INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

LEENA MANIMEKALAI

TWO POEMS BY

LEENA MANIMEKALAI


rendered in English by Latha Ramakrishnan

Don’t refer to my father

as corpse.

He for whom even hot water proved unbearable

O, please don’t order the tender fingers

of my younger brother to

set him afire.

Forgetting book for a while

He is reposing on the lap of sleep.

Leave him alone.

Just smash your bier, I say….

He had never liked gold;

Please don’t push coins into his mouth.

No need to feel shocked

to see him lying there so cool;

That is his nature.

O, stop your cries;

Just leave my daddy with me.

I will have a word with Death.

You are more cruel.


என் தந்தை

என் தந்தையை

பிணம் என்று சொல்லாதீர்கள்

வெந்நீர் சூடும் தாங்காத

அவர் உடலில் தீ மூட்ட

என் தம்பியின் மென் விரல்களைப் பணிக்காதீர்கள்

புத்தகங்களை மறந்து சற்று

உறக்கத்தின் மடியில் ஆழ்ந்திருக்கிறார்

விட்டுவிடுங்கள்

உங்கள் பாடைகளை உடைத்துப் போடுங்கள்

ஒரு நாளும் தங்கம் விரும்ம்பியதில்லை

அவர் வாயில் காசுகளைத் திணிக்காதீர்கள்

தண்ணென்று இருப்பதைக் கண்டு

பீதியடையாதீர்கள்

அது அவர் சுபாவம்

நிறுத்துங்கள் உங்கள் கூச்சலை

என் தந்தையை என்னிடம் விட்டுவிடுங்கள்

நான் மரணத்திடம் பேசிக் கொள்கிறேன்

நீங்கள் அதைவிடக் கொடியவர்கள்

லீனா மணிமேகலை 


(2)

Today morning my soul

asked me to feel it
For the fingers slightly shivering
It felt so soft as that of bird’s abdomen
as if there would be scratch if pressed
a little hard
But
as if lying in wait
the moment I touched it
just as the dog’s ear
it stood taut
There arose a smell
as if something squashed.
Indeed, that of a familiar flower
But the gloom of lost season too
seeped, it seemed
On pulling and placing it on my lap
all too lovingly
coiling like a tortoise
it asked me to caress it.
With the warmth increasing
wings sprouted.
All set to go
in its eyes
I looked like a piece of land.
Of those thousand holes
from which one it surfaced
I search in the direction
wherefrom the voice came.

இன்று காலை என் ஆன்மா
தன்னை தொட்டுப்பார்க்க சொன்னது
சிறு நடுக்கத்தில் இருந்த விரல்களுக்கு
அது
ஒரு பறவையின் அடிவயிறு போல மிருதுவாகவும்
சற்று அழுத்தினாலும்
கீறல் விட்டுவிடுமோ
என்ற பதத்திலும் இருந்தது
ஆனால்
காத்திருந்தது போல்
தொட்டதும்
ஒரு நாயின் காது போல
விடைத்துக்கொண்டு நின்றது
எதையோ கசக்கிவிட்டது போல
வாசம் எழுந்தது
ஏற்கனவே அறிமுகமான பூவினுடையது தான்
ஆனால் பருவம் தப்பியதின் வாட்டமும் கசிந்தது போல தோன்றியது
அள்ளி மடியில் வைத்ததும்
ஒரு ஆமை போல சுருண்டு
வருடித்தர கேட்டது
கதகதப்பு கூட கூட
இறக்கைகள் முளைத்தன
புறப்பட்டுவிட்ட
அதன் கண்களில்
நான் ஒரு துண்டு நிலமாக தெரிந்தேன்
ஆயிரம் துளைகளில்
எந்த துளையிலிருந்து வெளிவந்ததென
குரல் வந்த திசையில் தேடுகிறேன்

லீனா மணிமேகலை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE