FOUR POEMS BY
A. NASBULLAH
Rendered in English by
Latha Ramakrishnan(*First Draft)
SEA’S UTTERANCES
I had the fortune of
meeting the waves
that I had been
searching for.
For
I needed several words
urgently.
Waves are words
uttered by the sea.
When the texts of life
are written by waves
they would be forever
living.
For, our ancestors
have taught us
that waves never rest.
For addressing the
darkness of
the garden of sorrow
that keeps pervading
the soul
causing ache, anguish,
calling out its name
with its nativity affixed,
For recording enough
of it in history
hither and thither,
Waves are most suited,
for
waves are real deep
like the water-tight
text of Life.
கடல் உதிர்த்த சொற்கள்.
♪
நான் தேடிக்கொண்டிருக்கும்
கடலலைகளை
சந்திக்க கிடைத்தது
ஏனெனில் எனக்கு
சில சொற்கள் அவசரமாக தேவைப்பட்டது
அலைகள் என்பது
கடல் உதிர்த்த சொற்கள்
வாழ்வின் பிரதிகளை
அலைகளால் எழுதும் போது
அது வாழ்ந்து கொணடே இருக்கும்
ஏனெனில் அலைகள் ஓய்வதில்லையென்பதை
நமது மூதாதையர்கள் சொல்லித்
தந்திருக்கிறார்கள்
எனது ஆன்மாவில்
பிசைந்து
பரவிக் கொண்டிருக்கும்
துயர் வனத்தின் இருளை
ஊர் பெயர் சொல்லி
ஒரு நாள் அழைக்க
போதியளவு வரலாற்றில் ஆங்காங்கே பதிந்துவிட
கடலலைகளே மிகப் பொருத்தம்
ஏனெனில்
கடலலைகள் ஆழமானது
வாழ்வின் இறுக்கமான பிரதியைப் போல.
_ ஏ.நஸ்புள்ளாஹ்.
(2)
You sit in the chair for a while and leave
I sit
get up and go away
She and he
sit
In the split-second
when they get up and move away
two birds come and sit
With the birds flying away
loneliness come to occupy the seat
Tomorrow
An anklet-chime might sit there.
இருக்கையில்
நீ உட்கார்ந்து விட்டு செல்லுகிறாய்
நான் உட்கார்ந்து கொள்கிறேன்
இருக்கையை விட்டு
நான் எழுந்து செல்லுகிறேன்
அவள் மற்றும் அவன்
உட்கார்நது கொள்கிறார்கள்
அவர்கள் எழுந்து செல்லும்
சிறு கணத்தில்
இருக்கையில்
பறவைகள் இரண்டு உட்கார்ந்து கொள்கின்றன
பறவைகள் பறந்து செல்ல
இருக்கையில்
தனிமை உட்கார்ந்து கொள்கிறது
நாளை ஒரு கொலுசொலி உட்கார்ந்து கொள்ளலாம்.
_ ஏ.நஸ்புள்ளாஹ்.
(3)
Life unfettered.
One who walks on the sky;
One who flies in the earth;
One who speaks with the trees;
One who flutters with the birds;
I means Wind
I means Rain
My universe
an imaginary school.
நான் என்பது
விலங்கிடப்படாத வாழ்வு
ஆகாயத்தில் நடப்பவன்
பு+மியில் பறப்பவன்
நதியில் குதிப்பவன்
மரங்களுடன் பேசுபவன்
பறவைகளுடன் பறப்பவன்
மீன்களுடன் வாழ்பவன்.
நான் என்பது காற்று
நான் என்பது மழை.
எனது உலகம்
கற்பனைப் பள்ளிக்கூடம்.
I climb upon the river and walk
The birds that come flying at the same time
crossing the remaining distances
alight and sit by my side.
There a new world comes into being.
Drinking water in the teapot-shaped rock
We, the birds set forth.
In the room where I dwell
Window remains opened.
I peep through.
Holding the brush
trying to complete the remaining part of the painting
_ two serpentine memories.
பறவையாகியபடி
நதியின் மீதேறி நடக்கிறேன்
அதே கணம்
பறந்து வருக்கின்ற பறவைகள்
மீதமிருக்கும் தூரங்களை கடந்து
எனதருகில் அமர்கின்றன
அங்கு புது உலகம் தயாராகின்றது
தேநீர்க் குவளை வடிவில்
இருக்கும் பாறையில் நீர் அருந்திவிட்டு
மலைகளை நோக்கி
பறவையாகிய நாம் புறப்படுகிறோம்.
நான் வசித்து வரும் அறையில்
யன்னல் திறந்துகிடக்கிறது
எட்டிப் பார்க்கிறேன்
தூரிகையைப் பிடித்து
மீதமிருக்கும் ஓவியத்தை முடிக்க முயல்கின்றன
இரண்டு சர்ப்ப நினைவுகள்.
நஸ்புள்ளாஹ். ஏ.
No comments:
Post a Comment