INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, September 3, 2020

VIKRAMADHITHYAN'S POEMS(3)

 THREE POEMS BY VIKRAMADHITHYAN

Transalted into English by Latha Ramakrishnan(*First Draft)


1. SOULFUL DEDICATION


This poem

If there is no objection in calling so

is public property.


Public properties are all for

utilizing by the people.

Those called the public
are the masses always.

In what way useful to the masses
this poem is

If bridge means
would help us go past

If bus means
can travel

Park
would provide us place to chitchat

Beach
would be to relish the wind and to love

What use this one’s poem
can be

The mass can’t understand it
Nor it would help in progress and
 
prosperity

What can the public do?


Please forgive
Unfortunately

nothing else He has

to give

Nothing wrong
Can use it to light the oven

or to pack the tooth powder

can use it in any way

Nothing wrong, 

nothing sinful


How at all can
an innocent hapless poet
serve the society……


ஆத்ம ஸமர்ப்பணம்


விக்ரமாதித்யன்


இந்தக் கவிதை

இப்படிச் சொல்வதில்
மறுப்பொன்றும் இல்லை என்றால்

பொதுச் சொத்து

பொதுச்சொத்து எல்லாம்
பொதுஜன
உபயோகத்துக்குத்தான்

பொது ஜனம்
எல்லாக் காலமும்
பாமர ஜனம்தான்

பொது ஜனத்துக்கு
எந்த வகையில் பிரயோஜனம்
இந்தக் கவிதை
பாலம் என்றால்
கடந்து போக உதவும்

பஸ் என்றால்
பிரயாணம் செய்யலாகும்

பூங்கா
கதை பேச இடந்தரும்

கடற்கரை
காற்று வாங்க, காதலிக்கவாகும்

இவன் கவிதை
எதுக்கு ஆகும்
பாமர ஜனத்துக்கு

சினிமா பாட்டு கூட
முணுமுணுக்க வாகாகும்

இவன் கவிதை
என்னத்துக்கு உதவும்

பொது ஜனத்துக்கு
விளங்கவும் செய்யாது
விருத்திக்கும் உதவாது

என்ன செய்வார் பொதுஜனம்

மன்னிக்க வேணும்
துரதிருஷ்டவசமாக
கொடுப்பதற்கு
வேறொன்றுமில்லை இவனுக்கு

குற்றமில்லை
அடுப்பெடிக்க
பல்பொடி மடக்க
எப்படியும் உபயோகிக்கலாம்
தப்பில்லை பாவமில்லை

சமூகத்துக்கு
எப்படித்தான் உதவுவான்
அப்பாவிக் கவிஞன்


2. DREAMS OF EMPIRE

Safe indeed
Inside each one’s crown
the head of one’s own.

(heads sans crowns
Nothing to feel ashamed of)

If asked the jester would
explain
without causing pain.

Small or big
There is an empire for everyone
Jungle mountain plateaus river plains – all

For 56 kings
An emperor.

He is big
this one is small
he is sweet

Archery
wrestling
verbal war

Sword clashes between foes
shields safeguards
strategic rows

Among those belonging to the
mutually beneficial circle
hosting of feasts
presenting awards
arranging for
sight-seeing foreign tours

Scheming and plotting
done mutually
royal tactics
capturing kingdoms

For one and all
separate realm throne
exclusive flag populace battalions

Still
afire all hearts
in dreams of empires,
historical eternities.



சாம்ராஜ்யக் கனவுகள்

விக்ரமாதித்யன்


பத்திரமாகத்தான் இருக்கிறது
அவரவர் கிரீடத்துள்
அவரவர் தலை.

(கிரீடம் இல்லாத தலைகளுக்கு
கேவலம் ஒன்றுமில்லை)

விதூஷகனிடம் கேட்டால்
விளக்கம் சொல்வான்
மனசு நோகாமல்)

சிறிதோ பெரிதோ
எல்லோருக்குமே இருக்கிறது ஒரு ராஜ்யம்
காடு மலை மேடு
நதி சமவெளி யெல்லாமே

56 தேச
அரசர்களுக்கு
ஒரு சக்கரவர்த்தி

அவன் பெரியவன்
இவன் சிறியவன்
அவன் இனியவன்

வில்வித்தை
மல்யுத்தம்
சொல் போர்

விரோதிகளுக்குள்
கத்திச் சண்டைகள்
கேடயக் காப்புகள்
வியூக வரிசைகள்

வேண்டியவர்களுக்குள்
விருந்துபசாரங்கள்
பரிசளிப்புகள்
நாடு சுற்றிக் காட்டல்கள்

ஒருவருக்கொருவர்
சதியாலோசனைகள்
ராஜத்ந்திரங்கள்
நாடு பிடித்தல்கள்
அத்தனை பேருக்கும்
தனித்தனி ராஜாங்கம் சிமாசனம்
தனித்தனிக் கொடி குடிபடைகள்

இருந்தும்
எல்லோர் மனசையும் தகிக்கும்
சாம்ராஜ்யக் கனவுகள்
சரித்திர நிரந்தரங்கள்.



3.OH MY FRIEND COMRADE BUDDY


What would you

safeguard?

The ten rupee note that mother gave you

applying the sacred ash on your forehead

and blessing you

on the first day of your employment

Wife’s photo

preserved inside the wallet

The letter of eldest son

who you love so very much

The translation of Kurunthogai verse

launched at London metro train

The lines of Mahamrithyunja Manthra

that you chanced to learn

Memories of

native town map

These are queries

born of concern

of He who has lost them all.




நண்பனே தோழனே சிநேகிதனே

எதை
பத்திரப்படுத்துவாய் நீ

முதன் முதலில் வேலைக்குப் புறப்படும் நாளில்
விபூதிபூசி அம்மா ஆசிர்வதித்துத் தந்த பத்துரூபாய்த்
தாளையா

மணிபர்ஸில் வைத்திருக்கும்
மனைவியின் போட்டோவையா

ஆசையாசையாய் நேசிக்கும்
மூத்த மகனின் கடிதத்தையா

லண்டன் பாதாள ரயிலில் வெலியிடப்பெற்ற
குறுந்தொகைப்பாடல் மொழிபெயர்ப்பையா

எதேச்சையாய் தெரிந்துகொண்ட
மகாமிருத்யுஞ்ஜ மந்திரவரிகளையா

சொந்த ஊர்
வரைபட ஞாபகங்களையா

எல்லாவர்றையும் தொலைத்துவிட்ட ஒருவனின்
கரிசனமிக்க கேள்விகள் இவை.

 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024