INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

PAADHASAARI VISWANATHAN

         TWO POEMS BY

PAADHASAARI VISWANATHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


There remains a room
uninhabited
where there is a wall-clock
The clock has a glass-cover
Inside that glass cover
There are those clock hands
that play run and catch game forever.
At times those clock hands would
stop running
and refrain from showing the time.
And an old man there
who would never fail to change the battery
even for that
Stock-still clock.
It’s ages since his one and only son
had settled in a foreign soil
with his family
The senior citizen
Who even after that
went on
replacing the old battery
with the new one
is today dead and gone.

Paadhasaari Vishwanathan
ஆளற்ற ஓர் தனி அறையுமுண்டு
அறையிலோர்
சுவர்க்கடிகையும் உள்ளது
உள்ளததில் கண்ணாடிக் கூடுமுளது
கூடு னுள்ளே
ஓடிப் பிடித்து விளையாடும் நேரக்குறி முட்களும்
நகரக் காண்பதுண்டு
நேரக்குறி முட்கள்
நகராது நின்று
காலம் காட்டாது
ஓடாதிருப்பதுமுண்டு
ஓடா அக்கடிகைக்கும்
ஓயாது பேட்டரி மாற்றிவிடும் முதியோன்
ஒருவர் உண்டு
அவ்வொருவரின்
ஒற்றை மகனும் தன்குடும்பமென
அயல் தேசம் ஏகி
ஆண்டுகள் பலவானதுண்டு
ஆகிய பின்னும்
அக்காலி அறை
ஓடாச்
சுவர்க்கடிகைக்கும்
ஓயாது பேட்டரி மாற்றிய
அம்முதியோன்
இன்று காலமானார்.

பாதசாரி விஸ்வநாதன்


(2)

They have broken
the limbs of the hibiscus plant
Forgetting the scars
It once again offers flowers
so fine
Daily they take them in the flower-basket
to Badrakaaliamman shrine
Plants are children
Trees, the Aged Ones.

செம்பருத்திச் செடியின் கைகால்களை முறித்து விட்டனர்
ஆயினும்
வடு மறந்து
மீண்டும் மலர்கள்
தருகிறது
அன்றாடம்
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு
பூக்கூடையில்
எடுத்துச்செல்கிறார்கள்..
செடிகள் குழந்தைகள்
மரங்கள் முதியவர்கள்.

பாதசாரி விஸ்வநாதன்
A POEM BY PAADHASAARI VISWANATHAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
They have broken
the limbs of the hibiscus plant
Forgetting the scars
It once again offers flowers
so fine
Daily they take them in the flower-basket
to Badrakaaliamman shrine
Plants are children
Trees, the Aged Ones.
செம்பருத்திச் செடியின் கைகால்களை முறித்து விட்டனர்
ஆயினும்
வடு மறந்து
மீண்டும் மலர்கள்
தருகிறது
அன்றாடம்
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு
பூக்கூடையில்
எடுத்துச்செல்கிறார்கள்..
செடிகள் குழந்தைகள்
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
They have broken
the limbs of the hibiscus plant
Forgetting the scars
It once again offers flowers
so fine
Daily they take them in the flower-basket
to Badrakaaliamman shrine
Plants are children
Trees, the Aged Ones.
செம்பருத்திச் செடியின் கைகால்களை முறித்து விட்டனர்
ஆயினும்
வடு மறந்து
மீண்டும் மலர்கள்
தருகிறது
அன்றாடம்
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு
பூக்கூடையில்
எடுத்துச்செல்கிறார்கள்..
செடிகள் குழந்தைகள்
மரங்கள் முதியவர்கள்.

ABDUL JAMEEL

TWO POEMS BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1) UMMA - THE LIGHT THAT READS HER CHILDREN’S GLOOM

Though Umma’s cooking is not all that tasty
It is only when the food is mashed with her loving hand
and she feeds her children
adding her affection
the kids get rid of their hunger.
Though Umma’s face is beauty-personified
it is only when she with her smile serene
gifts her children with kisses
the tear-filled faces of her children
bloom at once.
Though Umma’s words don’t sound sweet
it is only when she sings lullaby
children fall asleep upon her shoulders blissfully.
Though Umma’s life remains sans light
It is with the help of her eyes’ glow
children forever read their gloom ,
you know.
Abdul Jameel •

