TWO POEMS BY
SOORARPATHY
(1)
SCENE 1
Today at dawn
In the main square of the city where four roads meet
I saw a lunatic..
Yes a female lunatic.
Looking at the sky where darkness lingered still, she was talking strangely. She was talking strangely.
No, she was shouting.
Probing the air with her hands
Picking up cigar-packet or plastic cup lying on the road
And chatting with them, she remained there.
This world went on deriving fun, watching her -
With all its virtues intact.
SCENE 2
Some ten years ago in the city bus terminus
I had seen such a female lunatic.
Awkwardly clad, unmindful of the hot sun she would be howling strangely.
Each day a different sari would be around her body.
As soon as it became six in the evening screaming she would go running amidst the city’s heavy traffic.
When I saw her after several days her stomach appeared swollen as if she was pregnant.
O, how calm this world remains!
SCENE 3
Sitting on the threshold
a little girl -
now itself, so hastily, so intently
keeps sharpening the pencil.
காட்சி 1
இன்று அதிகாலை
நகரின் பிரதான நான்கு முனைச் சந்திப்பில் ஒரு பைத்தியத்தைப் பார்த்தேன்.
ஆம்.பெண் பைத்தியம்.
வினோதமாக இருள் பிரியாத வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.
தப்பு ,கத்திக் கொண்டிருந்தாள்.
காற்றில் கைகளை அளாவுவதும்,
சாலையில் கீழே கிடக்கும் சிகரேட் அட்டையையோ,பிளாஸ்டிக் டம்ளரையோ எடுத்து அதனோடு ஏதோ பேசுபவளாக இருந்தாள்.
இவ்வுலகம் அதனின் எல்லாவித அறமுடன் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
காட்சி 2
சுமார் பத்து வருடங்களுக்கு முன் நகரின் பேருந்து நிலையத்தில்
இதே போன்ற ஒரு பெண் பைத்தியத்தை பார்த்திருக்கிறேன்.
அலங்கோலமான ஸ்திதியில் வெயில் என்றும் பாராமல் வினோதமாக கத்திக் கொண்டிருப்பாள்.
அவள் ஒவ்வொரு நாளும் ஒரு புடவை அவளின் உடலை சுற்றியவாறு இருக்கும்.
மாலை 6 மணி ஆன உடனேயே கத்திக் கொண்டு நகரின் வாகன சந்தடிகளில் ஓடுவாள்.
கொஞ்ச நாள் கழித்து பார்த்த போது வயிறு புடைத்து கர்ப்பம் போல தெரிந்தது.
இந்த உலகம் தான் எவ்வளவு அமைதியானது!
காட்சி 3
சிறுமி ஒருத்தி
வாசலில் அமர்ந்து
வேகமாக இப்போதே
பென்சிலை கூர்சீவிக் கொண்டிருக்கிறாள்.
சூரர்பதி
2. HEAR
O God, I know not your magnificence
Even when at the mountain-peak
when I feel the quiver in my feet
O God I know not your existence
When I experience the headache of yesterday’s liquor
that is your consciousness
O God I ask not for your mercy.
In woods and highlands
in grass, weed and what not
overflowing with the where the life of love overflows
O God I don’t know your source too.
In Lightning that flashes
Thunder that falls down roaring
The sky is your marvel
O God, this is also your mocking
Finally
Definitively
Let me say this, please hear
The grand immortal soul that resides in each mortal soul is
Not You but Myself just Myself.
••••••••••
பள்ளிக்கூடச் சிறுமிக்கு
பட்டாம்பூச்சி வரைகையில்
கடவுளேவுன் மகத்துவம் அறிகிலேன்.
மலையுச்சியில்
கால்களுக்குக் கீழே குறுகுறுப்பை
உணரும் போதும்
கடவுளேவுன் இருப்பை உணர்கிலேன்.
உனது பிரஞ்ஞையாகிய
நேற்றைய மதுவின்
தலைவலியை உணரும் வேளை
கடவுளேவுன் தயவினை கேட்டிலேன்.
காட்டிலும் மேட்டிலும்
புல்லிலும் பூண்டிலும்
அன்பின் ஜீவன் ததும்பும்
கடவுளேவுன் மகரந்த தோற்றுவாயையும் அறிகிலேன்.
பளீர் பளீர் வெட்டும் மின்னல்
தடால் தடால் கொட்டும் இடி
வானம் உன் அற்புதம்
கடவுளேவுன் பரிகசிப்புதான் அதுவும்.
இறுதியாக
உறுதியாக கூறுகிறேன் கேள்
ஒவ்வொன்றின் ஆத்மாவிலும் மாகாத்மாவாய் உள்ளூறைவது
நீயல்ல நானே நான்தான்.
No comments:
Post a Comment