A POEM BY
NA.PERIYASAMI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
BIRTH
As the lone plant grown so tall
in the midst of a land well ploughed
as lines of red-soil drawn
She who stood as swaying sparkle
On seeing him coming with skin darkened
as shrunken crop
growing frantic
‘Alas such a handsome person
casting spell on everyone _
O, what am I to do’
So feeling anguished
rambling within
got into the pond
and became water.
With the droplets turning into birds
reaching the cloud
congestion proving unbearable
the sky began melting.
He got drenched
And began dancing softly
As one born anew.
Thrilled
the rain turned torrential.
பிறவி
ந.பெரியசாமி
செம்மண் கோடுகள் வரைந்தாற்போல்
உழுது கிடக்கும் நிலமொன்றின் மத்தியில்
வளர்ந்தோங்கிய ஒற்றை தாவரமாகி
அசையும் சுடரென நின்றிருந்தவள்
திருமேனி கறுத்து
வதங்கிய பயிராக
வந்தவனைக் கண்டதும்
அதிர்வுகொண்டு
காண்போர் மயக்கம் கொள்ளும்
தோற்றம் கொண்டவனாயிற்றே
என் செய்வேனென மனம் பிதற்றி
அருகிலிருந்த குளமிறங்கி நீரானாள்.
துளிகள் பறவைகளாகி
மேகத்தை அடைந்து கொண்டிருக்க
நெருக்குதல் தாளாது
கரையத் தொடங்கியது வானம்.
நனைந்தான்
புது பிறவி கொண்டு
மெல்ல ஆடத் தொடங்கினான்.
மகிழ்வில்
மழை வழுத்தது.
No comments:
Post a Comment