A POEM BY
NAKULAN
MUTE WRITING
how to move with the affluent
based on the fact
that they are not merely affluent
Thus
With each one in one stature
with the realization
that they are not merely that
Many find it impossible _
that’s why
That’s why?
Nothing.
ஊமை எழுத்து
நகுலன்
பணக்காரர்களுடன்
பழகத் தெரிந்திருக்கவேண்டும்
அவர்கள்
பணக்காரர்கள் மாத்திரம் இல்லை
என்ற அடிப்படையில்
இதைப்போல்
ஒவ்வொரு நிலையில்
இருப்பவருடன்
அவர் அந்த நிலையில் மாத்திரம்
இல்லை என்றவாறு
இது பலரால் இயலவில்லை
என்பதனால்தான்.
என்பதனால்தான்?
ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment