INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

NATCHATHRA (RA. VINOTH)'S POEM

 A POEM BY 

NATCHATHRA (RA. VINOTH)


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

PEBBLES

For a stone to change into pebble
It goes past thousands of river bends and curves
And plant itself as a sculpture
eaten by waterbeds.
As the tear drops of the tips of stones
still wet
banging against giant rocks
hues myriad
as the tinge of Thaazhai’ flower
‘Arathi’ green
‘Kathirpedhir’ White…

Sky blue fog spreading
with the trails of the bees’ wings buried
River’s depth
Waterfall’s height
so it sounds as the child’s voice
stuck in its throat
despite the passage of years.

They shifted Nature into a
plastic flower-pot.
Yes
the ruby thrown in the fictional tale
now has in store
the final moisture of the
all dried up waterbed
mirage-filled.
O, please don’t dislodge it too.


NATCHATHRA (RA.VINODH)


கூழாங்கற்கள்

*****************
ஒரு கல்
கூழாங்கலாக மாற
ஆயிரமாயிரம்
நதிவளைவுகள் கடந்து
தன்னை
நீர்நிலைகள் கொறித்த
சிற்பமாக
பதியமிடுகிறது
பெரும் பாறைகளில்
மோதியுடைந்த
ஈரம் குறையா
கற்கள் முனையின்
கண்ணீர்த் துளிகளாகத்
தாழம்பூ வீழ்ந்த நிறம்,
கதிர்ப்பெதிர் வெள்ளை
அரத்திப்பச்சை
யென
வண்ணங்களுமாயிரம்,
வானீல மூடுபனி
படர்ந்து
தேனீக்களின்
சிறகுகள் புதைந்த
ரேகைகளோடு,
நதியினாழம்
அருவியின் உயரமென
வருடமாகியும் குரல்
வராமல் போன
குழந்தையின் குரலாக
ஒலிக்கிறது,
நெகிழி
செடித்தொட்டியினுள்
இயற்கையை
இடம் பெயர்த்தன
ஆம்,
புனையப்பட்ட கதையில்
எறியப்பட்ட மாணிக்கம்
தற்பொழுது
கானல் நீரால்
நிரம்பிய
வற்றிப்போன நீர்நிலையின்
இறுதி யீரத்தைப்
பிடித்து வைத்துள்ளன
அதனையும்
இடம் பெயர்த்து விடாதீர்கள்!

🖋️நட்சத்திரா~


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE