INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, January 31, 2023

THARIK THASKI

 A POEM BY 

THARIK THASKI 

(Nero)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


I am holding and stalling the night from moving on
Begging and beseeching you have
gone past many a house, dear old lady
Your legs must be feeling like hell
Your heart as well
It would have pains galore
I know
So only I keep holding the night
from moving on
Sleep well, dear senior citizen
Sometimes you would be leading life wholesome
in your dream.
There your children would be
calling you so affectionately for ever
Mother, Dear Mother
showering you with love
not allowing you to go anywhere
and suffer
It is for this
that I hold fast the night
not allowing it to move on
Sleep well, dear old lady.
Everything will be alright.

Tharik Thaski
இந்த இரவை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்
கையேந்திக் கையேந்தி நீங்கள் நிறைய வீடுகளைக் கடந்து விட்டீர்கள் மூதாட்டியே.
உங்கள் கால்கள் நிறைய வலித்திருக்கும்.
அதை விடவும் உங்கள் மனது
நிறையவே வலிகள் கொண்டிருக்கும் என்பதை நான் அறிவேன்
ஆகவேதான் அவசரமாய் விடிய விடாமல்
இந்த இரவை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்
நீங்கள் நன்றாக உறங்கிக் கொள்ளுங்கள் மூதாட்டியே.
சிலவேளை உங்கள் கனவுக்குள்
அழகாய் வாழ்ந்து கொண்டிருக்கலாம் நீங்கள்.
அங்கு உங்கள் குழந்தைகள் உங்களை எங்கும் நகர விடாமல்
அம்மா அம்மா என்றழைத்து
அன்பில் நனைத்துக் கொண்டிருக்கக் கூடும்.
அதற்காகவே இந்த இரவை விடிய விடாமல்
இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்
நீங்கள் நன்றாக உறங்கிக் கொள்ளுங்கள்
மூதாட்டியே.

நீறோ

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024