INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, November 6, 2022

IYYAPPA MADHAVAN

 POEMS BY

IYYAPPA MADHAVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

The quietude sans words
that Moon is able to bestow
I am unable to follow
Words all around
as cluster of fish
As the prey they seek
they bite the brain into pieces
as suits their whims and fancies
They terrorize me into trembling like
a human body exposed to chill
intolerable
How to remain like a phone
out of order
I wonder….
As crows that go around
carrying dead rats
these strangulating words
stay hovering
Shutting the world
should go seeking the solace of
the giant rock in the jungle
Underneath the ruined statue of Buddha
lying there abandoned
as an orphan
should bury myself deep down
The trance of the Moon seeping
through the branches
summons.
வார்த்தைகளற்ற மெளனத்தை வழங்கும் நிலவைப் போல்
இருக்க முடிவதில்லை
சுற்றிலும் குளத்தின் மீன் கூட்டம் போல் வார்த்தைகள்
சட்சட் என்று மூளையை
தான் தேடும் இரையைப் போல
குதறி வைக்கின்றன
குளிரில் நடுங்கும் உடலைப் போல
நடுநடுங்க வைக்கின்றன
தொடர்பு துண்டிக்கப்பட்ட
தொலைபேசியைப் போல
எங்ஙனம் இருப்பதென்று
தெரியவில்லை
செத்த எலியைத் தூக்கித் திரியும்
காகங்களைப் போல
தூக்கி அலைகின்றன
தூக்கிலிடும் இந்த வார்த்தைகள்
உலகத்தை மூடி வைத்துவிட்டு
காட்டிலிருக்கும் பெரும் பாறையின்
அமைதிக்குள் செல்ல வேண்டும்
யாருமற்று அநாதையைப் போல் கிடக்கும்
சிதிலமடைந்த புத்தனின் சிலைக்கு கீழ்
புதைந்து போக வேண்டும்
கிளைகளிடையே கசியும் நிலவின்
மோனம் அழைக்கத் தொடங்கிவிட்டது.

அய்யப்ப மாதவன்


(2)
That it quenches thirst
the river knows not
Because of being in water it breathes
The fish knows not
That woman’s beauty is compared to its own
The Moon knows not
That the day is born due to its glow
The sun knows not
That it burns
The Fire know not
That it is inhaled
The air knows not
That the soil is rich because of it
The Rain knows not
The selfless ones do not
thrive in thankful responses
at all.
Iyyappa Madhavan
தன்னால் தாகம் தீர்கிறதென்று நதி அறிவதில்லை
நீருக்குள் இருப்பதால்
உயிர் வாழ்கிறோம்
என்று மீனுக்குத் தெரிவதில்லை
பெண்ணோடு தன்னை வர்ணிக்கிறார்களென்று
நிலவுக்குத் தெரிவதில்லை
தன் ஒளியால் பகல் தோன்றுகிறதென்று சூரியன் அறிவதில்லை
எரிகிறோமென்று நெருப்பு
உணர்வதில்லை
சுவாசிக்கிறோம் என்று காற்று அறிவதில்லை
நிலம் செழித்திருப்பது தன்னாலென
மழைக்குத் தெரிவதில்லை
தன்னலமற்ற எதுவும் பிரதிபலனில்
குளிர்காய்வதில்லை.


(2)
Through the doors that keep opening and closing
They arrive and depart.
The train halts in stations
pre-determined
with a great sense of duty and responsibility.
True the places having different names
are but Earth the same
Yet
Without identities
The electric wagon would be feel choked
and lost
not knowing where to halt.
Then people wound turn insane
and roam around.
Without name nothing here remains
If you have no name
addressing you becomes an exercise in vain
and you would metamorphose into a strange species so alien
The train stops at the station named Pioneer
Without difficulty I exit
The bird appearing in front of me
eyes me and cries
not knowing why.
Iyyappa Madhavan
திறந்து மூடும் கதவுகளின் வழியே
வெளியேறிக்கொண்டும்
உள் நுழைந்துகொண்டுமிருக்கிறார்கள்
ரயில் முன் தீர்மானிக்கப்பட்ட நிறுத்தங்களில் பொறுப்புடன் நின்று நின்று செல்கிறது
பெயரிடப்பட்ட வெவ்வேறு ஊர்கள் ஒரே பூமிதான் என்றபோதும்
அடையாளங்கள் இல்லையெனில்
நிறுத்தங்கள் இல்லாமல்
மின்சார வாகனம் திணறிவிடும்
மனிதர்கள் பின் பைத்தியம் பிடித்து
அலைவார்கள்
பெயர்களற்ற எதுவும் இங்கில்லை
உன் பெயர் இல்லையெனில்
உன்னை அழைக்கும் வழி தொலைந்து
பெயர் அறியா விநோத மிருகமாகிவிடுவாய்
ரயில் பயனியர் என்ற நிறுத்தத்தில் நிற்கிறது
எளிதாக இறங்கிவிடுகிறேன்
என் முன் தோன்றும் அந்தப் பறவை என்னைப் பார்த்து ஏனோ கத்துகிறது.


