INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

YAAZH AGATHIYAN

 A POEM BY

YAAZH AGATHIYAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

BLACK, THE COLOUR OF POEM - 8
That which I write
Are not mere poems
They are tales too which I wanted to tell you
That which you read are not my poems alone
It is the craving of my character
Left all alone, abandoned.
That which you tear and throw
Are not just my papers
They are memoirs of my Love.

BLACK, THE COLOUR OF POEM – 9
O My Lord
Why do you keep thinking that
I should never be reformed.
Please tell me for how long
You’re going to think on these lines.
Or else
At least introduce me to someone
Who would give me time enough
To decipher my love.

BLACK, THE COLOUR OF POEM – 10
“Won’t you stay away from being fooled?”
Asks she sadly.
When my love is as pure as Mother’s milk
Won’t it be a sin altogether
to suspect the love of other.

BLACK, THE COLOUR OF POEM – 11
So as to make me believe you
you keep telling this mammoth lie
straining all the while
Haven’t you realized as yet
that I’m a kid who believes only too well
no matter who tells.

BLACK, THE COLOUR OF POEM – 12
If you’re to bury me
with the help of your scorching words
Please bury me deep.
Bury me real deep
Never again hearing your voice.

கவிதையின் நிறம் கறுப்பு 08
````````````````````````````````````````````
நான் எழுதுவது கவிதைகள்
மட்டுமல்ல உன்னிடம் சொல்ல
நினைத்த கதைகளும்தான்
நீ படிப்பது என் கவிதைகள்
மட்டுமல்ல தனித்து விடப்பட்ட
கதாபாத்திரத்தின் ஏக்கமும்தான்
நீ கிழித்து எறிவது
என் காகிதங்கள் மட்டுமல்ல
என் காதலின் சுயசரிதையும்தான்.
✍ -யாழ் _ அகத்தியன்
கவிதையின் நிறம் கறுப்பு 09
````````````````````````````````````````````
கடவுளே...
நான் திருந்தக்கூடாது என
நீங்கள் ஏன் நினைத்துக்கொண்டு
இருக்கிறீர்கள்
தயவு செய்து இன்னும் எத்தனை
காலத்துக்கு இப்படி நினைக்க
போகிறீர்கள் என்று சொல்லிவிடுங்கள்
இல்லையேல்
என் அன்பை புரியவைக்க
எனக்கு நேரம் தருபவரையாவது
அறிமுகம் செய்து விடுங்கள்.


கவிதையின் நிறம் கறுப்பு 10
````````````````````````````````````````````
" நீ ஏமாறாமல் இருக்க மாட்டாயா"
என்கிறாள் வருத்தமாக
என் அன்பு தாய்ப்பாலுக்கு
நிகராக இருக்கும் போது
மற்றவர்களின் அன்பில் மட்டும்
சந்தேகப்படுவது தவறாகிவிடாதா?


கவிதையின் நிறம் கறுப்பு 11
````````````````````````````````````````````
உங்களை நான் நம்புவதற்காக
ஏன் இவ்வளவு பெரிய பொய்யை
சிரமப்பட்டு சொல்லிக்கொண்டு
இருக்கிறீர்கள்
சொல்வது யாராக
இருந்தாலும்
அப்படியே நம்பும்
குழந்தைதான் நானென
இன்னுமா
உங்களுக்கு தெரியவில்லை?

கவிதையின் நிறம் கறுப்பு 12
````````````````````````````````````````````
உங்களது சுடுசொற்களால்
என்னைப் புதைப்பதாக இருந்தால்
தயவு செய்து ஆழமாக
புதைத்து விடுங்கள்
மறுபடியும் உங்களது
குரல் கேட்க முடியாதபடி
ஆழமாக புதைத்து விடுங்கள்.

✍ -யாழ் _ அகத்தியன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024