INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 6, 2026

INSIGHT - AUGUST 2026

 INSIGHT AUGUST, 2026

(a bilingual blogspot for contemproary tamil poetry)

2026insight.blogspot.com



Friday, September 4, 2026

ATHMAJIV

13 POEMS BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


......................................................முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித் தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன். 

நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.

நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241

..............................................................................................................

POEMS BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


I still remain

in this cabin

Ho, Friendly Flower.



After very many years

I utter your name

Once again today.


You are the indistinct warmth  of

one half of mine.


It was you who taught me 

The language of Motherhood 

hiding inside me.


Inside the unread pages of

The story unwritten of

He who couldn’t live without attachments

And turned a prey to the man-eaters 

Who feed on his affection

You still remain

Alive.


In the almirahs of forgotten memories

Escaping the termites of sorrow

infesting even minuscule reminiscences

You remain still alive

deep down...


Being in the midst of all these humans

who move on with the flow of Time

I remain still here

As signifying a moving doll.


In the midst of my mass of words

that none reads

the noise of angst keeps sounding

in silence.


I remember those words of yours

Uttered before many years

Smilingly - “Just ignore those who understand not

the language of silence

and keep going”.


I recall now.

“The language of silence

would always echo as deafening sound”

True, Blossom Buddy....


Time has made the hands of he 

who penned Poetry

to stretch out for alms.


I, being crushed under the wheels of poverty

My scream seems to 

Stay outside ears many. 


Wearing the garment of  humiliations

I stand stark naked 

as personification of contradictions.


In this cabin called body

I

Still remaining alive


இந்த அறைக்குள்தான்

இன்னுமிருக்கிறேன்

சிநேகப்பூ.


பல வருடங்களுக்குப் பிறகு

மீண்டும் உன் பெயரை

உச்சரிக்கிறேன் இன்று.


என்னொரு பாதியின் உருவற்ற

மென்மை நீ.


எனக்குள் ஒளிந்திருக்கும்

தாய்மையின் மொழியை

கற்றுத் தந்தவள்.


பற்றர வாழ முடியாதவனின்

பாசத்தை தின்னும் புறந்தின்னிகளின்

கொடுரப்பசிக்கு இரையாகிப் போனவனின்

எழுதப்படாத கதையில்

வாசிக்கப்படாத பக்கங்களுக்குள்

இன்னும் நீ

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்.


மறக்கப்பட்ட ஞாபகங்களின் அலமாரியில்

சின்னஞ்சிறு நினைவுகளையும் அரித்த

துயரக் கரையான்களிடமிருந்து தப்பித்து

இன்னும்தான் உயிர்த்திருக்கிறாய்

உள்ளுக்குள் நீ.


காலத்தின் நகர்வுகளில் நகர்ந்து செல்லும்

இத்தனை மனிதர்களின் இடையில் நானும்

நகர்ந்து கொண்டு

இன்னும்தான் இங்கிருக்கிறேன்

அசையும் பொம்மையின் அடையாளமாய்.


யாரும் வாசிக்காத என்

சொற்களின் கூட்டத்திற்கிடையில்

சோகத்தின் சத்தம் ஒலித்துக் கொண்டுதான்

இருக்கிறது மெளனமாக.


"மௌனத்தின் மொழி புரியாதவர்களை

புறந்தள்ளிப் போய்கொண்டே இரு" என்று

அன்றொருநாள் நீ

புன்னகைத்தபடி கூறியதை

நினைத்துக் கொள்கிறேன் இப்போது.


"மௌனத்தின் மொழி எப்போதும்

பெருஞ்சப்தமாகத்தான் எதிரொலிக்கும்”

உண்மைதான் சிநேகப்பூ.


கவிதை எழுதியவனின் கைகளை

ஏந்த வைத்து யாசிக்க வைத்தது

காலம்.


வறுமையின் சக்கரத்தில் நசுங்கிக் கதறும்

என் சொற்களின் சத்தம்

யார் காதிலும் விழுவதாயில்லை.


அவமானங்களின் ஆடையணிந்து

நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறேன்

முரண்களின் மொத்த உருவமாய் இன்று.


உடல் என்ற இந்த அறைக்குள்

உயிருடன்தான் இருக்கிறேன்

இன்னும் நான்.


ஆத்மாஜீவ் :  #அகபுத்தகம்_IB_68  : #சிநேகப்பூ


(2)


It was from the day that I parted from the hand that held mine
I understood the meaning of the word Orphan.

Mother’s hand
Father’s hand

My daughter and son held my hand
Now they don’t.

Today its comprehension
Seems to me having different dimension

I know not whether they realize  it
Yet I do feel the word Aloneness.

As she has become half of mine
I can’t disunite my wife’s hand

One who is brave always
Since the day I had stretched my hand, begging
She has turned disintegrated; lonely.

Just as the words of poet beseeching
None would be accompanying
in the end.

With my one hand
 I softly hold the other.

Before the moisture of water 
poured on the soil
gets dried up
Should reach my place...
That’s all.

என் கையைப் பிடித்திருந்த கையை
விட்டுப் பிரிந்த நாள்முதல்தான் புரிந்தது
அனாதை என்ற சொல்லின் அர்த்தம்.

அம்மாவின் கை
அப்பாவின் கை

என் கையை பற்றிப் பிடித்திருந்தார்கள்
மகளும் மகனும்.
இப்போது விட்டு விட்டார்கள்.

இன்று அதன் அர்த்தம்
வேறுமாதிரி இருக்கிறது
எனக்கு.

அவர்கள் இதை உணர்ந்தார்களா என்று
தெரியாது என்றாலும் நான்
தனிமை என்ற சொல்லை உணர்கிறேன்.

ஒருபாதி கலந்து விட்டதால்
மனைவியின் கையை தனித்து
பிரிக்க முடியவில்லை என்னால்.

எப்போதும் தைரியமாக இருப்பவள்தான்
நான் கையேந்திய நாள்முதல்
தனிமைப்பட்டு விட்டாள்
யாசிக்கும் கவிஞனின் சொற்களைப் போல.

யார் கையும் உடன்வரப் போவதில்லை
கட்டங்கடைசியில்.

என் கை ஒன்றை மறுகையால்
மெல்லப் பிடித்துக் கொள்கிறேன்.

மண்ணில் ஊற்றிய தண்ணீரின் ஈரம்
உலர்ந்து போவதற்குள்
ஊர் போய் சேரவேண்டும்
அவ்வளவுதான்.

ஆத்மாஜீவ்

(3)
The anguished cries of those roots 
buried deep down
Those birds knew not
They built their nests in the branches
Relished fruits – unripe and ripe
Many a wayfarer reposed there.
Tree too cannot escape the Seasonal cycles
It accepted the different seasons 
Without any complaint.
Though all the leaves withered and fell down
The tree didn’t feel sad.
Leaves would sprout anew
It very well knew.
It cursed the merciless hearts of some
Proceeding to cut the branches of tree for firewood.
It is in the branches that birds build their nests.
Seeing that  the number of birds’ nests
Has gone down
It felt sad.
Unripe ripe fruits too
Are reduced in number.
Have grown old.
Roots having no strength  to suck moisture
_ so it began cursing its own self.
As fruits became less
The birds too shifted their nests 
to some other trees
Also,  due to branches getting reduced
When a terrible tornado lashed
The taproot couldn’t withstand
The pain unbearable of separating from
the soil
The roots couldn’t endure.
In the well of a night
When 
Deadly wind blew
Coming off the land
The giant tree remained 
lying on the land
roots were seen out
wet utmost.

புதைந்திருக்கும் வேர்களின் குமுறல்களை
அந்த பறவைகள் அறியவில்லை.
மரக்கிளைகளில் கூடுகள் கட்டின.
காய்கனிகளை ருசித்தன.
வழிப்போக்கர்கள் பலரும்
இளைப்பாறினார்கள்.
பருவகாலச்சுழற்சியிலிருந்து
மரம் மட்டும் விடுபடுமா.
எல்லாக் காலங்களையும் 
முணுமுணுப்பின்றி ஏற்றுக் கொண்டது.
எல்லா இலைகளும் உதிர்ந்தபோதும்
மரம் வருத்தப்படவில்லை.
மீண்டும் துளிர்க்கும் என்று
அதற்கு தெரியும்.
மரக்கிளைகளை
விறகுக்காக வெட்டிப் போகும்
சிலரின் ஈரமற்ற நெஞ்சத்தை சபித்தது.
மரக்கிளைகளில்தான் பறவைகள்
கூடுகளை கட்டிக் கொள்கிறது.
இப்போது
பறவைகளின் கூடுகளின் எண்ணிக்கை
குறைந்து போனதை கண்டு வருந்தியது.
காய்கனிகளும் குறைய ஆரம்பித்தன.
மரத்திற்கு வயதாகி விட்டது.
ஈரம் உறிஞ்ச திராணியற்ற வேர்கள்
என்று
தன்னைத்தானே சபிக்கத் துவங்கியது.
 பழங்கள் குறைந்ததால்
பறவைகள் தங்கள் கூடுகளை
இடம் மாற்றிக் கொண்டது.
மரக்கிளைகள் குறைந்ததாலும்தான்.
கடும் புயல் ஒன்று வந்தபோது
ஆணிவேரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
நிலத்திலிருந்து பிரித்துக் கொள்ளும்
அம்மாபெரும் வேதனையை வேர்களால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு இரவின நடுசாமத்தில்
பெரும்காற்று ஒன்று வீசியதில்
நிலத்திலிருந்து பிரிந்து
நிலத்திலேயே விழுந்து கிடந்தது
மரம்.
வேர்கள வெளியே தெரிந்தன
நிறைய ஈரத்துடன்
ஆத்மாஜீவ்

(4)

Their palms are empty
I continue begging for alms
My palms  too remain empty

Behind the screen
They collect my  tears
That quenches their thirst.

Mortgaging my self esteem prestige and what not
I now stand at the street corner
With hands stretched out
Begging
I am

About those who
Witnessing my sufferings 
Turning the other way
and go past
I have no complaints.

In the past
My bowl was brimming with
Words.
Today
Just the sounds of their final breath
are heard.

Those who go beyond me
Turn and see
My turbulent heart

The wail of my soul oscillating
in the spot where I had lost 
my Pride and Poise
go and hide
inside 
words unwritten.

Dipping my tears
in Night’s black
I draw a face
That stands as 
the statue of sorrow.

அவர்களின் கைகள் காலியாக உள்ளன.
நான் யாசிப்பதை தொடர்கிறேன்.
எனது கைகளும் காலியாக உள்ளது.

திரைமறைவில்
என் கண்ணீர்த் துளிகளை
சேகரிக்கிறார்கள் அவர்கள்.
அது
அவர்களின் தாகம் தணிக்கிறது.

எனது மானஅவமானங்களை
அடகு வைத்து இப்போது
தெருமுனையில் வந்து நிற்கிறேன்
கைகளை ஏந்தி யாசித்தபடி
நான்.

என் துயரங்களை
கண்டுங்காணாமல்
கடந்து செல்பவர்கள் பற்றின
புகார்கள்  ஏதுமில்லை
என்னிடம்.

முன்பெல்லாம்
சொற்கள் நிறைந்திருந்தது
எனது பாத்திரத்தில்.
இன்று அதன் இறுதி மூச்சின்
சப்தங்கள் மட்டுமே கேட்கிறது.

என்னைக் கடந்து செல்பவர்கள் 
திரும்பிப் பார்க்கிறார்கள்
அலைப்புறும் என் மனத்தினை.

எனது கம்பீரத்தை தொலைத்த இடத்தில்
ஊசலாடும் என் ஆன்மாவின் கதறல்
எழுதப்படாத வார்த்தைகளுக்குள்
ஔிந்து கொள்கிறது.

இரவின் கருமையில்
எனது கண்ணீரைத் தொட்டு
ஒரு முகத்தை வரைகிறேன்
அது
துயரின் சிலையாக நிற்கிறது.

ஆத்மாஜீவ்

(5)

There my bird
circling in the sky
With direction lost

Not knowing where to migrate
Right in front
Weather keeps changing for ever
 
In the soft fluttering of 
the wings of bird
that wander in search of 
a place to recline
My poetry is being written.

திக்கு திசை தெரியாது
வானில் வட்டமடிக்கிறது
என் பறவை.

நேரெதிரில்
மாறிக் கொண்டேயிருக்கிறது
வானிலை.

இளைப்பாறுவதற்கு ஓர்
இடம் தேடி
அலைகிற பறவையின்
மெல்லிய சிறகசைப்பில்
எழுதப்படுகிறது
என் கவிதை.

ஆத்மாஜீவ்

(6)


In dualities 
Life remains clinging 
in one alone

With the hope that 
it would dawn
Looking at the sky
the flower’s wait 
would stay alive

Is Life drawn?
in the elongating night’s curtain

இருமைகளில் ஒன்றில் மட்டுமே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை. 

விடிந்து விடும்
என்ற நம்பிக்கையுடன்
வானத்தைப் பார்த்தபடி
உயிர்த்திருக்கும்
ஒரு பூவின் காத்திருப்பு.

நீளும் இருளின் திரைச்சீலையில்
வரையப்பட்டிருக்கிறதோ வாழ்வு.

ஆத்மாஜீவ் 

(7)
PLEASE STAY WITH ME, MY FRIEND
You
be here, My Friend,
by my side

 I float in faith
always

Faith in God Satan
Ghosts Demons Spirits
and on Humans

I am one having faith 
in the dreams that come during sleep
and several  realities
when awake

From God to realities
I kill them too.

That resurrection would happen
again and again _

This faith of mine
with no change remains

Killing God
I wake up Satan
Slicing Satan’s head
I fix God’s face.

This is how
killing any and all
I pursue resurrection
with a murderous sword.

Today – your turn

Now you kill me
After I am resurrected
please don’t go away

It is you alone 
sitting inside 
is still left
without leaving me.

Please remain by my side, Friend
Forever.

என்_அருகிலேயே_இரு_நண்பா

நீ
இங்கேயே இரு நண்பா.
என் அருகில்.

எப்போதும் நான்
நம்பிக்கையில் மிதப்பவன்.

கடவுள் சாத்தான்
பேய் பிசாசு ஆவிகள் 
மற்றும்
மனிதர் மீதான நம்பிக்கைதான்.

உறங்கும்போது வரும் கனவையும்
விழித்திருக்கையில்
சில நனவுகளையும்
நம்பிக் கொண்டிருப்பவன்.

கடவுள் முதற்கொண்டு
நனவுகள்வரை
கொலை செய்தும் விடுகிறேன்.

மறுபடி மறுபடி
உயிர்த்தெழுதல் நடக்குமென்ற
எனது நம்பிக்கையில்
மாற்றம் ஏதுமில்லை எனக்கு.

கடவுளை கொலை செய்து
சாத்தானை எழுப்புகிறேன்.
சாத்தானின் தலையை வெட்டி
கடவுளின் முகம் பொருத்துகிறேன்.

இப்படித்தான்
ஒவ்வொன்றையும் கொலை செய்து
உயிர்த்தெழுவதை பின்தொடர்கிறேன் கொலைவாளுடன்.

இன்று உன் முறை.

இப்போது என்னை நீ
கொன்றுவிடு.
நான் உயிர்த்தெழுந்தபின்
தயவுசெய்து சென்று விடாதே.

உள்ளே உட்கார்ந்திருக்கும்
நீ ஒருவன்தான்
விட்டு விலகாது மிச்சமிருக்கிறாய்
எனக்கு.

என் அருகிலேயே இரு நண்பா
எப்போதும்.

ஆத்மாஜீவ்


(8)

The pain of not being able to return
to the passage gone beyond
is being relived
by going there
with the wings of words
is what the grand world
of the writer indeed.

The height of  release
Is but a hiatus.

That 
would be forever conversing 
in the language of silence.

That is
the soft  music of Life
Those having ears listen
When the heart wanders 
in this space
That can’t be filled  with Life
Deficiency fills and swells
I fancy

The bird craving to fly
in the bygone sky
is the writer’s heart  - Oh My!

கடந்துபோன பாதைக்கு
திரும்ப முடியாத வலியை
வார்த்தைச் சிறகுகளால்
மீளச் சென்று வாழும் மனம்தான்
படைப்பாளியின் பெரும் உலகம்.

விடுபடுதலின் உயரம்
ஓர் இடைவெளி.

அது
மௌனத்தின் மொழியில்
பேசிக் கொண்டேதான் இருக்கும்.

அது
உயிரின் மெல்லிய இசை. 
காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.

உயிரிட்டு நிரப்ப முடியாத
இந்த இடைவெளியில்
மனம் சஞ்சரிக்கும்போது
போதாமை நிரம்பி விடுமென
நினைக்கிறேன்.

கடந்து விட்ட வானத்தில்
பறக்கத் துடிக்கும் பறவை
படைப்பாளியின் இதயம்.

ஆத்மாஜீவ்  

(9)
I long to see Mother
The craving proves overwhelming
Why so? I am at a loss to know.

Relations  there yet not there
Siblings being indifferent to the core

My poem  and I 
Facing rejection
Faring all alone

Though I have a family of my own
A life my own
Yet 

Today
I long to see my mother
The craving proves overwhelming
Why so? I am at a loss to know….
அம்மாவை பார்க்க வேண்டும் என்று
மிக ஏக்கமாக இருக்கிறது.
ஏனென்று தெரியவில்லை.

இருந்தும் இல்லாத உறவுகள்.
உடன்பிறந்தவர்களின் புறக்கணிப்புடன்...

புறக்கணிக்கப்படும்
என் கவிதையும் நானும்
தனிமையில்.

எனக்கென்று ஒரு குடும்பம்
ஒரு வாழ்க்கை
எல்லாம் இருந்தும் இன்று ஏனோ...

அம்மாவை பார்க்க வேண்டும் என்று
மிக ஏக்கமாக இருக்கிறது...
ஏனென்று தெரியவில்லை.

ஆத்மாஜீவ்


(10)

In this pleasant evening time
wiith a cup of Tea
I am sitting outside.

The function is over

The gods offering blessings at the roadsides
were made to get down.
Next year they might return.
Coming inside, without saying much
Angaali took leave.
Full of hope she is
that the Appeals and Prayers would continue.

Near the fire-pans
Milk-pots
My legs grow hot
When they walk
Some run

When they pull out so long a thin bar
my mouth pains.
It is as if my very life is thus extracted

The faces of those returning home 
with hope
are filled with that day’s joy.

Now from my cup
the last drop of Tea is over
With tiny  bits and pieces of clouds
in between.

இந்த இனிய மாலைநேரத்தில்
ஒரு கோப்பை தேநீருடன்
வாசலில் அமர்ந்து கொண்டிருக்கிறேன்.

விழா முடிந்து விட்டது.

சாலை ஓரங்களில்
அருள்பாலித்துக் கொண்டிருந்த கடவுளர்கள்
இறக்கி விடப்பட்டனர்.
அடுத்த ஆண்டில் திரும்ப வரக்கூடும்.

உள்ளே வந்துவிட்டு அதிகம் பேசாமல்
விடைபெற்று கொண்டாள் அங்காளி
வேண்டுதல்கள் தொடரும்
என்ற நம்பிக்கை அவளுக்கு.

நெருப்புச் சட்டிகளுக்கு அருகில் 
பால்குடங்கள்.
எனது கால்கள் சூடேறுகிறது 
அவர்கள் நடக்கும்போது 
சிலர் ஓடுகிறார்கள்.

அத்தனை பெரிய கம்பியை
உருவும்போது 
என் வாய் வலிக்கிறது
எனது வாழ்க்கையை 
உருவிவிட்டது போலிருக்கிறது.

நம்பிக்கையுடன் 
வீடு திரும்பும் மனிதர்களின் முகத்தில்
அன்றைக்கான மகிழ்ச்சி 
நிறைந்திருக்கிறது.

இப்பொழுது
எனது கோப்பையிருந்து
கடைசி சொட்டு தேநீர் முடிகிறது
இடையிடையே சிறுசிறு
மேகத்துணுக்குகளுடன்.

ஆத்மாஜீவ்  

11. THE FACE SHUT
Unable to find the way
The smile struggled; staggered
Hesitantly it looked around
It wanted to get fixed in the spot
lost

It was here
He was
alone
Writing Poem
Reading Poem
Closing his eyes….
He is nowhere seen
Now.

At the street corner
Some stood smoking and conversing
All their lips had darkened.
No chance of him being there.
Some were sleeping
Some were revelling
Some were stealthily copulating.

Lips all proved lifeless; mechanical
Lips tightly held together
Fleshy-clefts with smile forgotten
Felt drained
No lips in any face.
Blackened lips proved nauseating.

Time keeps flying
Should find again
New lips.
At the other end
Some were coming with masks
Can’t believe the lips 

inside covered faces
Lips might not be there at all.

Thank god
A lady was in advanced stage of pregnancy
In a few hours 
New lips could be accessed.

The Smile felt overjoyed.
It ran and got inside.

It was there He were
He who was writing Poetry
He who was reading Poetry
He who had lost his smile _
With eyes closed all the while.

மூடப்பட்ட_முகம்

வழிதெரியாமல் 
தடுமாறிக் கொண்டிருக்கிறது
புன்னகை.
தயக்கத்துடன் சுற்றிலும் பார்த்தது.
பறிகொடுத்த இடத்தில் மறுபடி
ஒட்டிக் கொள்ள விருப்பம் 
அதற்கு.

இங்குதான் இருந்தான் 
அவன்...
தனிமையில்...
கவிதை எழுதிக் கொண்டு
கவிதை வாசித்துக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு.
அவனை காணவில்லை 
இப்பொழுது.

தெருமுக்கில் சிலர்
புகைத்தபடி பேசிக் கொண்டிருந்தனர்
எல்லோருடைய உதடுகளும் கருத்திருந்தது
அவன் அங்கிருக்க வாய்ப்பில்லை
சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர்
சிலர் உல்லாசத்தில் இருந்தனர்
சிலர் கள்ளத்தனமாக சல்லாபத்தில்.

இயந்திரத்தனமான உதடுகளாக இருந்தன
இறுக ஒட்டிய உதடுகள்
புன்னகை மறந்த சதைப் பிளவுகள்
அலுப்பாக இருந்தது
யாருடைய முகத்திலும் உதடுகள் இல்லை
கருத்த உதடுகள் அருவருப்பாக இருந்தது.

காலம் ஓடிக் கொண்டிருக்கிறது
மீண்டும் தேடிக் கொள்ள வேண்டும்
புதிய உதடுகளை.

எதிர்முனையில் முகக்கவசத்துடன்
சிலர் வந்து கொண்டிருந்தனர்
மூடப்பட்ட முகத்துக்குள் 
இருக்கும் உதடுகளை
நம்ப முடியாது ஒருவேளை
உதடுகள் இல்லாமலும் இருக்கலாம்.

நல்லவேளை
ஒருத்தி 
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.
இன்னும் சில மணி நேரங்களில்
புதிய உதடுகள் கிடைத்து விடும்.

புன்னகைக்கு 
அளவில்லாத மகிழ்ச்சி.
ஓடிப் போய் 
உள்ளே புகுந்து கொண்டது.

அங்குதான் அவன் இருந்தான்
கவிதை எழுதிக் கொண்டிருந்தவன்
கவிதை வாசித்துக் கொண்டிருந்தவன்
புன்னகையைத் தொலைத்தவன்
கண்களை மூடிக் கொண்டு.

ஆத்மாஜீவ்

 12. RELAXATION


Pulling off the hues and shades
One by one
That little girl was painting

When all the seven were over
She gladly eyed me
Keenly.

Another sun is required
Said she

I took off one of my eyes and 
gave her.

Very hot it is
Cool it and give said she.

After some time
She picked it up 
in her hands
and exclaimed, amazed
It is chill now!

It has become Moon I said

In her face
Two more moons  surfaced.

‘It is blissfully airy here – come
Let us sit under this tree’,  said she.
showing the tree drawn by her.

Now both of us
Rest here only
Under this tree.
ஒவ்வொரு வண்ணமாக உருவி
வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள்
அந்தக் குழந்தை.

ஏழும் தீர்ந்தபின்
என்னைப் பார்த்தாள் மகிழ்வுடன்
உற்று.

இன்னொரு சூரியன் வேண்டும் 
என்றாள்.

கண்களில் ஒன்றை 
கழட்டிக் கொடுத்தேன்.

சூடாக இருக்கிறது கொஞ்சம்
ஆறவைத்து தா 
என்றாள்.

நாழிகை கழிந்தபின்
கைகளில் எடுத்து
சில்லென்று இருக்கே 
என்று வியந்தாள்.

நிலவாகி விட்டது என்றேன்.
அவள் முகத்தில் 
இரண்டு நிலவுகள்
மேலும் மலர்ந்தன.

காற்றோட்டமாக இருக்கிறது வா
இந்த மரத்தடியில் அமரலாம் 
என்றாள்
அவள் வரைந்த மரத்தைக் காட்டி.

இருவரும் இப்போது
இங்குதான் இளைப்பாறுகிறோம்...
இந்த மரத்தடியில்.


(13)



The questions I had are missing..

Don’t know where I have kept them.

It could be that 
Someone must have taken them away

About  taking them without
Telling me
I am not feeling sad, you see.

Dolls would be kept in the showcase.
So some questions  were with me
ornately

At the doorway of my house
where none enters
some dolls

Some inside cardboard box
Some have turned torn; time-worn

Indeed true
Now I think not of
the questions kept where
Nor of the dolls that are 
no more with me.

Neither  search for the ones lost
Nor go after them 

The loss of queries
is in a way proves better.

No need to keep wandering 
In search of  answers ever.

என்னிடமிருந்த கேள்விகளை
காணவில்லை.

எங்கே வைத்தேனென்றும்
தெரியவுமில்லை.

ஒருவேளை
யாரோ அவைகளை 
எடுத்துப் போயிருக்கலாம்.

என்னிடம் சொல்லாமல் 
எடுத்துப் போனதில் வருத்தமேதுமில்லை 
எனக்கு.

அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் 
பொம்மைகள்.
அப்படித்தான் இருந்தன 
அலங்காரத்துக்கென சில கேள்விகள்
என்னிடம்.

யாரும் நுழையாத 
என் வீட்டின் முகப்பில்
சில பொம்மைகள்.

அட்டைப் பெட்டிக்குள் 
சில.

நைந்து பழையதாகிப் போய்விட்டன 
சில.

உண்மைதான்
இப்பொழுது என்னிடத்தில் 
இல்லாத பொம்மைகளை
எங்கே வைத்தேன் என்று 
யோசிப்பதும் இல்லை.

காணாமல் போனவற்றை 
தேடுவதில்லை

பின்தொடருவதும் இல்லை.

கேள்விகள் காணாமல் போனது
ஒருவிதத்தில் 
நல்லதாக இருக்கிறது.
பதில்களுக்காக 
அலைய வேண்டியதில்லை பாருங்கள்.

ஆத்மாஜீவ்  

(13)

The land ploughed so deep
Cries not
It creates Life

In the drops poured by
clouds banged against and broke
the land blooms

From inside the seed
that bursts and breaks
jungle comes to be..

From me 
broken into smithereens
rise up and walk
Words en masse.


INSIGHT MARCH 2021

INSIGHT - AUGUST 2026

 INSIGHT AUGUST, 2026 (a bilingual blogspot for contemproary tamil poetry) 2026insight.blogspot.com