INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

MOHAN CHELLASWAMY

 A POEM BY

MOHAN CHELLASWAMY


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


The soft glow of darkness
fills my house.
Of course your visit to my house and
meeting you would make me happy.
But when you throw the light rays collected by you
wandering everywhere and with great effort -
every now and then
my house is greatly unsettled
and turns imbalanced.
The eyes of darkness too suffers damage
Further
to sweep off all those particles of light
scattered all over the place
and cast them aside
proves a herculean task.
Therefore, I beseech you,
henceforth when you come
please leave at the entrance of the house,
in the place where you leave your footwear,
your heap of light rays too
and then come inside.
When you go away
don’t forget to take it with you.
It would indeed be of great help, you know.

இருளின் இதமான ஒளி கொண்டது
என் வீடு.
நீங்கள் என் வீட்டுக்கு வருவதிலும்
உங்களைச் சந்திப்பதிலும் மகிழ்ச்சிதான்.
ஆனால், நீங்கள் அலைந்து திரிந்து
சேகரித்த வெளிச்சக் கதிர்களை
அவ்வப்போது வீசியடிக்கும்போது
வீடு திகைத்துத் தடுமாறி
நிலை குலைந்து போகிறது.
இருளின் கண்களும் சேதமடைகின்றன.
மேலும், நீங்கள் சென்ற பின்
வீடெங்கும் சிதறிக்கிடக்கும் ஒளித்துகள்களை வாரிக் கூட்டி
அப்புறப்படுத்துவதும்
பெரும் பாடாயிருக்கிறது.
எனவே, தயவுகூர்ந்து
இனி நீங்கள் வரும்போது
வீட்டு வாசல் முன்
காலணிகளைக் கழற்றிவைக்கும்
இடத்திலேயே
உங்கள் சேகர ஒளிக் குவியலையும்
கிடத்திவிட்டு உள்ளே வாருங்கள்.
போகும்போது மறக்காமல்
எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்.
பெரும் உபகாரமாக இருக்கும்.

சி.மோகன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE