INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

VASANTHADHEEPAN'S POEM

 A POEM BY 

VASANTHADHEEPAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Wandering sun-like

I love the forests

Hail the rivers

Sing the glory of men

Kiss the birds

I am not I the one_

The great grand dream of seclusion.

From scars spring the fountain of agony.

The anguish of dry lands

blow as biting cold wind

Inside fruits turned rotten

worms writhe

The cities smelling foul

caught in the hands of smoke

struggle to breathe

Mossy Rocks

fly away as specs of powder.

Waterways with fountainheads

cease to be.

Starving animals

wander gaping in concrete jungles

Bearing eggs

the birds bang against cell towers

and breathe their last.

Gulping beer

Shiva is dancing solo.

Parvathi is busy trimming her eyebrows

in beauty-parlours.

Muruga and Ganesha

are immersed in video game.

Time

smashing the dreams

is swallowing it all.



காடுகளை நேசிக்கிறேன்

நதிகளைப் போற்றுகிறேன்

மனிதர்களைப் பாடுகிறேன்

பறவைகளை முத்தமிடுகிறேன்

நான் நானில்லை

தனிமையின் பெருங் கனவு

தழும்புகளிலிருந்து பீறிடுகிறது

வேதனையின் நீரூற்று

உலர்ந்த நிலங்களின் பரிதவிப்பு

ஊதல் காற்றாய் வீசுகிறது

வெம்பிய கனிகளுக்குள்

புழுக்கள் நெளிகின்றன

நாறும் நகரங்கள்

புகையின் பிடியில்

மூச்சுத் திணறுகின்றன

பாசியேறிய கற்பாறைகள்

பவுடர் தூளாய் பறந்தோடுகின்றன

ஊற்றெடுக்கும் நீர்த்துறைகள்

அற்றுப் போகின்றன

பசித்த வன மிருகங்கள்

கட்டிட வனங்களில் வெறித்துத் திரிகின்றன

முட்டைகளைச் சுமந்தபடி

பறவைகள்

செல் கோபுரங்களில் முட்டிச் சாகின்றன

பியர் குடித்தபடி

சோலோ நடனமாடுகிறான் சிவன்

பியூட்டி பார்லர்களில்

புருவங்களைச்

செதுக்கிக் கொண்டிருக்கிறாள் பார்வதி

முருகனும் கணேசனும்

வீடியோ கேம்மில் மும்முரமாயிருக்கிறார்கள்

காலம்

கனவுகளை உடைத்துத்

தின்று கொண்டிருக்கிறது.


வசந்ததீபன்
 —

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE