவிப்பு வந்தபோது
பொதுமக்களுள் இல்லாத ஒருத்தி
சாலையோரக் கூரையை இழுத்துக் கட்டுகிறாள்
பொதுமக்களின் இழப்பு பெரிதென பேசிக்கொண்டிருக்கையில்
அவள் தனது கூரையைத் தளர்த்தி சுருட்டி வைக்கிறாள்
வேகத்தில் புத்தியோடிருக்க
ஒரு புயல் அவசியம்தான் போலிருக்கிறது

MARUTHU PANDIAN

 TWO POEMS BY

MARUTHU PANDIAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. FLOATING IN THE RIVER
From this river can’t separate
Yesterday Today Tomorrow
Whether to swim across the river and reach the shore
Or flow along its course
I wonder
If to do just what we know I can easily drown
The legs of storks
though planted firmly inside the water,
their eyes would remain floating
watching the being of fish
With their sharp beaks they lift the fish
that went along the river’s flow.
For compensating the murder of a fish
according to the Butterfly Effect Theory
I may float in the river.
In wild flood can’t swim can’t float
The flood that hauls everything in its deluge
would drag along the banks also
If some word is accessed clinging to it
can float valiantly.
Just one hope-instilling word
Loaded with Love
Or abuse unleashed.

நதியில் மிதத்தல்
இந்த நதியிலிருந்து நேற்று இன்று நாளையைப் பிரிக்க முடியவில்லை.
ஆற்றின் குறுக்கே நீந்தி கரை ஏறுவதா அதன் போக்கில் போவதாதெரியவில்லை
தெரிந்ததை மட்டுமே செய்ய வேண்டுமெனில் என்னால்
எளிதாக மூழ்க முடியும்
கொக்குகளின் கால்கள்
நீருக்குள் இறுகப் பற்றி இருந்தாலும், கண்கள் நீரில் மிதந்தபடி
மீன்களின் இருப்பைக் கவனிக்கின்றன.
கூரிய அலகில் கொத்தித் தூக்குகின்றன நதியோடு போன மீன்களை. .
ஒரு மீனின் கொலையை ஈடு செய்ய பட்டாம்பூச்சி சிறகடிப்பு தேற்றப்படி
நான் நதியில் மிதக்கலாம்.
காட்டாற்று வெள்ளத்தில் நீந்தவும் முடியாது. மிதக்கவும் முடியாது
அடித்துச் செல்லும் வெள்ளம் கரைகளையும் இழுத்துச் செல்லும்.
ஏதாவது ஒரு சொல் கிடைத்தால் பற்றிக் கொண்டு வீராப்பாய் மிதக்கலாம்..
ஒரே ஒரு நம்பிக்கைச் சொல்
காதல் பொதிந்தது
அல்லது வசவு நிறைந்தது

- மருது பாண்டியன் -


(2)

He who set to motion the Love
didn’t realize that the Love of a zero
would begin from a point and
moving ahead in a circular motion
would end in that point itself..
That Love ascending into a half circle
then descending
in a half circle
ended.
Drawing a map of its journey
He referred it as 0.
He who translated it into English
called it ‘Zero’.
‘As it had commenced from the eye
and concluded in tears
Theorem is correct’
_ observed the Mathematician.
‘Rivers would always voyage downwards’
said a naturalist.
‘Spherical globe
‘would take you to the same spot from where you start’ -
Said the Geologist.
‘World in a Nutshell
Nutshell, World
Love has its own course’ -
The spiritualist observed.
‘In a collective crime
a single person can’t file a complaint’ -
So observing the judge dismissed the case.
Not giving any message
ended thus
this moral story, as always.

Maruthu Pandian

ஒரு ஜீரோவின் காதல்
ஒரு புள்ளியில் ஆரம்பித்து
அதே புள்ளியில் வந்து
வட்டமாய் முடிவடையும் என்பது
அந்தக் காதலைப் புரிந்தவனுக்குப்
புரியவில்லை...
அந்தக் காதல்
அரை வட்டத்திற்கு மேலேறி
பின் கீழிறங்கி
அரை வட்டமடித்து
முடிந்து போனது..
அதன் பயணத்தை
வரைபடமாய் வரைந்தவன்
' 0 ' என்று குறிப்பிட்டான்.
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவன் ' ஜீரோ ' என்றான்.
கண்ணில் ஆரம்பித்து கண்ணீரில் முடிந்ததால் தேற்றம் சரிதான்
என்றான் ஒரு கணிதவியலாளன்
ஆறுகள் கீழ் நோக்கியே பயணிக்கும்
என்றான் ஓர் இயற்கையாளன்
புவி உருண்டை புறப்பட்ட
இடத்திற்கே
கொண்டு வந்து சேர்க்கும் என்கிறான்
புவி ஆய்வாளன்
அண்டத்தில் பிண்டம்
பிண்டத்தில் அண்டம்
காதல் அதன் போக்கில்
என்றான் ஆன்மீக வாதி.
கூட்டுக் குற்றத்தில்
ஒரு குற்றவாளியின்
பிராது செல்லாது
விசாரிக்க முகாந்திரம் இல்லை
என கை விரித்தான் நீதிமான்
எந்த நீதியையும் போதிக்காது
இப்படித்தான் முடிந்து போயிற்று
இந்த நீதிக் கதை..
- மருது பாண்டியன்



SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY 

SHANMUGAM SUBRAMANIAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

It got delayed to set out from the spot
where the journey began
While seeing en route to the destination
Nothing in hand.
Ere I could rise, in front
Innumerable were there
Only after counting it all
resolving not to miss anything
had I left
Half way remains as yet
Before taking a step forward
as if to inspect the spot of start
the legs rotate.
If the place where I head
becomes half the distance ahead
Then I might lose the rest.
What all were there apart from me
A mug with water half-gulped
The touch-screen of the cell never once shone the whole of today.
The soft footwear worn inside the house.
The door of the room a few inches unclosed
The dialogue taking place on the other side of the wall.
The hollowness of the sitting place
Now I have come here
Inside the dark of the keyhole
when the key swirls and comes to a stop
the passage en route would return
as the specific moment of leaving without taking leave.

பயணத்தைத் துவக்கிய இடத்தைவிட்டு
கிளம்ப தாமதமாகிவிட்டது
சேருமிடத்திற்கு நடுவழியில் பார்க்கையில்
கைவசம் ஒன்றுமில்லை
எழுந்திருக்கும் முன்னர் எதிரே
கணக்கிட முடியாதவை இருந்தன
ஒன்றைக்கூட விடக்கூடாது என்று எண்ணிய பின்னர்தான் வெளியேறினேன்
இன்னும் பாதிவழி மிச்சமுள்ளது
ஒரு அடி முன்னே செல்லுமுன்
கிளம்பிய இடத்தை பரிசோதிக்க திரும்புபடி
கால்கள் திரும்புகின்றன
செல்லுமிடத்தின் தூரம் பாதியானதால்
மிதத்தை இழக்க நேரிடலாம்
என்னைத்தவிர அங்கு எவையெல்லாம் இருந்தன
பாதிபருக்கப்பட்ட நீருடன் ஒரு குவளை
இன்றுமுழுதும் ஒருமுறைகூட ஒளிராத கைபேசி திரை
விட்டிற்குள் அணியும் மெத்தென்றிருக்கும் காலணிகள்
சில அங்குலமே சாத்தாமலுள்ள அறைக்கதவு
சுவருக்கு அப்பக்கம் நிகழும் உரையாடல்
அமர்விடத்தின் வெறிச்சோடல்
இப்போது இங்கு வந்துவிட்டேன்
கதவின் சாவித்துவாரத்து இருளுக்குள்
திறவுகோல் சுழன்று நின்றுவிட்டதும்
இடைப்பட்ட வழி மீளும்
சொல்லிவிட்டு கிளம்பாத குறிப்பிட்ட தருணமாய்.
- எஸ். சண்முகம் -

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE