INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, February 18, 2024

INSIGHT - NOV-DEC,2023

 INSIGHT - NOV - DEC, 2023



VELANAIYOOR THAS

NOV-DEC, 2023

A POEM BY

VELANAIYOOR THAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WHEN HE WAS DOWN WITH FEVER….


When he was afflicted with fever
Poetry became worried
With eyes full of mercy it eyed him.
When he was down with fever
Poetry offered him a cup of Tea
It felt his forehead to see how severe is
the fever
and consoled that he would soon recover.
When he was down with fever
Poetry gave him drinking water
And green leaf ‘Kanji’.
When he was down with fever
Poetry became the blanket and covered him
Remained beside him conversing with him
Turned into a melody and sang
Transformed into a dance and performed
When he was down with fever
Poetry stayed by his side not going anywhere else
Asking him to go to sleep singing lullaby
Even appeared in his dream
Took him to spectacular seashores
Floated in the silvery clouds along with him
Concerned that his eyes would ache
it wrote itself in tiny little alphabets.
When he was down with fever
Poetry went to the temple
performed Archana and applied
the sacred ash on his forehead
Well,
For Poetry that does all these
What name can we give
How to address it please…..

அவனுக்கு காய்ச்சல் வந்த போது கவிதை போர்வையாகி போர்த்தியது
பேச்சுத் துணையாய் அருகிருந்தது பாடலாகி பாடியது
ஆடலாகி ஆடி காட்டியது
அவனுக்கு காய்ச்சல் வந்த போது
_________வேலணையூர் _தாஸ்.
____________________
அவனுக்கு காய்ச்சல் வந்த போது
கவிதை கவலைப்பட்டது
கண்களில் கருணை நிரம்ப பார்த்தது
அவனுக்கு காய்ச்சல் வந்த போது
கவிதை தேநீர் வைத்து கொடுத்தது
நெற்றியை தொட்டு காய்ச்சல் பார்த்தது சுகம் வந்திடும் என்று ஆறுதல் சொன்னது
அவனுக்கு காய்ச்சல் வந்த போது
கவிதை குடிநீர் வைத்து கொடுத்தது பச்சை இலை கஞ்சி கொடுத்தது
அவனுக்கு காய்ச்சல் வந்த போது
கவிதை எங்கும் செல்லாது அவனோடு இருந்தது
தூங்க சொல்லி தாலாட்டு பாடியது கனவிலே கூட வந்தது
அழகிய கடற்கரைகளுக்கு அவனை அழைத்துச் சென்றது
வெண்பனி மேகங்களில் அவனோடு மிதந்தது
அவனுக்கு கண் வலிக்கும் என்று சின்ன சின்ன எழுத்துக்களால் தன்னை எழுதியது
அவனுக்கு காய்ச்சல் வந்த போது
கவிதை கோவிலுக்கு போனது
அர்ச்சனை செய்து கொண்டு வந்து நெற்றியில் திருநீறு பூசியது
ம்ம் அது சரி
இப்படி எல்லாம் செய்கிற அந்த கவிதைக்கு
என்ன பெயர் வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்

NESA MITHRAN

 NOV - DEC, 2023

A POEM BY

NESA MITHRAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


In truth this Love wishes to embrace one and all
Some we shake hands with and part ways
Some we touch the shoulder and move away
For several others permission is granted
up to kiss upon the forehead
Some others kneel down and kiss
the back of palm
and have their love proclaimed.
Some have intercourse with their voice
Some kiss our tears
There are faces that lean against our chest
seeking pardon and moving on
Some we prostrate at their feet and depart
The memory of some we carry always
as carrying the burden of a growing tree , so to say.
Only a few we think of holding close
even when we burn and are turning to ash
But they offer you the wage for carrying the load
and vanish at the stop without a word.
Scattering as cock-heads
As god after the festival of offering
the lives we were to have lived
are sacrificed
ahead of a prayer indeed.

நேச மித்ரன்
உண்மையில் இந்த அன்பு எல்லோரையும் தழுவிக் கொள்ள விழைகிறது
சிலரோடு கைகுலுக்கிப் பிரிகிறோம் சிலரது தோள் தொட்டு விலகுகிறோம்
இன்னும் சிலருக்கு நெற்றி முத்தம் வரை அனுமதி
மேலும் சிலர் மண்டியிட்டு புறங்கையை முத்தமிட்டு
தம் அன்பைச் சொல்கிறார்கள்
சிலர் குரலால் புணர்வார்கள்
சிலர் முத்தத்தோடு நின்று விடுகிறார்கள்
சிலர் நம் கண்ணீரில் முத்தமிடுகிறார்கள்
நெஞ்சில் சாய்ந்து மன்னிப்பு கேட்டு
விலகும் முகங்கள் உண்டு
சிலர் பாதத்தில் பணிந்து விலகுகிறோம்
சிலர் ஞாபகத்தை ஒரு வளரும் மரத்தின் பாரத்தை சுமப்பது போல்
வாழ்நாளெல்லாம் சுமந்து திரிகிறோம்
வெகுவெகு சிலரை மட்டும்தான் நெருப்பில் எரியும் போதும் அணைத்து கொள்ள நினைக்கிறோம்
அவர்களோ சுமைக்கூலி கொடுத்து
நிறுத்தத்தில் இருந்து மறைந்து போகிறார்கள்
சேவல் தலைகளாய் இறைந்து
கொடை முடிந்த தெய்வமாய்
ஒரு பிரார்த்தனைக்கு முன்
பலி கொடுக்கப்பட்டிருக்கின்றன
நாம் வாழ்ந்திருக்க வேண்டிய
வாழ்க்கைகள்

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE CEREMONY OF
CHRISTENING THE MOUNT




The grand celebration of christening the mount
was arranged.
I too was chosen
for finding a befitting name to the mountain.
I try searching and finding an ancient one
Some asked us to name it with the help of Numerology
A gang insisted that we name it after the founder of their Party
Some held that it was they who hold aloft the mount
Another gang claimed to have fed the mount and offered water
And so they recommended names suiting their whims and fancies.
Wading through pressures of all sort
I hurry towards the venue with a name for the mount
There standing in front of the towering mount
I moved closer to secretly disclose to the mount first
the name I had coined for it
Hearing my voice the mount wailed and sobbed
Blood oozed out of its eyes _ Alas.
Its hunger
Its right
Its sorrow
The pillars of powers that betray it for ever
Eyeing me who has never found to all these -a solution
It wept with tears unleashed
as emitting poison
What can I do
What at all can I do….

மலைக்கு பெயர் சூட்டும் விழா.
மலைக்கு பெயர் சூட்டும் நிகழ்வினை நடாத்துவதற்கு
விழா ஏற்பாடாகியது.
மலைக்கு பெயரினை தெரிவு செய்வதற்கு
எனக்கும் மனு கிடைத்தது.
பல வருடங்கள் பழைமையான மலைக்கான பெயரை தேட முயல்கிறேன்,
மலைக்கு அதிர்ஷ்ட விஞ்ஞானபடி
பெயரை வைக்குமாறு சிலரும்
தமது கட்சி ஸ்தாபகரின் பெயரை வைக்கும்படி ஒரு கும்பலும்
தாமே மலையை தாங்கியதாக மறு கும்பலும்
மலைகக்கு தேவையான சோறும் தண்ணியும் கொடுத்ததாக இன்னொரு கும்பலும்
தமக்கு இஸ்டமான பெயர்களை பரிந்துரைத்தனர்..
பல்வேறு அழுத்தங்களை மீறி
மலைக்கான பெயரோடு மலைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு விரைகிறேன்.
அங்கே நிமிர்ந்த மலை முன்னின்று
என்னால் தயாரிக்கப்பட்ட மலைக்கான பெயரினை முதலில் மலையிடம் ரகசியமாக சொல்ல நெருங்கினேன்,
என் குரல் கேட்ட
மலை கதறியது.
மலையின் கண்களில் ரத்தம் கசிய பீறிட்டது.
தனது பசி
தனது உரிமை
தனது துயர்
தன்னை ஏமாற்றும் அதிகார தூண்கள்
இவைகளுக்கு விடிவினை காணாத என்னை பார்த்து விஷஙகளை கக்குமளவிற்கு விம்மியது.
நான் என்ன செய்வேன்,
நான் என்ன செய்வேன்...

மாரிமுத்து சிவகுமார்.

