TWO POEMS BY
RAGAVAPRIYAN THEJESWI
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
in the dry and parched agricultural fields of ours.
as elephants
all over God’s Land
The Rain.
Caught in the elephant-trunks of rain
the areca-trees and all vegetation
go scattering.
The highways paved along its trail
and the hutments
are stamped and crushed
by the battalion of rain-tusker
Unable to preserve the heavy imprints of rain-tusker
We are going to leave it into the sea
To float as hippopotamus
The Kerala elephants
are always giants
Of them while bringing some
with the help of Kumki
Losing them in Kabini or Krishnarajasagar
asking for their little ones
We have been begging our
neighbouring States
for the past several years.
That screams for alms
go on reverberating all over the firmament of Tamil Nadu
as summer-thunder unbearable.
Alas _
A post-modern tusker
losing its way
keeps wandering all over facebook these days.
Don’t take it to be a soon to die cloud
and build modern resorts in its trail .
வய நாட்டின் வெள்ளத்தை
எங்களின் காய்ந்த கடைமடை
வயற்காடுகளில்
கட்டிவைக்க முடியவில்லை..
ஒரு யானையென மலைமுகடுகளில்
அலைந்து திரிகிறது
கடவுளின் சொந்த பூமியெங்கும்
மழை..
மழையின் தும்பிக்கைகளில்
சிக்குண்டு சிதறிப்போகின்றன
பாக்குமரங்களும் பச்சையங்களும்..
அதன் வழித்தடத்தில்
வேயப்பட்ட நெடுஞ்சாலைகளை
கூரை வேய்ந்த குடிசைகளை
மிதித்தே உடைத்தெடுக்கின்றன
யானைமழைக் கூட்டம்..
பாய்ந்து வரும் யானைக்கனஅடிகளைத்
தேக்கி வைக்க முடியாமல்
மழையானையை
கடலுக்குள் நீர்யானையாய்
மிதக்கவிடப்போகிறோம்..
கேரளத்தின் யானைகள்
எப்போதுமே பிரமாண்டங்கள்...
அவற்றில் சிலவற்றை
கும்கி உதவியுடன்
கூட்டிவருகையில்
கபினியிலோ கிருஷ்ணராஜ சாகரிலோ
தொலைத்துவிட்டு..
அதன் குட்டிகளைக்கேட்டு
அண்டை மாநிலத்திடம்
சில ஆண்டுகள்
பிச்சையெடுக்கிறோம்..
அந்தப் பிச்சைப் பிளிறல்கள்
சகிக்க முடியாத
கோடையிடிகளாய்
தமிழக வானமெங்கும்
இடித்துக்கொண்டே இருக்கின்றன...
போகட்டும்
ஒரு பின் நவீன கவிதையானை
தன் வழிதவறி
முக நூலெங்கும் அலைந்துகொண்டிருக்கிறது..
அதை மரிக்கப்போகும்
மேகமென நினைத்து
அதன் வழித்தடத்தில்
நவீன விடுதிகளைக் கட்டிவிடாதீர்கள்..
ராகவபிரியன்
(2)
In wakeful nights
with her star-friend
upon the sand
and rarely in the river water
She would play, sleeping.
Caution: River Cauvery is
Flooding
Tonight
in the classroom of the nearby government school
She would read lessons with her friend
But
heer sleep
and hut
might be going round and round
in the all too massive current
of the river.
Ammaayee…
While feeding the motherless little girl
and her star-friend
the smell of the wet field
mixed with the Kaveri water
would taste so delicious.
Today’s wage for planting crops
Ammaayee
would receive tomorrow.
For buying star-studs
tonight itself
the child was walking along Sky, the bazaar street
with her dear friend.
He who was fixing the ears with studs
in the thin square-cardboards
to the stars
saying ‘thirty rupees,
The little star wiped the twinkling drops of sweat.
The vendor speaking in Hindi…
will my grandma understand it
blabbered she in her sleep.
For fulfilling the child’s wish
her grandma turned thirty rupees –
all that she had _
into earrings.
With her friend swinging
in her ears
Tea boiled
in Ammaayee’s lament.
For he who spoke in Hindi
the language of hunger appeared to be all too familiar.
Not only for the grandma but also for her grand-daughter he bought Tea
and despite losing twenty rupees
laughed heartily…..
When in the morning everybody
evincing surprise
told Ammaayyee that
Mother Kaveri
paid her obeisance to the little girl’s hut
touching its feet
sulking that none had noticed
her friend
swinging in her ears
the little girl
is sleeping
மணற்தரையினின்று மீண்ட
கரைமீதான குடிசைமகளின்
தூக்கம் அது..
விழித்த இரவுகளில்
நட்சத்திரத் தோழியுடன்
மணலிலும் எப்போதாவது
ஆற்று நீரிலும்
விளையாடுவாள் உறங்கியபடியே..
காவிரியின் வெள்ள எச்சரிக்கை...
இன்றிரவு
அருகிருக்கும் அரசுப்பள்ளியின்
வகுப்பறையில்
தோழியுடன் பாடம்படிக்கலாம்..
ஆனால்
அவளின் உறக்கமும்
குடிசையும்
வெள்ளத்தின் ஆகப்பெரிய
சுழலுக்குள்
சுற்றிக் கொண்டிருக்கக்கூடும்..
அம்மாயி..
அம்மாயில்லாத அவளுக்கும்
நட்சத்திரத் தோழிக்கும்
சோறூட்டிக் கொண்டிருக்கையில்
அவள் கையின்
வயற்சேற்று வாசம்
காவிரியின் நீர்கலந்து
அத்தனை ருசியாயிருக்கும்..
இன்றைய நடவுக்காசு
அம்மாயிக்கு
நாளை கிடைக்கும்..
இன்றிரவே..
நட்சத்திரக் கம்மல்
வாங்க கடைவீதிவானில்
தோழியுடன் நடந்துகொண்டிருந்தாள்
குழந்தை..
கம்மல் அட்டைகளில்
தோடுடைய செவிகளை
நட்சத்திரங்களுக்குப்
பொருத்திக்கொண்டிருந்தவன்
முப்பது உரூபாயெனச் சொல்ல...
சின்ன நட்சத்திரம்
சோபைவியர்வையைத்
துடைத்துக்கொண்டது..
விற்பவன் இந்தியில் பேச..
பாட்டிக்குப் புரியுமா
என உறக்கத்தில் பிதற்றினாள்..
குழந்தையின் ஆசைக்கு
இருந்த முப்பது உரூபாவை
கம்மலாய் மாற்றினாள் பாட்டி..
அவளின் காதுகளில்
தோழி ஊஞ்சலாட..
அம்மாயி புலம்பலில்
தேனீர் கொதித்தது..
இந்தியில் பேசியவனுக்கு
பட்டினி மொழியும்
பரிச்சயம் போலும்...
பாட்டிக்கு மட்டுமல்ல
பேத்திக்கும் தேனீர்வாங்கி
இருபது உரூபா
இழந்தும் சிரித்தான்...
குழந்தையின் குடிசை வாசலை
காவிரி தொட்டுக் கும்பிட்டதாய்
அம்மாயியிடம்
அத்தனை பேரும்
காலையில் ஆச்சரியம் காட்ட...
அவளின் காதில் ஆடிக்கொண்டிருக்கும்
தோழியை
யாரும் கண்டுகொள்ளாத கோபத்தில்
குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறாள்...
ராகவபிரியன்
the rainbow would appear as horse-shoe.
For the mouse that had got inside a paddy-sack
Coming out would prove exile!
For the peacock seeing rain-clouds
the noise of thunder would prove discordant
making it think that its dancing feet were being broken
Before death
should tie the shoe atleast once, they say.
For running and dancing with no wear and tear
the mouse and the peacock do bat-like penance....
It was on the tip of arrow shot from the rainbow
their fate was written!
வெளவால்களின்
தொங்கும்கண்களில்
வானவில்குதிரைலாடமாய்த்தெரியும்!
நெல்மூட்டையுட்புகுந்த
சுண்டெலிக்குவெளியேறுவது
நாடுகடத்துவதாய்தெரியும்..!
மழைமேகம்கண்டமயிலுக்கு
இடியோசைஅபஸ்வரமாகி
ஆட்டக்கால்கள்ஒடிக்கப்படுவதாய்நினைக்கும்!
இறப்பதற்குமுன்ஒருமுறையாவது
லாடம்கட்டிக்கொள்ளவேண்டுமாம்..
தேய்மானமின்றிஓடவும்ஆடவும்
சுண்டெலியும்மயிலும்
வெளவால்தவமியற்ற...
வானவில்லில்இருந்துஎய்யப்பட்ட
அம்பின்முனையில்தான்
அவர்களின்விதிஎழுதியிருந்தது..!!
ராகவபிரியன்
No comments:
Post a Comment