A POEM BY
PRADHABA RUDRAN
A POEM BY
PRADHABA RUDRAN
TWO POEMS BY
PRADHABA RUDHRAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1.RAVING SOLITUDE
the cat snatched and hastened off.
What to do with the lock and key
That remain shock to the core?
Suseela knocks at the door.
for query no Nakulan
nor me to
respond.
Returning to the starting point
stands there the Time-doggy.
action reaction
a cyclic run.
The brush having finished its drawing
remains alone between
canvas and colour.
The artists
are impaled in the painting.
Insanely rapturous
the wheat field of
He, the Earless.
உன்மத்த ஏகாந்தம்
இமைகளைப் பூட்டிய வேகத்தில்
தவறவிட்ட நித்திரையை
பூனை கவ்விப் போனது
விக்கித்து நிற்கும்
சாவியையும் பூட்டையும்
என்ன செய்வது?
சுசீலா கதவைத் தட்டுகிறாள்.
கேள்விக்கு
நகுலனுமில்லை.
பதிலுக்கு
நானுமில்லை.
தொடங்கிய இடத்திலேயே
வந்து நிற்கிறது
காலநாய்.
வினைக்கு வினை
ஒரு சுழல் ஓட்டம்.
வரைந்து முடித்த தூரிகை
கித்தானுக்கும்
வண்ணத்திற்குமிடையில்
தனித்திருக்கிறது.
ஓவியர்கள்
ஓவியத்தில்
கழுவேறுகின்றனர்.
உன்மத்தத்தில்
காதற்றவனின் கோதுமைவயல்.
பிரதாப ருத்ரன்
***
POEM BY PRADHABA RUDRAN
திசைப்பறவையின் கனவுப் பாடல்
இங்கே இசைக்காத மூங்கில்காடுகளின் ஊடாய்
என்னை கட்டிவைத்திருக்கிறது காலம்
தொடர்கிறதா இன்னமும் அங்கே
என்னை சாட்சிக்கு வைத்துத் தொடங்கிய
உங்கள் விளையாட்டு
இங்கே வெடியில் தகர்ந்த மலைகளின் புகை
அதன் ஆன்மாவை ஊடறுக்கும் உலோகப்பாதை
யானைகள் நீர்குடித்த குட்டைகளில்
காகங்கள் சடலம்
உனக்கென இங்கிருந்து கொண்டுவர
காட்சிகள் ஏதும் மிச்சமில்லை மகளே
பிரயத்தனத் தோல்வியில்
வான் நோக்கி சபிக்கும்
நள்ளிரவு நாய்கள்
முன்னேகி மறைகிறது மேகத்துள் நிலவு
பூப்பதை நிறுத்திக்கொண்ட பூவரசு
நிறைவைக் கண்டதா தெரியாது
மனக்கண்ணின் குழிமையத்திலிருந்து
வெளிக்கிளம்பிய நீர்க்காகம்
பூமியின் மறுபாகத்து முலையில் நீர்பருகி
நிலை மாறித் தூங்கும் மகள் கனவில்
குரலெடுத்துப் பாடுகிறது
மலைகள் வளரக் கண்டு