INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

AASU SUBRAMANIAN

 THREE POEMS BY

AASU SUBRAMANIAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
'When a word unfolds
what do you want to be?'
The flower asked
I replied
‘The Fragrance’.
Good it said.
‘As the hue and shade’ said I
‘Don’t be so’ it said
‘As a lone flower’ said I
‘Good before it bloomed -
But after blossoming it is better to
be strung together’
It observed.
‘As the poet’ said I
‘If it means recapturing the Life of Time
and its Love
doubly alive
It’s okay’ it observed.
‘As child’s prattle’, said I
‘Wonderful’ It observed.
I asked -
‘I become a flower
Can you become a human?’
It replied
Why so much divide in your inside?
Aasu Subramanian
ஒரு சொல் அவிழும்போது
நீ எப்படி இருக்க விரும்புகிறாய்
மலர் கேட்டது
நான் சொன்னேன்
மணமாக
நல்லது என்றது
நிறமாக என்றேன்
வேண்டவே வேண்டாம் என்றது
உதிரியாக என்றேன்
மலரும்முன் நன்று
மலர்ந்தவுடன் சரமாக
தொடுப்பதே நன்று என்றது
கவிஞனாக என்றேன்
காலத்தின் வாழ்வையும்
நேசத்தையும்
உயிர்ப்போடு கொண்டு வருவதெனில்
சரி என்றது
மழலையாக என்றேன்
அற்புதம் என்றது
நான் கேட்டேன்
நான் மலராகிறேன்
நீ மனிதனாக ஆக முடியுமோ
அது சொல்லிற்று
உனக்குள் ஏன் இத்தனை பேதம்."

ஆசு சுப்பிரமணியன்

(2). ANOTHER FACE
I drew my face
resembling the clock.
Moving tension, turmoil
As the digits of Life
it defeated me.
Yet
My face turns alive
As stirring memory-drawing
I began drawing again
A face of mine
That was when my mother
delivered me.
It resembled the spider-web
I began erasing it too.
In the remaining lines
Each face was swollen as my child’s nerves,
As Life’s face in shambles.
Another day
My child drew
The face of a doll.
It looked exactly mine
Peeled off me and planted there.

Aasu Subramanian

இன்னொரு முகம்
கடிகாரத்தின் முகமொத்த
என் முகம் வரைந்தேன்
பதற்றங்கள்
வாழ்வின் எண்களாய் நகர்த்தி
என்னைத் தோற்கடித்தது அது
எனினும்
அசையும் நினைவு ஓவியமாய்
உயிர்ப்புறுகிறது என் முகம்
மீண்டும் வரையத் தொடங்கினேன்
என் தாய் எனை ஈன்ற நேரத்தில்
இருந்த என் முகமொன்றை
ஒரு சிலந்தியின்
பின்னலை ஒத்திருந்தது அது
அழிக்கத் தொடங்கினேன் அதையும்
மிஞ்சிய கோடுகளில்
என் குழைந்தையின்
நரம்புகளாய்ப் புடைத்திருந்தின
ஒவ்வொரு முகமும்
வாழ்வின் சிதைந்த முகமாய்
இன்னொரு நாள்
என் குழைந்தை வரைந்தது
பொம்மையின் முகமொன்றை
என்ன ஆச்சர்யம்
என் முகத்தை அப்படியே
பிடுங்கி வைத்தது போலிருந்தது அது.

ஆசு சுப்பிரமணியன்

3. AYYANAAR’S HORSES
On the banks of the river
of the uninhabited village
Ayyanaar is sitting on the horse
keeping vigil
to safeguard the horses
being stolen.
He sitting upon the stallion
on the river bank
One day in the torrential downpour
the very rain
stole the horse upon which
he was seated
Again the one
among the six or seven stallions
in front of him
upon which he sat
the hot sun peeled
and plundered
The remaining few horses
the storm stole away
Shocked to the core Ayyanaar
gripped by fear
when himself became a horse
kept vigil
being both, himself and horse.
In the deserted village on the river bank
Why Ayyanar keeps vigil seated on the horse
in a place where there are no robbers…..
for safeguarding the horses……
Rain Sun Storm
Oh why thieves they’ve become?
The furies would be taken away
Strangulated
the left over Time would
struggle to get unleashed.
In the lone blood drop frozen upon the tip of
Lord Ayyanar’s long sword
with venom and vengeance perishing
and justice prevailing
the stolen horses
bray and leap alive.
Aasu Subramanian

அய்யனாரின் புரவிகள்
..........................................
மனிதர் அற்ற
ஊரின் ஆற்றின் கரையில்
அய்யனார் புரவி மீது அமர்ந்து
காவலிருக்கிறார்
களவுப்போகும் புரவிகளுக்காய்
ஆற்றின் கரையில்
புரவி மீது அமர்ந்தவர்
ஒரு நாள் அடைமழையில்
அவர் அமர்ந்த புரவியை
மழையே களவாடியது
மீண்டும் அவர் எதிரேயிருந்த
ஏழெட்டுப் புரவிகளில்
ஒரு புரவி மீதமர்ந்த
அய்யனார் புரவியும்
வெயில் உரித்து
வெய்யிலே களவாடியது
மீந்த ஒன்றிரண்டுப் புரவிகளையும்
புயல் வெறித்து களவாடின
திகைத்த அய்யனார்
அச்சத்தின் பீதியில்
தானே ஒரு புரவியாகியப் பொழுதில்
தானும் அதுவுமாக காவலிருந்தார்
மனிதர் அற்ற ஊரின் ஆற்றின் கரையில்
அய்யயனார் ஏன்? புரவி மீது
அமர்ந்து காவலிருக்கிறார்
கள்வர்கள் இல்லாத ஊரில்
களவுப்போகும் புரவிகளுக்காய்...
மழை வெய்யில் புயல்
ஏன்? கள்வர்களாயின
களவாடப்படும் சீற்றங்கள்
நெறித்தலில்
திமிறும் காலத்தின் எச்சம்
அய்யனாரின் வீச்சரிவாளில்
உறைந்த ஒரு சொட்டு குருதியில்
சமன்படுத்தி நீளும் அறத்தில்
கணைத்து எழுகின்றன
களவாடப்பட்ட புரவிகள்

ஆசு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024