INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 9, 2023

FAIZA ALI

A POEM BY

FAIZA ALI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

CHAMELION
At one corner of the backyard fence
Close to the ‘Mulmurukkai’ quivering
With clusters of blossoms in blood-red
another anonymous ripe short tree
Having green leaves so dense as flowers.
I look at it keenly
Another green leaf
Swaying
At the crest
Ho, this is chameleon –isn’t it!
A wonderful species
Beyond any comparison
With the meanness of scheming humans
changing colours
Poor thing
Wandering everywhere
to appease its hunger
Two spiders
or
three butterflies
would have sufficed
to cool its little stomach
secreting scorching acid.
Could it be that it has lost its eyes
that can move on their own
and the long tongue which it plays with
stretching out and sucking inside..
Its search goes on….
With the rough bark grazing the skina
as it comes down
shedding off its luscious green
It turns into the Ochre shade
of the tree trunk.
At the hour of sunset…..
Despite knowing very well
that walking with the nails toppling
would be indeed difficult
with its face filled with the anguish of
waiting for too long
it began creeping on the land
in the hue of sand
In this dense tree spread out so graciously
can’t there be even a grasshopper stuck
to feed its hunger
In the joyous squeal of a pair of squirrels
chasing each other
my contemplation is cut short
Ha _
That it does have a life beyond its belly
How could I forget completely?
Aaliya Aaliya

பச்சோந்தி
பின்வேலியோரமாய்
இரத்தச்சிவப்பில்
கொத்துப் பூக்களுடன்
சிலிர்க்கும் முள்முருக்கையருகில்..
பசியஅடரிலைகள்
பூவாய் செறிந்திருக்கும்
இன்னுமொரு
பெயரறியா
முற்றிய சிறுகுட்டைமரம்.
உற்றுப்பார்க்கிறேன்...
உச்சாணிக் கந்தில்..
அசையும்
இன்னுமொரு பச்சிலை.
ஓ..இதுதான் பச்சோந்தியோ..!
அற்ப மானிடரின்
நிறமிழக்கும் துர்க்குணங்களின் ஒப்பீடுகள் பொருந்தா
அற்புதப் பிராணி.
பாவம்
பசிக்காய் அலையும்
பரிதாப ஜீவன்.
ரெண்டு சிலந்திகளோ...
மூன்று பட்டாம்பூச்சிகளோகூடப்
போதுமாயிருந்திருக்கும்...
எரியமிலம் சுரக்குமதன்
குட்டி வயிற்றுக்கு.
சுயாதீனமாய் நகர்த்துதிறனுடனான கண்களையும்..
வெளியெறிந்து வேட்டையாடும்
நீள்நாவையும்..
எங்கேனும் தொலைத்திருக்குமோ..
தேடல் மட்டும் முடிவதாயில்லை.
சொரசொரவெனப் பட்டை
உடலுரசக் கீழிறங்கையில்..
தளதளப்பச்சை களைந்து
அடிமரக் கருங்கபில
அவதாரம்.
கதிர்
மங்கத் தொடங்கிய வேளை....
நகங்களின் இடரலில்
நடத்தல் கடினமென அறிந்தும்...
நீள் காத்திருப்பின்
மென்சோகமுறை முகந்தாங்கி தரையூரத் தொடங்குகிற்று மண்ணிறத்தில்.
சாகியமாய் விரிந்திருக்கும் இவ்வடர் தருவிலொரு
வெட்டுக்கிளி கூடவா ஒட்டியிருந்திருக்காததன்
பசியாற்ற..
ஒன்றையொன்று துரத்தும்
சோடி அணில்களின் குதூகலக்குரலில் சிந்தனை கலைகிறது..
அட..
வயிறு தாண்டிய வாழ்வொன்றும் அதற்குள்ளதை
எங்ஙனம்
மறந்தேன் நான்..!

எஸ். ஃபாயிஸா அலி.

LEENA MANIMEKALAI

 THREE POEMS BY

LEENA MANIMEKALAI

Translated into English by Latha Ramakrishnan(*first Draft)(1)

In my vial
the green had gone down.
Trees and jungles
Sprouted densely anon.
In my vial
Blue had leaked
The Sea and the Sky
have spread out
In my vial
Hues lay blended
Fertile soil and humaneness
have sprung in abundance
My vial lay broken

Earthquake and landslides
have erupted
My vial was gone
A new continent
was born.

என் குப்பியில்
பச்சை குறைந்திருந்தது
மரமும் கானகமும்
அடர்ந்தெழுந்தன
என் குப்பியில்
நீலம் கசிந்திருந்தது
கடலும் ஆகாயமும்
படர்ந்திருந்தன
என் குப்பியில்
வண்ணம் குழைந்திருந்தன
மண்ணும் மனிதமும்
விளைந்திருந்தன
என் குப்பி
உடைந்திருந்தது
பூகம்பமும் சரிவும்
வெடித்திருந்தன
என் குப்பி
காணாமல் போயிருந்தது
புதிய கண்டம்
பிறந்திருந்தது.

(2)
Time and Heart travel
in different directions
Life goes on
feigning as destinations
mere speed-breakers - Alas....
காலமும் மனதும்
இருவேறு திசைகளில்
பயணிக்கிறது
வெறும் வேகத்தடைகளை
இலக்குகளென
பாசாங்கு செய்துகொள்கிறது
வாழ்க்கை.

(3)
Proximity is being keenly watched
By betrayal
calculating the precise moment to cause a downfall
Whether to continue
or bid adieu
The Depth of Love - that
Time alone has down pat.
நெருக்கத்தை துரோகம்
உற்றுப் பார்த்துக்கொண்டே
இருக்கிறது
வீழ்த்துவதற்கான
நேரத்தைக் கணித்தபடி
நிகழ்வதோ தள்ளுவதோ
அன்பின் ஆழமெல்லாம்
காலத்திற்குத்தான்
அத்துப்படி.


THENMOZHI DAS

   TWO POEMS BY

THENMOZHI DAS


1. MOTHER FREQUENTS MY DREAM

As returning home
As stitching new attire for the globe
As the water bestowing hues on flowers
As a voice sans body singing the names
of its offsprings
As one accessing words from rocks
As one carrying balm to Sun’s teeth
As sprinkling the water of mountain spring
to our abode
As holding in time the trees felled
As huddled inside firefly’s belly as
disheveled glow
As scattering seeds
As statue
As one drawing hungers as Cross
As one folding the space into a walking stick
As shoot of betel plant
As one breaking apart Death
As eyes upon the threshold staircase
As kisses on the forehead-crest
As the quietude of butterfly
As standing in dancing postures
As aligning the stars
As holding the flaming forest in her right hand
As holding the winter season in her left hand
Mother frequents my dreams.

அம்மா கனவில் வருகிறாள்
வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக
பூமிக்கு புதிய வஸ்திரம் தைத்துக் கொண்டிருப்பதாக
பூக்களுக்கு சாயமேற்றும் நீராக
இரத்தத்தில் வழுக்கி விழுவதாக
தனது பிள்ளைகளின் நாமங்களைப் பாடும்
உடலற்ற குரலாக
வார்த்தைகளைப் பாறைகளிலிருந்து எடுப்பவளாக
சூரியனின் பற்களுக்கு தைலம் கொண்டு செல்வதாக
வீட்டுக்கு மலையூற்று நீர் தெளிப்பதாக
வீழும் மரங்களை தாங்கிப் பிடிப்பதாக
மின்மினியின் வயிற்றில் ஒளியாய் கசங்குவதாக
விதைகளாகிச் சிதறுவதாக
சிலையாக
பசிகளைச் சிலுவையாக வரைபவளாக
வெளியை கைத்தடியாய் சுருட்டுவதாக
வெற்றிலைக் கொடியின் குருத்தாக
மரணத்தை ஒடிப்பதாக
வாசல்படியில் கண்களாக
உச்சி வகிடில் முத்தங்களாக
பட்டாம்பூச்சியின் அமைதியாக
முத்திரைகளில் நிற்பதாக
நட்சத்திரங்களை ஒழுங்கு செய்வதாக
அக்கினிக் காட்டை வலக்கரத்தில் ஏந்தியவளாக
இடக்கரத்தில் குளிர்காலத்தை தாங்குவதாக
அம்மா கனவில் வருகிறாள்

- தேன்மொழி தாஸ்


2. . ZEBRA CLOUDS

Far Far away
You are voyaging
Heart’s fasteners
have come off here
Your words keep speeding along
heart’s arteries
The dusky sky has begun
gulping the bronze-emulsion of the
Sun.
The clouds wandering as zebras
born with hues and shades dense
How do they appear in your course
As rain droplets entering the sea
in search of salt
I too fall searching all that
Except rolling the hours of this night
into tiny ‘Eecham’ balls and relishing
nothing else I can do.
Just as the point of earth’s axis rotating
remains unseen to all eyes
Let our love thrive
remaining hidden always.
The hopes shared with me
I clothe it with
at the onset of each day, you see.
On the day when you realize
that the warmth of my embrace
even the Moon cannot replace
You would fold the sky
as our love-letter, Oh My!
Thenmozhi Das
வரிக்குதிரை மேகங்கள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தூர தூரத்தில்
நீ பயணித்துக் கொண்டிருக்கிறாய்
இதயத்தின் திருகாணிகள்
இங்கே கழன்று விட்டன
உனது சொற்கள் இதயத்தமனிகளில்
விரைந்து கொண்டேயிருக்கின்றன
சூரியனின் வெங்கலக்கரைசலை
அந்தி வானம்
அருந்தத் துவங்கிவிட்டது
வண்ணமேறி பிறந்த வரிக்குதிரைகளாய் அலையும் மேகங்கள்
உனது வழியில் எப்படித் தெரிகின்றன
மழையின் துளிகள்
உப்பைத் தேடி கடலுக்கு நுழைவதென நானும்
தேடி வீழ்கிறேன்
இவ்விரவின் மணித்துளிகளை
ஈச்சம்பழங்களாய் உருட்டி
எண்ணிச் சுவைப்பதைத் தவிர
வேறு வழியில்லை
பூமியின் அச்சு சுழலும் புள்ளி
யார் கண்ணிலும் படாமல் இருப்பதைப்போல்
நமது காதல் மறைந்தே வாழட்டும்
என்னிடம் பகிரப்பட்ட நம்பிக்கைகளை
நாட்கள் பிறந்ததும் அதற்குப் போர்த்துகிறேன்
எனது அணைப்பின் கதகதப்பை
நிலவினாலும் தரயியலாது என உணரும் நாளில்
நீ வானத்தை
நம் காதல் கடிதமென மடிப்பாய்.



A POEM BY NESAMITHRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I am entering into the Time-phase
where just as prayers turning invalid
grievances too turn null and void
No curse upon thee
Nor any misgiving against me
As the old man who has stopped
bolting the door
while sleeping
I have become one
with secrets none.
Just one thing is there to convey:
The fortune of flying backward is
bestowed on hummingbirds alone.
நேச மித்ரன்
பிரார்த்தனைகள் காலாவதி
ஆவது போலவே புகார்களும்
காலாவதி ஆகிவிடும் காலத்திற்குள்
நுழைந்து கொண்டிருக்கிறேன்
உன் மீது எந்த சாபமும் இல்லை
என் மீதும் எந்த வருத்தமும் இல்லை
உறங்கும் போது
கதவை தாழிட்டுக் கொள்வதை
நிறுத்திக் கொண்டுவிட்ட
முதியவனைப் போல
இரகசியங்களற்றவனாகி விட்டேன்
சொல்வதற்கு ஒன்றுண்டு
பின்னோக்கிப் பறத்தலானது
தேன்சிட்டுகளுக்கு மட்டும்தான்
வாய்த்திருக்கிறது.

MALINI MALA

 A POEM BY 

MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE ONE AND ONLY WORD
As a strand of feather that wanders
Bearing the memories of
Withered bird
Between emotion and lips
Wanders
That lone word.
There was a time when you
Eagerly hoping that I would let it go
with your ears glued to my lips
feeling restive in the angst of Love Supreme
as the tail of punishment
of the lone word not uttered
stretched the traumas and travails of
my life.
Even now in rainy nights
I glance at the sky.
Observe all too keenly
with the hope that
of the numerous drops I catch in my hand
You would have sent along
that One and Only Word
I keep craving for and look forward.
But
shooting straight out of the larynx
soaring across the cosmos atop
as pain unbearable of this very birth
wanders nonstop
untouched by lips
the One Word
One and Only Word

ஒரே சொல்
.........................
உதிர்த்த பறவையின்
நினைவுகளைச் சுமந்தலையும்
இறகொன்றினைப் போல,
உணர்வுக்கும் உதட்டுக்குமிடையில்
அலைந்து கொண்டிருக்கிறது
ஒரு சொல்.
நான் அதை
உதிர்த்து விடுவேன் என்பதாக என்
உதடுகளில் காது பொருத்தி
பேரன்பின் பெருந்தவிப்பில் நீ
காத்துக் கிடந்த
காலமொன்றிருந்தது.
உதிர்க்கப் படாத அந்த
ஒரே சொல்லின் தண்டனையின்
வாலென நீண்டன
என்னோடு வளர்ந்த
வாழ்வின் பாடுகள்.
இப்போதும்
மழைக்கால இரவுகளில்
வானம் பார்க்கிறேன்.
கையில் ஏந்தும் ஒற்றைத் துளியிலேனும்
நான் கேட்கத் தவித்திருக்கும்
ஒரே வார்த்தையேனும்
அனுப்பியிருப்பாயென
கூர்ந்து நோக்குகிறேன் .
எனினும்,
தொண்டைக் குழியிலிருந்து
அண்டவெளியெங்கும்
இப்பிறவியின் பெருவலியென
அலைந்து கொண்டேயிருக்கிறது
உதடு தீண்டாத அந்த
ஒரே சொல் ஒரேயொரு சொல்.

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE