INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

M.KALIDAS'S POEM

 A POEM BY 

M.KALIDAS



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Tea is not something having just

Aroma, Density, flavor.

While gulping a cup of tea

the warmth of tribal woman’s palm

gets inside.

The scattering sound of the droplet

slipping out of her sweater

the song of a bird unknown

has devoured.

From the jeep that goes past her

‘Sarathbabu’ lets slip

a ‘Thazhampoo’.

The nose-ring of her who smiling softly

casts a backward glance

the twilight Sun strokes again and again

making it sparkle in all radiance.

Another tribal lass lay there as dregs

poured out of their commercial cup

that inhales from the flavoured aroma

a pinch of vapour and gulp lust.

That inside the bracket of 

high quality tea packets

heaped in cartons

local taxes also included

Guests unexpected

avoid as usual.



மணம், திடம், சுவை மட்டும்
கொண்டதல்ல தேநீர்.

கோப்பைத் தேநீரை அருந்தும் போது மலைவாசிப் பெண்ணின்
உள்ளங்கைச் சூடு
உள்ளுக்குள் இறங்குகிறது.

குளுமையைப் போர்த்திய
அவள் ஸ்வெட்டரிலிருந்து நழுவும் துளி, பள்ளத்தாக்கில் தெறிக்கும் ஓசையை விழுங்கிவிட்டது
பெயர் தெரியாப் பறவையின் கீதம்.

அவளைக் கடந்து செல்லும் ஜீப்பிலிருந்து சரத்பாபு செந்தாழம்பூவைத் தவறவிடுகிறார்.

மெலிதாய்ப் புன்னகைத்துத்
திரும்பிப் பார்ப்பவளின் மூக்குக்குத்தியைத்
தடவித் தடவி மெருகேற்றுகிறது
அந்திச் சூரியன்.

சுவையூட்டப்பட்ட நறுமணத்திலிருந்து
ஒரு சிட்டிகை ஆவியை உறிஞ்சிக் காமத்தைப் பருகும், அவர்களின்
விளம்பரக் கோப்பையிலிருந்து கொட்டப்பட்ட சக்கையாகக் கிடக்கிறாள்
வேறொரு மலைவாசி.

பெட்டி பெட்டியாக அடுக்கப்படும்
தரம் மிக்க தேயிலைப் பொட்டலங்களின் அடைப்புக்குறிக்குள்
உள்ளூர் வரிகளும் உள்பட்டிருப்பதை வழக்கம் போல் தவிர்க்கிறார்கள்
திடீர் விருந்தாளிகளும்
.

- மா. காளிதாஸ்
 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024