KADANGANERIYAN ARIHARASUTHAN

NOV-DEC, 2023

A POEM BY

KADANGANERIYAN ARIHARASUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Moon not seen
This is the Day of New Moon.
The air has settled down.
Sure there would be rain.
Stars have flowered
No chance for shower.
Don’t counter any and all
No I didn’t. I just spoke the truth;
That’s all.
You have become a skilled orator, my pal.
I speak not. Just say
observing Nature all the way.
That is it.
With bell sounding we turn quiet.
With darkness shrouding
a fort built in the sky sans moon.
I say nothing.
Let things happen
In ways their own
Murmuring so in a voice unheard
He walks on.
With the cloud descending
and thunder resounding
A divine delirium
rise in words
swirling ecstatically.
Those realizing and really belonging
must have been somehow
drenched by now.

Kadanganeriyaan Ariharasuthan
நிலாவைக் காணவில்லை
இன்று அமாவாசை
காற்று அமர்ந்து விட்டது மழை பெய்யும்
நட்சத்திரங்கள் பூத்துக் கிடக்கிறது
வாய்ப்பில்லை
எல்லாவற்றையும் எதிர்த்துப் பேசாதே
எதிர்த்துப் பேசவில்லை உண்மையைச் சொன்னேன்
நன்றாக பேசக் கற்றுக் கொண்டுவிட்டாய்
நான் பேசவில்லை இயற்கையைக் கவனித்துச் சொல்கிறேன்
மணியொலிக்க நிசப்திற்கிறோம்
இருள் சூழ
மதியற்ற வானத்தில் கோட்டை கட்டியிருக்கிறது
நான் எதுவும் சொல்லவில்லை
அதது அதன் போக்கில் நடக்கட்டும் என
யாருக்கும் கேட்காத குரலில் முனுமுனுத்தபடியே
நடந்து செல்கிறான்
அந்த மேகம் இறங்கி வர.
இடி இடிக்க
ஒரு சன்னதம் வார்த்தைகளில் எழுந்தாடுகிறது
உணர்ந்தவர்களும் உரிமையானவர்களும்
இந்நேரத்தில் நனைந்திருக்க வேண்டும்


THENMOZHI DAS

NOV - DEC, 2023

A POEM BY

THENMOZHI DAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



QUARTER OF A CENTURY OLD SOLITUDE


As fish leaping upside down
where do tears go
For how longer the surrounding walls
Opening wide like sluice
wash away the night
Which daytime would retrieve the word
caught in heart’s hook
Despite swirling the quarter of a century old solitude
with killing pain in the neck
what at all the bird with three feathers
will do with my sobbing
The tiny little pencil in hand
and the earless heart move on in one sound
Is the carbon stick
a companion unparalleled
As the weaverbird that has gained expertise
with grabbing grass, lifting grass, bending grass
how the day comes flying
For the slice of air inside
to evaporate
how much one has to boil in life
As the doctor’s medical note written on the throes of death
the heart swings.
And
more than the ant’s leg crushed and maimed
It suffers growing weaker to no end.

கால் நூற்றாண்டுகாலத் தனிமை
தலைகீழாகப் பாயும் மீனாக
கண்ணீர் எங்கே செல்கிறது
இன்னும் எவ்வளவு காலம் மதிலுகள்
மதகு போல் திறந்து
இரவை அடித்துக் கொண்டு செல்லும்
மனதின் கொக்கியில் மாட்டிக்கொண்ட சொல்லை எப்பகல் மீட்கும்
மூன்று சிறகுடைய பறவை
கால் நூற்றாண்டுகாலத் தனிமையை
கழுத்து வலிக்கச் சுழற்றியபின்னும்
என் கேவல்களை என்ன தான் செய்யப்போகிறது
கைவசம் சிறு பென்சில் துண்டும்
காதற்ற இதயமும் ஒரே ஓசையில் நகர்கிறது
கார்பன் குச்சி
தன்னிகரில்லாத் துணை தானோ
புல்லெடுத்துப் புல்நிமிர்த்திப் புல்வளைத்து
தேர்ச்சிபெற்றத் தூக்கணாங்குருவி போல
எப்படிப் பறந்து வருகிறது பகல்
உள்ளிருக்கும் ஒரு துண்டுக் காற்று ஆவியாக
எவ்வளவு வாழ்வில்
கொதிக்க வேண்டியிருக்கிறது
மரண அவஸ்தைக்கு எழுதப்பட்ட
மருத்துவக் குறிப்பாய் மனம் ஆடுகிறது
மேலும்
நசுக்கபட்ட எறும்பின் ஊனப்பட்ட காலைவிட மிகவும் மெலிந்து துடிக்கிறது
- தேன்மொழி தாஸ்

RENGARAJAN VEERASAMY

INSIGHT NOV - DEC, 2023

A POEM BY

RENGARAJAN VEERASAMY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

It is those dolls that they have carefully chosen

with their hue and finesse
duly looked into
that these children enjoy
breaking apart with such ease.
It would have been better
if such immense affection was
not entrusted in my hands.
Can there be a curse
worse than the boon
given in the hands of one
for whom handling it is
absolutely unknown….

நேர்த்தி நிறமாய்ந்து
தேர்ந்த பொம்மையைத் தான்
உடைத்து மகிழ்கின்றன
பிள்ளைகள்
இவ்வளவு பெரும் நேசத்தை
என்னிடம் ஒப்படைத்திருக்க
வேண்டாம்
கையாளத் தெரியாதவனின்
கரங்களில் வழங்கப்பட்ட
வரத்தைப் போலொரு
சாபம் உண்டா சொல்.
-யுகயுகன்

MU.RAMKI

INSIGHT NOV - DEC, 2023


TWO POEMS BY
MU.RAMKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. STILL POND STILL.....

The roaring croaks of the seasonal frogs
Disrupts the quiet of the fish of the pond.
The frogs which till then
remained at the shore
A
L
I
G
H
T
I
N
G
into the pond
flirt with the fish.
The latter enchanted
declare the roaring croaks
of the frog
Symphony divine;
Poetry pristine.
What at all can
the pond-fish do
Unable to bear this sight
A young poet picks up a
handy stone
and throws it into the pond anon.
He has thrown thus
umpteen number of times.
This time also,
the pond lies unstirred
as always.

சலனமற்ற அந்தக் குளம்
*****************
பருவகால
தவளைகளின்
பேரிரைச்சல்
குளத்து
மீன்களின் பேரமைதியை
சஞ்சலப்படுத்துகிறது.
இவ்வளவு காலம்
குளக்கரையில்
மட்டும் லயித்திருந்த
தவளைகள்
குளத்தில்
ங்
கி
மீன்களோடு
குலாவுகின்றன
கிறங்கிப்போன
மீன்கள்
தவளையின் இரைச்சலை
இசையென்றும்
கவிதையென்றும்
பிரசாரப்படுத்துகின்றன
கிணற்று மீன்கள்
வேறென்ன செய்யும்..
இதை காண சகிக்க முடியாத
இளைய கவிஞனொருவன்
கைக்கு அடக்கமான கல்லொன்றை
குளத்தில் எறிகிறான்.
இது போல பல முறை எறிந்திருக்கிறான்.
இம்முறையும் சலனமற்றுதான்
கிடக்கிறது அந்தக் குளம்
(மு.ரா)


2.BIRD BIZARRE


With intent endeavour
the fins of fish
turned into wings.
Changing its longtime address
Ocean
Into
Sky
Holding on to the bait thrown
soars high
the strange bird.
Pondering over the oddity of
the ocean swelling with water
and the sky with air
It flies ….
For the flight of the fish
They are the reason
The seaborne fish
Suffers thus.
Though fish flying is indeed fantastic
They can’t match the real birds
The stars observe.
After scaling high
Though the fish try
many a time
to leave the bait
the one who holds it
is all set to hold it tight.

விசித்திரப் பறவை
*********************
தன் முனைப்பால்
மீனின் செட்டைகள்
சிறகுகளாயின...
சமுத்திரம்
என்ற தன் நீண்ட நாள்
முகவரியை
ஆகாயமென மாற்றிக்கொண்டு
தனக்கு வீசப்பட்ட
தூண்டிலையே பிடிமானமாகக் கொண்டு
உயரப் பறக்கிறது
அந்த விசித்திரப் பறவை
சமுத்திரம் நீராலும்
ஆகாயம் காற்றாலும்
நிரம்பியிருக்கும்
விசித்திரத்தை
எண்ணியப்படி
பறக்கிறது..
மீனின் பறத்தலுக்கு
காரணம்
தாமென
அடிபடுகின்றன
கடல்வாழ்
மீன்கள்
மீனின் பறத்தல் அருமையென்றாலும்
அசல் பறவைக்கு ஈடாகாதென
வின்மீன்கள்
கருத்திடுகின்றன.
உயரம் சென்ற பின்
மீன்
தூண்டிலை விட்டகல
பலபோது
எத்தனித்தாலும்
தூண்டில்காரன்
தன் பிடியை விடுவதாயில்லை...
-மு.ராம்கி-

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE