INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, September 4, 2026

MKM SHAKEEB

 A POEM BY 

MKM SHAKEEB


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)




This month also

is brimming with memories

Drenched in tears

Wide awake in prayers


These are reminiscences of

the untimely hour penned by guns

These are trails of those 

with life turned frozen

These are the uproars of a silence

caught in between


In each house each place

scars galore

to think of and sob

Blood splashed

Mutilated bodies lying

Lost dreams

White saris – so

there are hundred and more


The pain of loss everyone has

This form the basics of understanding

in any case.


இம் மாதமும் 

நினைவுகளால் நிரம்பியிருக்கிறது

அழுகைகளால் ஈரமாகியிருக்கிறது

பிரார்த்தனைகளால் 

விழித்திருக்கிறது.

துப்பாக்கிகள் எழுதிய

அகாலத்தின் நினைவுகள் இவை 

உயிருறைந்து போன சுவடுகளின் தடங்கள் இவை


இடையிலகப்பட்டதோர்

மௌனத்தின் பேரிரைச்சல்கள் இவை.

ஒவ்வொரு வீட்டிலும், ஊரிலும்

நினைந்தழுவதற்கு

நிறையத் தழும்புகள்

சிதறித் தெறித்த குருதிகள்

சிதிலமாய்க் கிடந்த உடம்புகள் 

தொலைந்த கனவுகள் 

வெள்ளைப் புடவைகள் என

நூறுண்டு.


இழப்பின் வலி எல்லார்க்குமுண்டு என்பதே

புரிதலின் அரிச்சுவடி.


MKM SHAKEEB

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - AUGUST 2026

 INSIGHT AUGUST, 2026 (a bilingual blogspot for contemproary tamil poetry) 2026insight.blogspot.com