INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

INSIGHT - JULY 2021






 



S.VAIDHEESWARAN

 FOUR POEMS BY

S.VAIDHEESWARAN



1.UP THERE ONE DAY
All around soap-foam clouds
Widespread wildernesses
In the in-between abyss
a drop of sky feigning the bluish lakes!
Deep down, as teeth of land
heaps of building crisscrossing.
While flying high
places turn nameless.
The heart moving inside a plane
experiences joy
in two different ways...
On the right,
sky’s festivities,
On the left
touching my finger
a child’s face laughing impishly.

Vaidheeswaran Sundaram

உயரத்தில் ஒரு நாள்
சுற்றிலும் சோப்பு நுரை மேகங்கள்
விரிந்த வெள்ளை வனாந்தரங்கள்
இடைப்பாழில் நீலம் பாரித்த ஏரிகளைப்
போலி செய்யும் துளிவானம்!
கீழே நிலத்துக்குப் பல்முளைத்தது போல்
கட்டிடக் குப்பல்கள் குறுக்குமறுக்காய்.
உயரப் பறக்கும் போது
ஊர்கள் பெயரற்றுப் போகின்றன
விமானத்துக்குள் நகரும் மனம்
இரண்டு விதமாய் மகிழுகிறது
வலதுபுறம் வானமண்டலக் கோலாகலம்
இடப்புறம் என் விரலைத்தொட்டுக்
குறும்பாய் சிரிக்கும் ஒரு மழலை முகம்

வைதீஸ்வரன்
ஒரு விமான அனுபவம்

2.CAESAR

It is to give it walking exercise
that the gentleman had a dog-collar latched around
the neck of Caesar
and pulled it along a number of streets.
In course of time
it got accustomed to everything _
The streets to be waded through
The lanes for halting
The corner for attending nature’s call
The city culture of wagging its tail from where it stands
without moving closer to the approaching bitch
and the hour of return
_All came to be known by heart.
As if two legs are rather irrelevant
with the passing of each day
it gained a gait as majestic as that
of the gentleman.
Even the disappearing difference
between who pulled and who ran
didn’t appear weird
to the onlookers.
But……
During yesterday’s morning walk
While going past the gentleman
I said “Hello!”
Turning at once
Caesar waved at me with its leg!
The gentleman ran panting
and that’s what worries me no end!
Vaidheeswaran Sundaram

ஸீஸர்
-----------------
நடை பழக்கத் தான் ஸீஸரை
பட்டை கட்டி இழுத்துப் போனார்
கனவான் தெருத் தெருவாக……..
நாளாவட்டத்தில்
அதற்கு எல்லாமே பிடிபட்டுப் போச்சு.
போகிற தெருக்களும்
நிற்கிற சந்துகளும்
ஒதுங்குகிற மூலையும்
நெருங்கும் பெட்டையை நெருங்காமல்
வாலாட்டும் நகரப் பண்பும்
திரும்பும் நேரமும் அத்து படியாச்சு.
இரண்டு கால் தேவையற்றது போல்
கனவானுக்கு இணையான கம்பீர நடையும்
வாய்த்தது போகப் போக!
யாரிழுத்தார்…யார் ஓடினாரென்ற
வித்யாசங் கெட்டதுவும்
விபரீதமாகத் தோன்றவில்லை.;
பார்ப்போருக்கு!
ஆனால்………..
நேற்று காலை நடையில்
கனவானைக் கடக்கும்போது
“”ஹலோ!” என்றேன்
சட்டென்று திரும்பி
காலால் “கை “ யாட்டியது ஸீஸர்!
கனவான் ஓடிக் கொண்டிருந்தார்…..மூச்சிரைக்க!
அது தான் எனக்கு இப்போது
கவலையாய் இருக்கிறது!!
*************
வைதீஸ்வரன்


3. ENIGMA
The sun shines
whether you like it or not
The sun shines
Cannot stop the rain
Crying ‘Go Away’
So the storm can’t be stopped
with a command.
Only after an uproarious descent
does a waterfall
turn into a river and subside.
These poems too seem to be of
the same substance.
Enigmatic outpourings of
an innate insistence.




4. DICTIONARY
“What is Ahimsa?”
Asked my child.
The meaning read long ago
has escaped my memory.
Same is the case with my neighbours.
They looked at me
amused with the thought
whether such a word exists at all
in the world at large.
‘The meaning for that word would surely be found
in old dictionary’ thought I
and, dusting it looked inside.
Thank god – the dictionary still remained
as eroded map.
I tried to unfold the
required ’அ’ page….
It all stuck together
as matted locks of hair.
Only after striving hard
I could succeed at last.
Still, a hole in ‘அ’
அறம் (righteousness/benevolence) அன்பு (love)
ஆனந்தம்(Bliss) ஆறுதல்(solace) அமைதி(quiet)
everything suffering perforation
Ahimsa losing ' A'
remained Himsa all the way.
Should discard the dictionary.
Nothing else can be done. Or,
can give it to the date-fruits vendor
and get the fruits in return.
Felt ashamed to concede to my son
the fact that I have forgotten….
Interpreting it wrongly would be
doing wrong to one whole generation….
‘My dear son, though knowing
I am unable to prove it to you,
as things stand today.
Bring it alive,
finding out its meaning in your own way.
But, don’t lose it as we have done….”
Observed I.
This was all I could say.

அகராதி

அஹிம்சை என்றால் என்னவென்று
கேட்டாள் என் குழந்தை
அர்த்தம் எனக்கு எப்போதோ படித்தது
மறந்து போச்சு.
அக்கம் பக்கத்திலும் ஆருக்கும்
தெரியவில்லை.
ஊருலகத்தில் அப்படி ஒரு
வார்த்தையுண்டாவென்று என்னை
வேடிக்கையாகப் பார்த்தார்கள்
பழங்கால அகராதியைப் புரட்டினால்
அதற்கு நிச்சயம் பொருள் கிடைக்கும் என்று
தூசு தட்டிப் பார்த்தேன்.
நல்லவேளை அகராதி மீதியிருந்தது
செல்லரித்த வரைபடமாக.
‘’ஆ’வன்னா பக்கத்தை
பிரிக்கப் பார்த்தேன்….
ஒட்டிக்கொண்டு கிடந்தது சடையாக.
போராடித்தான் அதை
திறக்க முடிந்தது.
ஆனாலும் ‘ஆ’வில் ஒரு பொத்தல்
அறம் அன்பு ஆனந்தம்
ஆறுதல் அமைதி அத்தனையும் பொத்தல்.
அஹிம்சை ஹிம்சையாக இருந்தது.
அகராதியை தூக்கி எறிவது தவிர
வழியில்லை. அல்லது
எடைக்குப் போட்டு ஈச்சம்பழம் வாங்கலாம்.
மகனிடம் மறந்துபோன விஷயத்தை
ஒப்புக்கொள்ள வெட்கமாயிருக்கிறது….
பொருளைத் திரித்துக்கூறுவதும்
ஒரு தலைமுறைக்கு நான் செய்யும் துரோகம்….
மகனே, எனக்குத் தெரிந்தாலும்
உனக்கு நிரூபிக்க முடியாத சூழல் இன்று…
மீண்டும் அத பொருளை நீயே கண்டறிந்துகொள்….
ஆனால் எங்களைப்போல்
தொலைத்துவிடாதே…. என்று
சொல்லிவைத்தேன் பொதுவாக.

(எஸ்.வைதீஸ்வரன்)

VASANTHADHEEPAN

 A POEM BY

VASANTHADHEEPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


STARS
I looked at the sky
Tiny droplets of luminous flowers
bloomed there in abundance
spreading far and wide.
Wherefrom they have fallen?
Could it be that they are the hearts of those
dead and gone?
Or the souls of those yet to be born?
Even after they are all well-lit
How come there is darkness still?
What sort of a sea is that
With little drops of fishes wander swimming?
Which giant has plucked off whose eyes
and have strewn them thus?
Whose gold coins stealthily stored
lie scattered there?
Are they the flashing lights of wagons
speeding up above?
Whose teardrops are those?
Are fireflies perching on the tree?
Whose frozen bloodstains?
Which hunters are wandering with headlights
tied around their foreheads?
Are they the gleaming faces of starving animals
of the dark jungle?
Could it be that the God from cosmos
spy on the seven worlds
with his eyes myriad?
What grains are they
poured out of which sack?
The eggs of which birds?
Plunging me into the depths of hunger
they sprinkle furies of all sorts
inside the entire gamut of my heart
as morsels lost.

VASANTHADHEEPAN

நட்சத்திரங்கள்
___________________________
வானத்தைப் பார்த்தேன்
சின்னஞ் சிறு ஒளிப் பூக்கள் ஏராளமாய்
பரவிக் கிடந்தன
எங்கிருந்து இவை உதிர்ந்தன?
ஒரு வேளை
இறந்தவர்களின் இருதயங்களோ...
இல்லை
இனி பிறப்பவர்களின் ஆன்மாக்களோ...
அகல் விளக்குகளாய் ஜொலிக்கும்
அவைகள் ஏற்றி வைக்கப்பட்டும்
இன்னும் ஏன்? இருட்டாயிருக்கிறது
என்ன வகையான கடல் அது?
துளித் துளி மீன்கள் நீந்திச் திரிகின்றன...!
எந்த அரக்கன்
எவரின் கண்களைப் பறித்து
இப்படி போட்டு வைத்திருக்கிறான்
யார்?
பதுக்கி வைத்திருக்கும்
தங்க, வெள்ளி நாணயங்கள்
அங்கே
சிதறிக் கிடக்கின்றன
மேலே நகரும் ஊர்திகளின்
எரியும் விளக்குகளா...!
யார்?
சிந்திய கண்ணீர்த் துளிகள்
ஏதோ மரத்தில்
மின்மினிகள் அமர்ந்து இருக்கின்றனவா?
எவரின்
உறைந்த ரத்தச் சுவடுகள்?
எந்த? வேட்டைக்காரர்கள்
நெற்றியின் மேல்
டார்ச்சுகளைக் கட்டி அலைகிறார்கள்
இருண்ட காட்டின்
பசித்த மிருகங்களின்
ஒளிரும் முகங்களா?
பிரபஞ்சத்திலிருந்து கடவுள்
பல்லாயிரம் கண்களால்
ஏழு உலகங்களை
வேவு பார்க்கிறாரோ...!
எந்த மூட்டையிலிருந்து கொட்டிய
என்ன வகையான தானியங்கள்?
எந்தப் பறவையின் முட்டைகள்?
என்னை பசி மயக்கத்திற்குள் தள்ளி
ரௌத்ரங்களைக் குவிக்கின்றன மனவெளியெங்கும்
பறிபோன
சோற்றுப் பருக்கைகளென.
வசந்த தீபன்

LEENA MANIMEKALAI

 A POEM BY

LEENA MANIMEKALAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

TURNING MEANINGS DIVERSE INTO WORDS

How to smoke a cigarette
Its volume
shape
varieties
cause disorientation
between distances.
In smoking the White roll
with Black stuffed inside
Inhaling a strand of hues myriad
and exhaling the rest nuance
_ So the musician’s finetuning.
Playing the game of reversing
Liquid
Solid
and Air
Turn into one word
Meanings diverse
such as
Truth
Lie
Dream
and more.
The world is circular
in ash-colur.

வெவ்வேறு அர்த்தத்தை வார்த்தையாக்குவது

ஒரு சிகரெட்டை எவ்வாறு புகைப்பது
அதன் அடர்த்தி
வடிவம்
வகைமைகள்
தூரங்களினிடையே
ஒருவித அவசத்தை
ஏற்படுத்துகிறது
கறுப்பை இடுக்கியிருக்கும்
வெள்ளைச் சுருளைப்
புகைப்பதில்
ஓராயிரம் வண்ணங்களின்
ஒரு கற்றையை
உள்ளிழுப்பதும்
மற்றவற்றை
வெளியேற்றுவதுமாய்
ஒரு இசைக்கலைஞனின்
நுட்பம்
திரவத்தை
திடத்தை
வாயுவை
மாற்றிப்போட்டு
விளையாடுவது
உண்மையை
பொய்யை
கனவை என்று
வெவ்வேறு அர்த்தத்தை ஒரே வார்த்தையாக்குகிறது.
உலகம் வட்டமானது
சாம்பல் நிறத்திலானது.
லீனா மணிமேகலை
(உலகின் அழகிய முதல் பெண்(2008) தொகுப்பிலிருந்து)






VATHILAIPRABHA

 A POEM BY

VATHILAIPRABHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

It is a bird that draws a line
on the vast expanse of blue sea
with its wings.
Flying up above
it unfolds into a thin dot in the sky.
Tree-branches sans leaves
turned dry,
Lakes waterless,
Rivers deprived of sand
_ so feeling anguished
it would fly above the sea
Global warming turning intense
the blue sea increasing its height
would try to touch the bird
with its heat wave.
The bird losing its feathers in
the fury of heat wave
would turn into ash at last
just like that.
‘Do the birds migrate from
forests and continents’ _
asks my son
I have no way of showing him
that once upon a time there existed
a World of Birds.

நீலக்கடலின் பரந்த பரப்பில்
தன் இறகுகளால் கோடு கிழிக்கும் பறவையது.
உயரப் பறந்து மெல்லிய
புள்ளியாய் விரிகிறது வானில்.
இலையற்ற காய்ந்த மரக்கிளைகள்
நீர் வற்றிப்போன ஏரிகள்,
மணல் தொலைத்த ஆறுகளுமென
மனம் வெதும்பி நீலக் கடல்மேல் பறக்கும்.
புவிச்சூட்டின் உக்கிரத்தில் நீலக்கடல்
தன் உயரம் கூட்டி
வெப்ப அலையால் பறவை தொட முயலும்.
வெப்பக் காற்றின் சலனத்தில்
தன்
சிறகுதிர்க்கும் பறவை முடிவில்
சலனமின்றி சாம்பலாகும்.
காடு விட்டு கண்டம் விட்டு
பறவைகள் பறக்கின்றனவா? என
கேட்கும் பிள்ளையிடம்
காண்பிக்க முடியவில்லை
பறவை உலகம் ஒன்று
இருந்ததென்று.

வதிலைபிரபா
(மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்)

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE