INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 12, 2021

TK KALAPRIYA

 A POEM BY

TK KALAPRIYA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



SHADOWS ON THE MOVE

You are all too greedy
to be strolling in the sleep of the Polar bear.
Even if it s larva, it is okay,
you say
In order not to see holes in your shadow
Even the snake-holes are okay for thee.
Please don’t shamelessly get inside
the dreams of embryo
Please stay outside
with the shadows filled with your dusty experience
Let Dream and Poetry be not soiled.

(* If a person happens to see holes in his shadow it implies that his end is nearing _ such a belief prevails in and around Thirunelveli).
Tk Kalapria

......நடமாடும் நிழல்கள்
___________________________
பனிக்கரடியின்
தூக்கத்தில் உலவும்
பேராசை உனக்கு
கூட்டுப்புழுவின்
கனவெனினும்
பரவாயில்லைதான்
என்கிறாய்
உன்நிழலில் ஓட்டைகள்*
பார்க்காமலிருக்க
பாம்பின் புழைகளும்
சம்மதம் உனக்கு
வெட்கமற்று
கருச்சிசுவின்
கனவுகளில்
புகுந்து விடாதே
உன் அனுபவ அழுக்குப் படிந்த
நிழல்களுடன்
வெளியேயே இரு
கனவும் கவிதையும்
பிழைத்துப் போகட்டும்
___________________________________________________
*தன் நிழலில் துவாரங்களை ஒருவன் பார்க்க நேரிட்டால் அவனுக்கு மரணம் நெருங்கி விட்டது என்று நெல்லைப் பகுதியில் ஒரு வட்டார வழக்கு உண்டு.
(மீள்)

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



RED TRAILS STUCK ON THE SCREEN


I enter into a studio
For taking a still photograph.
Casting aside memories
I start searching for a beautiful back screen
Such a screen came into view.
In that screen with hundreds of teardrops reddening
moisture has spread
In those red trails
particles of thousands of agonies
silent
have turned into still photograph.
Choosing the screen I set out to take a picture.
A person who entered into the cabin then
insisted that he be given my ink-coated little finger
and stood there stubbornly.
Finally I tried severing that finger
for offering it to him.
That man took a photograph with that finger
for the next hunt for vote
Several more red droplets
start gathering on the screen surrounded by mountains.

திரையில் படிந்த சிவப்பு தடங்கள்.

நிழற்படம் எடுப்பதற்காக ஸ்டூடியோ ஒன்றிற்குள் நுழைகிறேன்.
ஞாபகங்களை விலக்கியபடி
அழகான பின் திரையொன்றை
தேட தொடங்கினேன்..
எனக்கு பிடித்த ஒரு திரை கண்களில் பட்டது.
அத்திரையில் பலநூறு கண்ணீர் துளிகள் சிவந்து
ஈரம் படர்ந்திருந்தது.
அச்சிவப்பு தடங்களில்,
மறைந்துப்போன
ஆயிரமாயிர வேதனைகளின் துகள்கள்
மெளனித்து படமாகிக் கிடந்தன.
நான் அத்திரையினை தெரிவாக்கிக்கொண்டு
படம் பிடிக்க தயாரானேன்.
அப்போது அறைக்குள் நுழைந்த ஒருவர்,
எனது மைபூசப்பட்ட
அந்த சிறுவிரல் தனக்கு வேண்டுமென அடம்பிடித்து நின்றார்.
இறுதியாக அவரிடம்,
அவ்விரலினை வெட்டி கொடுக்க முயன்றேன்.
அம்மனிதர்
அடுத்த வாக்கு வேட்டைக்காக
அவ்விரலுடன் தான் புகைப்படமொன்றை பிடித்துக் கொண்டார்.
மேலும் சில சிவப்பு துளிகள்
மலை சூழ்ந்த திரையில்
படியத் தொடங்கியது.
~~~
10.11.2021
மாரிமுத்து சிவகுமார்.

IYYAPPA MADHAVAN

 A POEM BY

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

He has small ears
While agreeing with what someone says
They would dance in tune with the words uttered.
if someone conversed affectionately
it would curl and swirl like dog’s
wagging tail
If abuse means
reddening it would dance in frenzy.
When a koel sings
feeling startled by the loud noises
entrenched in silence
It would shrink and curl into a snail.
Hearing sobs
It would stand stunned
In the sounds of laughter
It would softly smile to itself.
Listening through its tiny holes
abuses invectives insults
these small ears
are unable to sense the secrets
murmured
yet he keeps teaching those tiny ears
to insert themselves into the hole in the door
and overhear
Soon they would become an expert in this art
Henceforth ears where words collide
might grow all too wide.

அவனுக்கு சின்னக் காதுகள்
யாராவது பேசுவதை ஆமோதிக்கிறபோது
சொற்களுக்கேற்றவாறு
நர்த்தனம் புரியும்
அன்பாக உரையாடியானால்
நாய் வாலைப் போல சுழற்றும்
வசைச்சொல்லென்றால்
சிவந்து சிவநடனம் புரியும்
ஒரு குயில் கூவுகிறபோது
அமைதியில் உறையும்
பெரிய சத்தங்களில் திடுக்கிட்டு
நத்தையைப் போல் சுருண்டுவிடும்
அழுகைக்குரல் கேட்கையில்
செய்வதறியாது திகைத்துப்போகும்
சிரிக்கும் ஓசைகளில் மெதுவாய்
புன்னகைத்துக்கொள்ளும்
அவதூறுகளை
தூற்றுதல்களை அவமானங்களை சிறுஓட்டைகளில் செவிமடுக்கும்
இந்தக் குட்டிக்காதுகளால்
முணுமுணுக்கப்படும் ரகசியங்களைதான் புலனுறு முடிவதில்லை
இருப்பினும் சின்னக்காதுகளை கதவுத்துவாரங்களில் புகுத்தி
ஒட்டுக்கேட்க கற்பித்து வருகிறான்
விரைவில் சாமர்த்தியத்திற்கு
வந்துவிடும் இனி
சொற்கள் மோதும் காதுகள் பெரிதாக வளர்ந்துவிடக்கூடும்.

KADANGANERIYAN THAMIZHNAADU

 A POEM BY

KADANGANERIYAN THAMIZHNAADU


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1

He who knows the pain of hunger
Uses the for feeding the fishes.
2
The strength of the fish
felt
while pulling at it
with the cork submerging
is enough
3.
He who has surrendered himself to defeat
Evolves into a great hunter.
4
He who sits on the shore
and throw the bait
has the trait of fish.

5
Eating the bait-worm
the fish pulls at the cork.
The baiter snatches and pulls back
The fish-bone
writhes and leaps on the ground

6
The fish didn’t bite
Nor the cork stirred
My eyes are intent on that
The river goes on
along its course

7
He who throws the bait
questions the river.

8
He who throws the bait
disturbs the focus of the river
concentrating on the current
Furious, the fish bites
9
Time flows river-like
Life swims fish-like
Events throw off
everything alike.

கடங்கநேரியான் தமிழ்நாடு

1 . பசியின் வலியறிந்தவன்
தூண்டிலை மீன்களுக்கு
உணவளிக்கப் பயன்படுத்துகிறான் .
2 .
தக்கை மூழ்க
சுண்டியிழுக்கும் போது
உணரும் மீனின் வலிமை போதும்
3 .
தோல்விக்கு
தன்னை ஒப்புக் கொடுத்தவனே
சிறந்த வேட்டையாடி யாகிறான் .
4 .
கரையிலமர்ந்து
தூண்டிலிடுபவனுக்கு
மீனின் குணம் .
5 .
தூண்டில் புழுவைத் தின்றபடி
தக்கையை இழுக்கிறது மீன்
சுண்டியிழுக்கிறான் வேட்டையாடி
தரையில் துள்ளுகிறது
முள்
6 .
மீனும் கடிக்கவில்லை
தக்கையும் அசையவில்லை
என் கண்களின் பார்வை அதிலேயே இருக்கிறது
ஆறு அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது .
7 .
தூண்டிலை வீசுபவன்
ஆற்றிடம் கேள்வி கேட்கிறான் .
8 .
ஓட்டத்தில் மனம் குவித்திருக்கும்
ஆற்றின் கவனத்தை சிதறடிக்கிறான்
தூண்டில் காரன்
கோபத்தில் கடிக்கிறது மீன் .
9 .
காலம் நதியென ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்வு மீனென நீந்துகிறது
சம்பவங்கள் வெளியே தூக்கி வீசுகிறது .
யாவற்றையும் .

K.STALIN

 A POEM BY

K.STALIN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


IMBALANCE

As soon as the bell rang
He who came running in haste
to the class
saw ofcourse only afterwards
that the grandma has given five rupee note
by mistake
instead of the one rupee.
The Maths teacher
after taking the lesson
declared that
the left side and the right side
are equal
He who went on feeling the five rupee coin
that was pricking in his pant-pocket
felt that
not all are equally balanced
always.

சமமின்மை

மணியடித்ததும்
அவசர அவசரமாய்
வகுப்பிற்கு ஓடிவந்தவன்
தாமதமாகத்தான் பார்த்தான்
ஆயா ஒரு ரூபாய் தருவதற்கு
தவறுதலாய் ஐந்து ரூபாய் தந்திருப்பதை.
கணித ஆசிரியர் பாடம் நடத்திவிட்டு
இடப்பக்கமும் வலப்பக்கமும்
சமமாக இருப்பதாய்ச் சொன்னார்.
தனது காற்சட்டைப் பையில் உறுத்திக்கொண்டிருக்கும்
ஐந்து ரூபாய் நாணயத்தைத்
தடவிக்கொண்டிருப்பவனுக்கு
எல்லாம் எப்பொழுதும் சமமாக இருப்பதில்லை
என்று தோன்றியது.
கே.ஸ்டாலின்

NISHA MANSOOR

 A POEM BY

NISHA MANSOOR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


He who never contemplates on another footwear

as long as he has one
One who wears the same wrist watch
for the past two decades
One who sports the same hairstyle
and goes around all these twenty-five years
One who hesitates to discard a handkerchief
till it turn into rags beyond redemption
One who firmly believes that
having a substitute for the belt worn
is but real extravaganza
One who still shaves and trims
his moustache and beard
with the bronze gadget
having super max blade
One who bathes with the same Cinthol soap
for the past thirty years
smiles mysteriously at the
all too rare human being
having five hundred ear-rings.

ஒரு செருப்பு இருக்கையில்
இன்னொரு செருப்பு குறித்து சிந்திக்காதவன்
ஒற்றைக் கைக்கடிகாரத்தை
இருபது ஆண்டுகளாக
அணிந்து கொண்டிருப்பவன்
ஒரே மாதிரியான சிகையலங்காரத்தில்
இருபத்தி ஐந்து ஆண்டுகள் உலா வருபவன்
முழுவதுமாக நைந்து கிழியாதவரை
கைக்குட்டையை நிராகரிக்கத் தயங்குபவன்
அணிந்திருக்கும் பெல்ட்டுக்கு மாற்று பெல்ட்
அதீத ஆடம்பரமென உறுதியாக நம்புபவன்
சூப்பர் மேக்ஸ் பிளேடு அணிந்த வெண்கல உபகரணத்தில்
இன்னமும் மீசைதாடி திருத்திக் கொள்கிறவன்
ஓல்டு சின்த்தால் சோப் கொண்டு
முப்பதாண்டுகளாகக் குளித்துக் கொண்டிருப்பவன்
ஐநூறு தோடுகள் வைத்திருக்கும்
அபூர்வ சிகாமணியைக் கண்டு
மாய முறுவல் பூக்கிறான்.

VATHILAIPRABA

 A POEM BY

VATHILAIPRABA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

For a bird to fall off
the hunter keeps wandering with his bow and arrow
For the bird’s egg
the snake keeps dangling
A tiger is seen
hiding in a bush.
upon the water surface
with its tongue stretched out
a frog lies in wait for the insect.
With a tree shedding off
its withered leaves
a bird shedding off
its feathers
the jungles remains as it is
unperturbed.
One who gets inside the woods and comes out
is blessed indeed!

ஒரு பறவை வீழ
எப்போதும் அம்புடன் அலைந்து கொண்டிருக்கிறான் ஒரு வேடன்.
பறவையின் முட்டைக்காகத்
தொங்கியபடி இருக்கிறது ஒரு பாம்பு.
புதர்களுள் புலி ஒன்று பதுங்கியபடி
காட்சி தருகிறது.
நீரின்மேல் தன் நீண்ட நாக்கை நீட்டியபடி
ஒரு பூச்சிக்காகக் காத்திருக்கிறது தவளையொன்று.
ஒரு மரம் தன் சருகை உதிர்க்க
ஒரு பறவை தன் சிறகை உதிர்க்க
எந்தச் சலனமுமில்லாமல் காடு
அதன்போக்கில் இருக்கிறது.
காடு நுழைந்து வெளியேறுகிறவன் பாக்கியசாலி!



INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE