A POEM BY
RIYAS QURANA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
There as a lamb gone astray
I am wandering all over
As far as my heart could reach
no word comes into view
With hunger unbearable
when I go near and place my mouth
grass-clusters vanish
When they see me
the rivers turn silent and frozen
Without words
how did you make a forest evolve
That which lies inside its silence
is not at all quiet in essence
Something monstrous
Devoid of mercy
Devoid of benevolence
Something monstrously cruel
The boundaries of the massive jungle
called Silence
are infinite
Its abyss beyond the scope of hanging
Searching for finding the way
and growing weary
when I stand there lost and forlorn
Shaking
the trees began crashing one by one
Just a few minutes would have gone
Destroying the jungle
out of you came a Word
Then, one after another
Turning into raindrops
they began drenching..
The rain went on till dawn.
Taking turns we drank words
to our hearts’ content.
Eventually you said
that my silence is snake-like
As snake dwelling in the jungle
I mingled
both our silences.
காட்டில் வசிக்கும் பாம்பு
உன் மௌனம் பெருங்காடு
அங்கு வழிதப்பிய
ஒரு ஆட்டுக் குட்டியைப்போல
அலைந்து திரிகிறேன்.
மனதிற்கு எட்டிய துாரத்தில்
ஒரு சொல்லையும் காணவில்லை
தாளாத பசியோடு
அருகில் சென்று வாய் வைக்கையில்
புற்கள் மறைந்து விடுகின்றன
என்னை கண்டதும்
ஆறுகள் சப்தமற்று உறைந்துவிடுகின்றன
சொற்களே இல்லாமல்
ஒரு காட்டை எப்படி
வளர்த்தெடுத்தாய்
அந்த மௌனத்திற்குள் இருப்பது
அமைதியே அல்ல.
மிகப் பெரும் பயங்கரம்
கருணையில்லை
இரக்கமில்லை
நினைவுகளை நடுங்கச் செய்யும்
கொடுமையான பயங்கரம்
மௌனம் என்ற பெருங்காட்டின்
எல்லைகள் வரையறுக்கப்படாதவை
அதன் ஆழம் தொங்கலற்றவை
வழிதேடி அலைந்து
சோர்வுற்று திகைத்து நிற்கையில்
சடசடத்து ஒவ்வொருமரமாக
விழத்தொடங்கின.
சில நிமிடங்களே ஆகியிருக்கும்
காட்டை அழித்துவிட்டு
உன்னிடமிருந்து வெளிவந்தது
முதலாவது சொல்.
பின், ஒன்றன்பின் ஒன்றாக
மழைத்துளிகளாகி சரசரவென்று
நனைக்கத் தொடங்கின
விடியும் வரை ஓயாத மழை அது.
சொற்களை மாறி மாறி பருகினோம்
கடைசியாக சொன்னாய்,
எனது மௌனம் பாம்பு போன்றது என.
காட்டில் வசிக்கும் பாம்பு என
இருவரின் மௌனத்தையும்
இணைத்து வைத்தேன்.
Riyas Qurana
No comments:
Post a Comment