(4)


On the green lawn
embedded with droplets of rain
a Myna walks on
viewing the world with its minuscule eyes
in its own perception.
The land it sees
and the world we see
are not one and the same.
In one universe
visions myriad
When nothing seems alike
all that takes place extend as riddles
With the fissures of altercations surfacing
The great grand world
boils
in inner turmoil
Treacheries and betrayals abound
against thee
A little soothing love
there might be
A Myna being blissfully unaware of
anything
softly hops around
in the green stretch of lawn
leading a life of its own
as a raindrop’s spin frozen.
மழைத்துளிகள் படிந்த
பச்சை புல்வெளி மீது
மைனா ஒன்று நடந்துகொண்டு
தன் சின்னஞ்சிறு கண்களால்
உலகை ஏதோ ஓர் அர்த்ததில் காண்கிறது
அது பார்க்கும் நிலமும்
நான் பார்க்கும் உலகமும்
வேறு வேறு
ஒரே பிரபஞ்சத்தில் எத்தனை கண்கள்
எத்தனை பார்வைகள்
எதுவும் ஒன்று போலில்லாத போது
நடப்பவை யாவும் புதிர்களாக நீள்கின்றன
மோதலின் வெடிப்புகள் தோன்றி
மனச்சஞ்சலங்களில்
நிரம்பித் தகிக்கிறது
மாபெரும் பூமி
உனக்கெதிராக நிறைய சதிகள் துரோகங்கள் உண்டு
இணக்கமாக கொஞ்சம்
அன்பிருக்கக்கூடும்
எதுமறியா ஒரு மைனா புல்வெளியின் மீது தன் போக்கில்
தன்னியல்பில் வாழ்ந்து திரிகிறது
மழைத்துளியின் உறைந்த சலனத்தைப் போல.

(5)

Inside the egg-shell broken into two halves
By a small ladle
the dollars spent were there
In the bread-slices
Hunger’s tongues stayed folded.
In words of humiliation
body was shedding off its strength
Air coming from nowhere
had life-robbing venom well-mixed.
Through the sound of the broken egg-shells
Time’s Music incomprehensible has swelled.
In World riddle-riddled
The dangers of the next moment
keep coming in quick succession.
In life that goes round and round
in the middle of the revolving earth
and eventually end
egg-shells keep breaking apart
Scattering dollars appear in a flash
and disappear – alas
Amusements have long since
Become the Order of our existence.

ஒரு சிறுகரண்டியைக் கொண்டு இரண்டாய்ப் பிளந்த முட்டை ஓடுகளுக்குள்
செலவளித்த வெள்ளிகள் இருந்தன
ரொட்டித் துண்டுகளில்
பசியின் நாவுகள் மடங்கியிருந்தன
அவமானத்தின் சொற்களில்
உடலின் வலிமை உதிர்ந்துகொண்டிருந்தது
எங்கிருந்தோ வந்த காற்றில்
சுவாசத்திற்கான உயிர் பறிக்கும்
விசம் கலந்திருந்தது
உடைந்த முட்டை ஓடுகளின் ஒலியினூடே
காலத்தின் புரியாத இசை
எழுந்திருந்தது
புதிர்கள் தோன்றி மறையும் உலகில்
அடுத்த கணத்தின் விபரீதங்கள்
வந்துகொண்டே இருக்கின்றன
சுழலும் பூமியின் நடுவில்
சுழன்று மடியும் வாழ்வில்
முட்டை ஓடுகள் உடைந்துகொண்டே
போகின்றன
சிதறும் வெள்ளிகள் தோன்றி
மறைகின்றன
வேடிக்கைகள் அன்றாடத்தின்
வாடிக்கையாகி வெகு நாட்கள்
ஆகிவிட்டன.

அய்யப்ப மாதவன்

(6)
Ascending and descending on the moving stairs
rolling and tumbling
is indeed adventure-like
The motor-driven chain knows to take us up
and bring us down.
But man forever is all set to drag you down.
All the accessories that would help us climb up
are well concealed.
Accessing them would be impossible.
Going down and down
You would reach dismal abyss
Your heights would vanish
The moving stairs are somewhat better
For they show a little height and then disappear.

தவறி விழும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது ஒரு சாகசம் போலவே இருக்கிறது
இயந்திரத்திற்கு ஏற்றிவிடவும்
இறக்கிவிடவும் தெரிந்திருக்கிறது
மனிதனோ இறக்கிவிடவே துடிக்கிறான்
ஏற்றிவிடும் சாதனங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன
அவை கைவசப்படுதல்
சாத்தியமல்ல
நீ இறங்கி இறங்கி
அதலபாதாளத்திற்கு போய்விடுவாய்
உன் உயரங்கள் காணமாலகிவிடும்
தவறி விழும் படிக்கட்டுகளாவது
பரவாயில்லை
சின்ன உயரத்தைக் காட்டி மறைகிறது.

(7)
A VOICE IN ZEN STATE

All voices have reached their respective directions
and became nil
As a quiet solitary cabin
a voice has reached the Zen State.
Between towering buildings
Quietude hovers
going round and round
as a bird that makes no sound
In the information
where to meet and when
silence is hiding
In the responses of two pals
a plant sprouts within
The Mynas of the lawns that go softly hopping
speak in their own tongue all along
Upon the lap of the voiceless
Silence stretches on and on
Beyond the locked door
No voice in wait remains.
Iyyappa Madhavan
ஜென் நிலையில் ஒரு குரல்

எல்லாக் குரல்களும் அதனதன் திசைகளுக்குச் சென்று மறைந்துவிட்டன
பேசாத தனித்த அறையைப் போல்
ஒரு குரல் ஜென் நிலைக்கு
சென்றுவிட்டது
உயர்ந்த மாடிக்கட்டிடங்களுக்கிடையில்
அமைதி ஒரு கத்தாத
பறவையைப் போல் பறந்து திரிகிறது
எங்கே எப்போது சந்திக்கலாம்
என்ற செய்தியில் விடை தெரியாத
நிசப்தம் ஒளிந்திருக்கிறது
நண்பர் இருவரின் பதில்களில்
மனதினூடே ஒரு தாவரம் துளிர்க்கிறது
தவ்வித் திரியும் புல்வெளி மைனாக்கள்
அதுவாகவே தன் மொழியில்
பேசித் திரிகின்றன
குரலற்றவனின் மடியில் மெளனம் நீண்டு வளர்கிறது
பூட்டிய கதவிற்குப் பின்னால் எந்தக் குரலும் காத்திருக்கவில்லை.

அய்யப்ப மாதவன்

(8)
That river had turned thoroughly frozen
It turns thus
whenever it attains the state of the Enlightened
Even in the excessive heat of my Sun
it refuses to evaporate.
All my summers are going waste
It is not easy to elaborate on the earnestness
of my intensity
to that which lacks comprehension.
Under any circumstance
it remains frozen in essence
Umpteen attempts notwithstanding
even a tiny slab of ice
I am unable to extract out of it
Through the chill foggy wind
In feelings of nothingness
wanders my heat
yonder
Iyyappa Madhavan
அந்த நதி பனி போன்று உறைந்துவிட்டது
ஒரு ஞானி நிலை அடையும்போதெல்லாம்
அது அப்படியாகிறது
என் சூரியனின் கடும் சூட்டில்கூட
அது ஆவியாக மறுக்கிறது
என் எல்லாக் கோடை காலங்களும்
வீணாகிக்கொண்டிருக்கிறது
புரிதலற்ற அதனிடம்
என் வெட்கையின் நிஜம்
பற்றி எடுத்துரைப்பது
எளிதாக இல்லை
அது என்னிலையிலும்
தன் உறைவிலிருந்து மீள்வதே இல்லை
எத்தனையோ முனைப்புகளில்
ஒரு சிறுபனித்துண்டைக்கூட
பெயர்தெடுக்க முடியவில்லை
பனிக்காற்றினூடே வெறுமை
உணர்வுகளில் அலைகிறது
என் வெப்பம்.


(9)
In the sudden gust of blessed breeze
The doors of a hut opened
Entering and exiting became quite easy
Arrival and departure
can happen any moment
In the bed waking up
to the soft knock of that voice
on the door
sleep all alone would roll over
Forever the cabin would converse
in words providing comfort
I could be a species grazing in a land
sans fence
It was a time quintessential
of being in the thirst-quenching river
that didn’t on any account differ
In a fearless sphere
there was a great grand space
that swam like a fish
elusive of the hook
It was like a fine book
read with an open mind
While taking leave of the 15th floor
I could offer it well-meaning words
In that room etched in memory
Love wholesome would be
forever swirling and spiraling.

(*Dedicated to Krupanidhi Banepalli)

திடீரென்று வீசிய நற்காற்றில்
குடிலொன்றின் கதவுகள்
திறந்துகொண்டன
உள் நுழைவதும் வெளியேறுவதும் எளிதாகிவிட்டது
எக்கணமும் வரலாம் எக்கணமும் போகலாம்
அந்தக் குரல் கதவு தட்டும்
மெல்லிய ஓசையில்
விழித்து வரவேற்கும்
படுக்கையில் குளிர்ந்த காற்றில்
தூக்கம் யாருமற்றுப் புரண்டு படுக்கும்
எப்போதும் அந்த அறை
ஆறுதல் மொழியில்
உரையாடும்
வேலிகளற்ற நிலத்தில் மேயும்
ஓர் உயிரைப் போல
இருக்க முடிந்தது
எதிர்ப்புகள் ஏதும் காட்டாத
தாகம் தீர்க்கும் நதியில் இருந்த அபூர்வ காலமது
பயமற்ற வெளியில் தூண்டிலில்
சிக்காத ஒரு மீனைப்போல நீந்தும்
பெருவெளி இருந்தது
ஒரு மனம் திறந்து வாசிக்கும்
நல்ல நூல் போலிருந்தது
15வது மாடி விட்டு பிரிகையில்
நல்லியத்திற்கான சொற்களை
அதனிடம் தர முடிந்தது
நினைவு விட்டு அகலா
அந்த அறையில்
பரிபூரண அன்பு சுழன்றுகொண்டிருக்கும்.

அய்யப்ப மாதவன்

(10)


When I who was in the grip of a dream
wading through the clouds
reached my land
it had moved away.
That was a different world anew
Everything on its own go on
heeding to the commands of automation
Nothing defies nothing
The roads go on running
As the flooding waters of a great grand river.
During the times of the roads speeding past and vanishing
myriad legs go running everywhere
The journeys yearning to achieve the goals all set
shine upon hope as stars and wink
A day effortlessly come in contact
with night and
leave
Separate exclusive worlds
In each secrets, passions galore
Pains hidden deep down
Whatever be the case –
going round and round
everywhere
whirling swirling twirling abound
The travellers gathering on Sundays
remain jubilant and uproarious
inside the pubs and clubs
In the aroma of wine
the pain of toil
proceeds towards joy unleashed
Leaving the fantasies scattered
I have fallen into dreams my own.
The mynas strolling at my feet
are still fluttering inside me.
ஒரு கனவின் பிடியிலிருந்த நான் மேகங்களிடையே கடந்து
என் நிலம் வந்தபோது அது என்னைவிட்டு
விலகியிருந்தது
அது வேறொரு நவீன உலகம்
யாவும் தானாகவே
இயந்திரங்களிடையே
அடங்கிச் செல்கிறது
எதுவும் எதையும் மீறவில்லை
பேராற்று வெள்ளமென ஓடிக்கொண்டே இருக்கின்றன
சாலைகள்
விரைந்து மறையும் பொழுதுகளில்
எண்ணற்ற கால்கள் ஓடித் திரிகின்றன
நிச்சயிக்கப்பட்ட இலக்குகளை
அடையத் தவிக்கும் பயணங்கள்
நம்பிக்கையின் மீது
நட்சத்திரங்கள் போல ஒளிர்ந்து
கண் சிமிட்டுகின்றன
ஒரு பகல் ஓர் இரவை எளிதில் தொட்டு மறைகிறது
தனித்தனியே தனித்தனியே வெவ்வேறு உலகங்கள்
ஒவ்வொன்றிலும் ரகசியங்கள் வேட்கைகள்
அறிய முடியா வலிகள்
எது எப்படியாயினும் சுழல்தல்
சுழல்தல் எங்கும்
ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் பயணிகள் கேளிக்கை விடுதிகளுக்குள்
ஆராவாரத்திலிருக்கிறார்கள்
உழைப்பின் வலி
மதுவின் வாசனையில்
குதூகலத்திற்குச் செல்கிறது
சிதறிக் கிடக்கும் கனாக்களை விட்டு
என் கனவுகளில் விழுந்துவிட்டேன்
காலருகில் திரிந்த அந்த மைனாக்கள்
இன்னும் என்னுள் பறந்தலைகின்றன.

(11)
A quietude lies frozen rocklike.
A black crow coming and sitting it reverberates a little
In the sudden rain
the bird disappearing
and the spray of water turning it topsy-turvy
splashing and scattering
it turns chaotic
When the rain is gone after a long time
out of it drip
teardrops
A calm mangled beyond recognition
as a rock smashed in explosion.
Would take real long for reclamation.
ஓர் அமைதி ஒரு பாறையைப் போல் உறைந்து கிடக்கிறது
ஒரு கருப்புக் காகம் வந்த அமர கொஞ்சமாய் அதிர்கிறது
சட்டெனப் பெய்த மழையில்
பறவை மறைய
நீர்த்திவளைகள் புரட்டியெடுக்க
அது சிதறித் தெறித்து
நிலைகுலைகிறது
வெகு நேரத்திற்கு பின் ஓய்ந்த மழையில்
அதனிலிருந்து சொட்டுகிறது
கண்ணீர்த்துளிகள்
ஒர் அமைதி வெடித்து வைத்து தகர்த்த பாறையைப் போல்
வடிவமிழந்து போனது
மீண்டு வர நாட்கள் பிடிக்கும்.


(12)



Dedicated to Dr. Ramanathan Balakrishnan

Those legs walk on non-stop
Those eyes wide awake forever
Hope flows out of it as a perennial river
In each word uttered
Precise aims and objectives resonate
Those legs climb up
step by step
with stones piled up
untiringly
a mount’s shape emerge
always on the move
in a never-ending journey
that traveler goes on scaling the mountain-peaks
higher and higher.
Ever intent on smashing the hurdles
That confront him en route
He is always keen to look up above
Piling up stones
the traveler has no night whatsoever.
His eyes voyage along the ways of
Nothing else but radiance.
Soon the stars would be within his reach.
From those legs that ascend ever so high
Birds keep soaring towards the sky

Iyyappa Madhavan
நடந்துகொண்டே இருக்கின்றன அந்தக் கால்கள்
விழித்துக்கொண்டே இருக்கின்றன அந்தக் கண்கள்
எப்போதும் நம்பிக்கை வற்றாத நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது
ஒவ்வொரு சொல்லிலும்
விரியும் தெளிந்த நோக்கங்கள்
அந்தக் கால்கள் ஒவ்வொரு படியாய் மேலேறுகின்றன
கற்களை அடுக்கி அடுக்கி ஒரு மலையின் வடிவம் தோன்றி வருகிறது
இடைவிடாப் பயணத்தில் அந்தப் பயணி மலை முகடுகளின்
மீது ஏறிய வண்ணமிருக்கிறார்
குறுக்கிடும் தடைகள் உடைத்து
மேல் நோக்கும் எண்ணத்திலேயே இருக்கிறார்
அப்பயணிக்கு இரவுகளில்லை
வெளிச்சத்தின் வழியில் மட்டும்
பார்வைகள் பயணிக்கின்றன
விரைவில் கையில் நட்சத்திரத்தைத் தொடும் உயரம் வந்துவிடும்
ஓய்வில்லாத பாதங்களிலிருந்து
பறவைகள் ஆகாயம் நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன.




(13)



[* Dedicated to Saravanan Srinivasan]

I stood beneath clouds that keep pouring rain after rain
My thirst has ceased to be.
Then I stood beneath the tree which provided me shade
to wade through the Sun
Sweat retreated.
In the dark holding Moon’s finger I walked on
Fear disappeared.
In the abode thrown open I opened the window
The wind coming in caused my resurrection
In the long journey I got into that wagon
The travel turned easier from then on
While turning confusion-confounded
In directions obscure
A guidepost led me
with care all the more
When in an alien soil
I was stranded and in turmoil
the heart that came as the very hope of my being
had my pulse throb within.
And I fluttered all around the city as a bird
Acquiring a nest
My casket with dollars’ grown
Keep intoning that name again and again

Iyyappa Madhavan
மழை மழையாய்ப் பொழியும் மேகங்களுக்குக் கீழ் நின்றுகொண்டேன்
தாகமெடுப்பது ஓய்ந்துவிட்டது
பின் வெயிலுக்கான நிழல் தந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டேன்
புழுக்கமென்பது ஓடி மறைந்துகொண்டது
இருட்டின் பாதையில் நிலவின் விரல்பிடித்து நடந்துபோனேன்
பயம் போன இடம் தெரியவில்லை
திறக்கப்பட்ட வீட்டினுள் சன்னலைத் திறந்துகொண்டேன்
அந்தக் காற்றில் உயிர்த்துவிட்டேன்
நெடும் பயணத்தில் அந்த வாகனத்தில் இருந்துகொண்டேன்
பயணம் எளிதாகிவிட்டது
குழம்பிய திசைகளில் திணறியபோது
ஒரு வழிகாட்டி வழி நடத்தியது
திக்கற்று நின்றவேளை
அந்நிய தேசத்தில்
என் இருப்பின் மீது நம்பிக்கையாய்
வந்த நின்ற அந்த இதயத்தில்
துடித்துக்கொண்டேன்
அந்த நகரத்தினூடே கூடு கிடைத்த ஒரு பறவையாய்ப் பறந்து திரிந்தேன்
வெள்ளிகள் முளைத்த என் பெட்டகம்
அந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

(14)
Ten more stations
In each one
someone instead of me
alights and disappears
I am stationed in one place
It has never been mine
before and after this time
In a short while from hence
I would have forsaken it.
Some others would be possessing
and renouncing it
Travel transient
Seats fleeting
In journey figures innumerable
appear disappear
The train wades and wanders
through the directions
bearing witness to the journey
When my station comes
I will abandon the train
and it will also move on.
Iyyappa Madhavan
இன்னும் பத்து நிறுத்தங்கள்
ஒவ்வொன்றிலும் எனக்குப் பதில்
யாரோ இறங்கி மறைகிறார்கள்
நான் ஓரிடத்திலிருக்கிறேன்
அது இதற்கு முன்பும் பின்பும் என்னுடையதில்லை
இன்னும் கொஞ்ச நேரத்தில்
அந்த இடத்தை கைவிடுவேன்
யாரோ அதைப் பிடித்துக்கொண்டும்
துறந்துகொண்டுமிருப்பார்கள்
நிரந்தரமற்ற பயணம்
நிரந்தரமற்ற இருக்கைகள்
பயணங்களில் எண்ணற்ற உருவங்கள் தோன்றி
மறைகின்றன
ரயில் திசைகளினூடே பயணத்தின்
சாட்சியாய் ஊர்ந்து திரிகிறது
என் நிறுத்தம் வரும்போது
ரயிலை கைவிட்டுவிடுவேன்
அதுவும் போய்விடும்.

(15)
A dove of a foreign land
seems to be approaching me
But in its search for prey
it is very much the same as me
The leftovers of man’s food
it collects in its stomach
Day in and day out its zest and vigour
are spent in nurturing its being
Though there is nothing to converse with it
It highlights the underlying meaning of life
To fancy that
the bird which goes on with its
incessant search for prey
till it ceases to be
comes approaching me
is a grand fantasy.
It has now moved away
i know not where.
Iyyappa Madhavan
அயல்தேசத்தின் புறா ஒன்று
என்னை நோக்கி வருவது போன்றிருந்தது
ஆனால் அது தன் இரைக்கான தேடலில் என்னைப் போலவே இருந்தது
மனிதன் விட்டுச் செல்லும் மீந்த உணவுகளை
தன் இரைப்பையில் சேர்த்துக்கொள்கிறது
நாளெல்லாம் அதன் வேலை
உயிர் வளர்க்கும் சூட்சுமத்தில்
கரைந்து போகிறது
அதனிடம் உரையாட ஒன்றுமில்லையென்ற போதும்
அது வாழ்தலின் பொருளை
உணர்த்திச் செல்கிறது
இறக்கும்வரை இப்பூமியின் மீது
இரைதேடல்
தொடர்ந்துகொண்டிருக்கும்
அது எனை நோக்கி வருவதாக நினைத்துக்கொள்வது
பெரும் கற்பனை
அது இப்போது வேறெங்கோ நகர்ந்துவிட்டது.

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE