INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

ANWER BUHARI (PRAKASA KAVI)

 A POEM BY

ANWER BUHARI

(PRAKASA KAVI)

rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


BEYOND PAINS

Eat to your hearts’ content
Our corpses
Our organs
Our bloods
Our homes
Why, even our hearts
Eat it all to your hearts’ content
and get rid of your hunger.
It’s alright.
With a small portion of it
teach your descendents too how to relish.
It’s alright.
Divide among yourselves its delicious taste
and flavour.
It’s alright.
For the hiccup and other complications caused by it
Use our sea of tears as medicine
It’s alright.
Pour the sounds of our sobs wails screams
and laments into your ears
and tune them as soothing music
It’s alright.
But don’t you mutilate the tender bodies
of our children
and plant venom in their innocent smile..
Wind-like they are.

வலிகளுக்கு அப்பால்
_______________________
மலையும் மண்ணுமாய் சிதறிக்கிடக்கும்
எங்களது சடலங்களை
எங்களது அவயங்களை
எங்களது இரத்தங்களை
எங்களது இல்லங்களை
ஏன் எங்களது
உள்ளங்களைக்கூட அள்ளித்தின்று
உங்களது பசியாற்றுங்கள் பரவாயில்லை
அவற்றில் சிறு பகுதியை
உங்களது சந்ததிக்கும்
உண்பதற்கு கற்றுக்கொடுங்கள் பரவாயில்லை
அதன் ருசியை பங்குவையுங்கள் பரவாயில்லை
ஆதலால் உண்டாகும்
விக்கலுக்கும் சிக்கலுக்கும்
எங்களது கண்ணீர் கடலை
மருந்தாக்குங்கள் பரவாயில்லை
எங்களது அழுகை, அலறல்
மற்றும் விம்மல் ஓசைகளை
உங்கள் காதுகளுக்குள் ஊற்றி
இதமான இசையாய்
இசை மீட்டுங்கள் பரவாயில்லை
ஆனால்
எங்களது பாலகர்களின்
பிஞ்சு உடல்களை சிதைத்து
கள்ளம் கபடமில்லா அவர்களது புன்னகையில்
நஞ்சை மட்டும் ஒருபோதும் விதைக்காதீர்கள்
அவர்கள் காற்றைப் போன்றவர்கள்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE