A POEM BY
S.FAIZA ALI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
These days the blooming trees too don’t
produce
trash of any sort
In the rims of shampoo-fragrant bathroom
floors,
dirty clusters of moss don’t grow.
Even those unwashed attires
appear as the neatly pressed and folded
ones
shown all new in the advertisements.
Even inside those uncooked vessels
‘Karisoru’ with the aroma of
curry leaves and cardamom
Vessels not washed too
with shine superior to the stars.
Even in the floor-
untouched by wet clothes
dust-particles don’t settle.
These days
the heart longs not
for the evening outings
wearing new dresses
and setting forth hurriedly
Except praying and doing associated
things
has the whole day’s seeking
shrunk inside your lone pouch
Sparrow Oh sparrow
Wearing the white clouds as your wings
Sparrow Oh sparrow
Wearing the white clouds as your wings
fluttering all over the heart
_ Oh my darling little sparrow
Won’t you come here, please.
before you go your way
In your classroom of today
When will the last bell ring, please say.
சிட்டுக் குருவியே...
இப்போதெல்லாம்
..
முற்றத்துப் பூமரங்களும் குப்பை கூளங்களை
முற்றத்துப் பூமரங்களும் குப்பை கூளங்களை
உற்பத்திப்பதேயில்லை
ஷாம்பூ மணக்கும் குளியலறைத்தரை
விளிம்புகளில்
அழுக்குப் பாசிகளோ வளர்வதேயில்லை..
துவைக்காத துணிகள்கூட
விளம்பரத்தில் மடமடக்கும்
அழுத்தி மடித்த ஆடைகளாய்..
சமைக்காத சட்டி பானைகளுக்குள்ளும்
கறிவேப்பிலையும் ஏலமும்
கமகமக்கும் கறிசோறு.
அலம்பாத பாத்திரங்களும்
பளபளப்பில்
நட்சத்திரங்களை வென்றபடி..
ஈரத்துணி உரசாத
தரையோடுகளிலும்
படிவதாயில்லை தூசுதுணிக்கை.
இப்போதெல்லாம்..
புதிதாய் அணிந்தும்..
அள்ளிப்போட்டுக் கொண்டுமான
மாலைநேரப் பயணங்களிலெல்லாம்
மனசு இஷ்டப்படுவதேயில்லை..
வழிபாடும்.. அது சார்ந்தவையும் தவிர்ந்து
முழு நாளின் தேடலுமே
உன் ஒற்றைப் பைக்குள்ளேயே
ஒடுங்கிப் போனதா..
சிட்டு குருவியே.. சிட்டுக் குருவியே..
வெண் பஞ்சு மேகங்களை
இறகாயணிந்தே
மனசு முழுக்க சிறகடிக்கும்
என் சின்னக் குருவியே
கொஞ்சம் வாயேன்..
இன்றைய உன் வகுப்பறைக்குள்
கடைசி மணி எப்போது ஒலிக்குமென
சொல்லி விட்டுப் போயேன்..
எஸ். பாயிஸா அலி.
எஸ். பாயிஸா அலி.
No comments:
Post a Comment