INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

SURYA VN

 THREE POEMS BY

SURYA VN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



(1)
It is in this room that our ponderings would always be piled up
as books unread
From inside one came with a great effort
and vomited
‘Oh friend, a girl baby for you’ we chorused aloud
In the next cabin
he who had turned into a petrol bunk
was inserting his pipe into the cycle.
With Ilayaraja saying ‘*Andha Nilaava than naan kaiyile pudhichen’
Rahman responded with **Paakaadhe oru maadhiri “
In the midst of all these
he with feet dreaming of the razor edge of terrace
sporting unshaven face
would be swallowing ‘Fair and Lovely’
Somewhere
the storm would have crossed the shore
and so the deluge would have fled past dwellings
They in this early morn compel me to believe
Bro, you are indeed happy
Believe it, bro, won’t you believe me
Accompanied by my cigarette smokes I wade through the lanes.
Not homeward
Should return to the hostel
She who is cheating for love looks at her Scorpion wrist watch.
You are already dead and gone, it says
For one more trip an auto
U-turns to hell.
Oh well,
Should live today also
Life Lifeless.

(* I held that moon in hand)
(**Oh, don’t look so )


இவ்வறைக்குள்தான்
எங்களது எண்ணங்கள் எப்போதுமே
படிக்கப்படாத புத்தகங்களென அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
உள்ளேயிருந்து ஒருவன்
மிகஅரிய மெனக்கெடலுடன்
வெளியே வந்து வாந்தியெடுத்தான்
நண்பா உனக்கு
பெண்பிள்ளையென கோஷித்தோம்
பக்கத்து அறையில்
பெட்ரோல் நிலையமாக மாறிவிட்டவன் சைக்கிளுக்குள்
தன்குழாயை செருகிக்கொண்டிருந்தான்
இளையராஜா
அந்த நிலாவைத்தான் கையில புடிச்சேன் எனச்சொல்ல
ரஹ்மான்
பார்க்காதே ஒருமாதிரி என்றார்
இதற்கு மத்தியில்
மொட்டைமாடி விளிம்பை கனவு காணும்
கால்களுடன் சவரம் செய்யப்படாத முகமுடைய ஒருவன்
Fare nd Lovelyஐ
தின்றுகொண்டிருப்பான்
எங்கோ
புயல் கரையை வெள்ளம் வீடுகளை
கடந்திருக்கும்
அவர்கள் இவ்வதிகாலையில்
என்னை
நம்ப நிர்பந்திக்கிறார்கள்
தம்பி, நீ சந்தோஷமாகத்தான் இருக்கிறாய்
நம்பு தம்பி என்னை நம்பமாட்டாயா
எனது சிகரெட் புகைகளுடன் தெருக்களினூடே செல்கிறேன்
வீட்டிற்கு அல்ல
விடுதிக்கு திரும்பவேண்டும்
காதலுக்காக ஏமாற்றும் ஒருத்தி தன் கையிலணிந்திருக்கும் தேள்கடிகாரத்தை
பார்க்கிறாள்
அது நீ ஏற்கனவே இறந்துவிட்டாய் என்கிறது
இன்னொரு சவாரிக்கென ஒரு ஆட்டோ
நரகத்திற்கு திரும்புகிறது
வாழ்க்கையற்ற வாழ்க்கையை இன்றும்
வழக்கம்போல வாழ்ந்தாகவேண்டும்
  • confession statement by the Translator:

  • . நான் மொழிபெயர்க்கும் எல்லாக் கவிதைகளைப் பொறுத்த அளவிலும் என் வாக்குமூலம் ஒன்றே. மூல கவிதையின் அழகையும் ஆழத்தையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவரவே இயலுவதில்லை. இருந்தாலும் மொழிபெயர்க்கவேண்டுமென்று தோன்றுகிறது. தோழமையுடன் லதா ராமகிருஷ் ணன்.
..........................................................................................................................................................................................................
2.BRUSHES THAT PAINT EMPTINESS

Mount(r)ain laughs heartily
Revealing its teeth.
That laughter of the mount(r)ain
bangs against the window.
Butterflies carrying the frogs
approach the window.
I open the window for allowing the butterflies
inside.
As I keep opening the windows
they keep closing and
multiplying.
At last, utterly spent out
I pick up the brush and
touching nothingness with it
applies it on the windows.
The hue of nothingness
turns into nought
the windows closing and multiplying infinitely.
Ultimately a drop of hue
spreading stealthily in the air
feel the mount(r)ain
and butterflies.

வெறுமையை தீட்டும் தூரிகைகள்

மலை(ழை) தன் பல் தெரிய
சிரிக்கிறது .
அந்த மலை(ழை)யின்
சிரிப்பு சன்னலை
மோதுகிறது .
வண்ணத்துபூச்சிகள்
தவளைகளை சுமந்தபடி
சன்னலை நோக்கி
வருகின்றன .
மலை(ழை)யின் சிரிப்பும்
தவளைகளை
சுமந்துகொண்டிருக்கும்
வண்ணத்துபூச்சிகளும்
உள்ளே வர சன்னல்களை
திறக்கிறேன்.
சன்னல்களை திறக்க
திறக்க சன்னல்கள்
மூடியபடி புதிதாக
தோன்றிக்கொண்டே
செல்கிறது .
முடிவாய் சோர்வடைந்து
தூரிகை எடுத்து
வெறுமையை தொட்டு
சன்னல்களில் தீட்டுகிறேன்.
வெறுமையின் வர்ணம்
மூடியபடி புதியதாக
தோன்றிக்கொண்டே
செல்லும் சன்னல்களை
இல்லாமல் செய்கிறது.
கடைசியாக ஒருதுளி
வர்ணம் காற்றில்
ரகசியமாய் பரவி
மலை(ழை)யையும்
வண்ணத்துபூச்சிகளையும்
தீண்டுகிறது .

’சூர்யா வின்’

(3)
Now and then
Father would metamorphose into leech
In those days whatever comes into view
He would stay glued to them
‘Return to normalcy’
Mother would say repeatedly
Learning it my brother would send
the exclusive pillow and blanket for leech
by speed post.
So far he had been staying glued
to all kind of things like
joy , worry, this and that
Edgy, yet I remained patient
tolerated them all
But now, the way he stays glued on Today,
I just can’t take it
Raising my voice
‘Move a little, won’t you
Am I not to move into tomorrow?’, said I.
In response he asks:
‘May I stay glued to your heart.’

அவ்வப்போது அப்பா
அட்டைப்பூச்சியாக உருமாறுவார்
அன்றைய தினங்களில் கண்ணில்படும்
யாவற்றிலும் ஒட்டிக்கொள்வது அவர் வழக்கம்
அப்பொழுதெலாம் வழமைக்கு திரும்புங்களென்று
அம்மா திரும்பத்திரும்ப சொல்லிப்பார்ப்பாள்
தகவலறிந்து என் சகோதரன் அட்டைப்பூச்சிக்கான
தலையணையையும் போர்வையும் துரித அஞ்சலில் அனுப்பிவைப்பான்
இதுவரை சந்தோஷம் சஞ்சலம் என
எதன்யெதன் மீதெல்லாமோ ஒட்டிக்கொண்டிருந்தார்
பொறுமையில்லாத நான் பொறுத்துக் கொண்டேன்
சகித்துக் கொண்டேன்
ஆனால் இன்று இந்நாளின் மீது
ஒட்டிக்கொண்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை
உயர்ந்த குரலில்,
சற்று நகருங்கள்
நான் மறுநாளுக்கு செல்லவேண்டாமா
எனக்கேட்டேன்
பதிலுக்கு உன் இதயத்தில் ஒட்டிக்கொள்ளவாயென கேட்கிறார் அவர்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024