குழந்தைகளின் இருளை
வாசிக்கும் ஔிதான் உம்மா
_____________________
உம்மாவின் சமையல்
சுவையாக இல்லையென்றாலும்
அவளின் கையால் சோறு பிசைந்து
அன்பையும் கலந்து
ஊட்டும் போதுதான்
குழந்தைகளின் பசி ஆறுகிறது
உம்மாவின் முகம் அழகில்லையென்றாலும்
இதழ் பதிந்த முத்தங்களை
புன்னகை சொரிந்தபடி
அவள் பரிசளிக்கும் போதுதான்
குழந்தைகளின் அழுத முகம்கங்கள்
உடன் மலர்ந்துவிடுகின்றன
உம்மாவின் பேச்சு
இனிமையாக இல்லையென்றாலும்
அவள் தாலாட்டுப் பாடும் போதுதான்
தோழ்மேல் குழந்தைகள் அயர்ந்துறங்கிவிடுகிறது
உம்மாவின் வாழ்வு ஔியற்றிருந்தாலும்
அவளின் கண்களின் ஔியால்தான்
தங்களது இருளை
ஒயாது வாசிக்கின்றன குழந்தைகள்

ஜமீல்

2. CAN HOUSES DWELL WITHOUT DOORS



The door there
with face to the floor
Lying abandoned
Would have been safeguarding a house
Once upon a time.
Today with all its identity lost
And its shape and ornamental decorations decayed
It remains
Still it would be retaining still
In tact
the history of the house
it dwelt in
its deadly secrets
and memories galore
and many more
Sometimes the doors would be knowing
things happened without the knowledge of the house-owner.
For,
From the time it is locked
Till it opened
Mostly the doors of the house alone
Keep reading the abode
Without doors
The houses never become that, for sure.
Abdul Jameel
கதவுகளின்றி வீடுகள் வசிக்குமா
_____________________________________
கை விடப்பட்ட நிலையில்
ஒதுக்குப் புறமாக
முகம் புதைந்து கிடக்கும் கதவானது
முன்னொரு காலத்தில்
ஒரு வீட்டின் அரணாக வாழ்ந்திருக்கும்
இன்று அடையாளமற்றவாறு
பொழியப்பட்ட அலங்கரங்களும்
வடிவமும் சிதைந்து கிடக்கிறது
இருந்தும் தான் வாழ்ந்த வீட்டின்
ஆதி வறலாறுகளையும்
பரம ரகசியங்களையும்
மேலும் சில நினைவுகளையும்
இப்போதும் மனசில்
சிதையாமல் வைத்திருக்க கூடும்
சில சமயம் வீட்டானுக்கு
தெரியாமல் நிகழ்ந்த
சம்பங்களை கூட
கதவுகள் அறிய வாய்ப்பிருக்கிறது
ஏனெனில் வீட்டை பூட்டி விட்டு
திரும்பி வரும் வரை
அநேகமாக அறைக் கதவுகள்தான்
வீட்டை வாசிக்கின்றன
கதவுகளின்றி வீடுகள்
ஒரு போதும் வீடாவதில்லை
ஜமீல்

KADANGANERIYAN ARIHARASUTHAN

        THREE POEMS BY

KADANGANERIYAN ARIHARASUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

This rain unseasonal is nothing daringly new
Yet there linger
thoughts of the price paid already for it
Oh, what at all do we see Who
in these pictures sketched by heat
going beyond the dense watery lines
For whom this season, in truth? For what
Though I care to hear the query asked
by my heart innermost
Another voice asks me to go past
as if not heard.
Though everything would take place
as destined
fated
Well,
the heart always longs to rebel .
Nothing there to ponder over
Suffice to have sleep the very moment
we lie down.
It is life fulfilled, unparalleled.
Till the time you get another life
to thank all those who came along
Be loyal.
Be it Life’s Be-all and End-all.
Kadanganeriyaan Ariharasuthan
பருவம் தப்பிப் பொழியும்
இந்த மழையொன்றும் புதிதல்ல தான்
ஆனாலும்
ஏற்கனவே அதற்காக கொடுத்த விலையைப்
பற்றிய எண்ணங்கள்
அடர்நீர்க் கோடுகளை மீறி
இந்த வெப்பம் தீட்டும் சித்திரங்களில்
யாரை/ எதனைக் காண்கிறோம்
மெய்யாகவே இந்தப் பருவம் எதற்காக/ யாருக்காக
என ஆழ் மனம் கேட்ட கேள்விக்கு செவி கொடுத்தாலும்
கேட்காதது போல கடக்கச் சொல்கிறது
இன்னொரு குரல்
விதிக்கப்பட்டது
எழுதப்பட்டது படி தான் யாவும் நடக்கும் என்றாலும்
மீறத் துடிக்கும் மனம்

யோசிப்பதற்கு ஒன்றுமில்லை
படுத்த நொடி தூக்கம் வந்தால் போதும்
அதனைப் போன்ற நிறைவாழ்வு எதுவுமில்லை
உடன் வந்த யாவருக்கும் நன்றி சொல்ல பிறிதொரு வாழ்வு வாய்க்கும் வரை
விசுவாசமாக இரு
அது போதும்.

கடங்கநேரியான் அரிஹரசுதன்

(2)
Picking out those written in an unconscious state
you interrogate
All those that had come and gone
as things residual
are but destined
For us who are living
Here and Now
and processing the soil
for the forthcoming season
with seed dressing undertaken
let those words become the manure.
Bury deep the bitterness of yesteryears
and turn it into compost
I see those flowers that open tomorrow
in your countenance
Going across this summer time
An all too rare soft breeze blowing
there emanates fragrance
Give a hand please
Climbing the mound I would sing
the song of this universe
After all isn’t it a fact
that for listneing to that
we are wading through so vast a desert

Kadanganeriyaan Ariharasuthan
நினைவு தப்பிப் போன வேளையில் எழுதியவற்றை எடுத்துப் போட்டு கேள்வி கேட்கிறாய்
விட்ட குறை தொட்ட குறையாக
வந்து போனதெல்லாம் ஊழ்வினை
இத் தருணத்தில் வாழ்ந்த படி
அடுத்த பருவத்திற்காக
நிலத்தை பண்படுத்தி
விதை நேர்த்தி செய்து கொண்டிருக்கும்
நமக்கு அந்தச் சொற்கள் உரமாகட்டும்
கடந்த கால கசப்புகளை புதைத்து உரமாக்கு
நாளைய பொழுதைத் திறக்கும்
அந்த மலர்களை
உன் முகத்தில் காண்கிறேன்
இக் கோடை காலத்தைக் கடக்க
அரிதான இளந்தென்றல் வீச
நறுமணம் கமழ்கிறது
கொஞ்சம் கைகொடு
மேடேறி பாடுவேன்
இப் பிரபஞ்சத்தின் பாடலை
அதனை செவிமடுக்கத் தானே
அவ்வளவு பெரிய பாலையை கடந்து கொண்டிருக்கிறோம்


(3)
He who came to perform the ritual for those dead and gone
Standing on the shore looks at the river
For whom the song of the fishes
floating in the water
placing the mouth on the
river
and air
If cared to listen keenly
can you hear them singing the glory
of those ancestors of ours
When asked thus
the priest sulks stroking his belly.
With the slender heat of sun rising
and the fresh yellow’s blush radiant
Along the course of the girl
ascending on the bank and leaving
follow the river’s eyes.
With the hunter and hunting entity
changing place
the fluid unwind and give way.
Hauling any and all seen
the flooding waters of summer
flows carrying them along
This I wrote in the great grand river
Read out
in the highway mirage, I remember.
Kadanganeriyaan Ariharasuthan
நீத்தார் கடன் செலுத்த வந்தவன்
கரையில் நின்றபடி ஆற்றைப் பார்க்கிறான்
தண்ணீரில் மிதந்தபடி
ஆற்றிலும்
காற்றிலும் வாய் வைத்து
முணுமுணுக்கும் மீன்களின் பாடல் யாருக்கானது
சற்றே கூர்ந்து கவனித்தால் அது மூத்தோரின்
பெயரைச் சொல்லி அவர் புகழைப் பாடுவது
கேட்கிறதா எனக்கேட்டால்
புரோகிதன் தன் வயிற்றைத் தடவியபடி சலித்துக் கொள்கிறான்
இள வெய்யில் ஏற
புது மஞ்சளின் வெட்கம் ஒளிர
கரையேறிப் போகும் பெண்ணின் வழியில் கண்களைச் செலுத்துகிறது நதி
வேட்டையாடியும்
வேட்டைப் பொருளும்
கூடு விட்டு கூடு பாய
நீர்மை நெகிழ்ந்து இடம் கொடுக்கிறது
கண்ணுற்ற
யாவரையும் வாரிச் சுருட்டிக் கொண்டோடுகிறது
கோடை மழையின் வெள்ளம்
இதனை எழுதியது பேராற்றில்
வாசித்தது
நெடுஞ்சாலையின் கானல் நீரில்

கடங்கநேரியான் அரிஹரசுதன்

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE