INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

RAVI SUBRAMANIAN

 A POEM BY

RAVI SUBRAMANIAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

1.GOD FOR ALL


Open the long wide door
- shut tight.
Have I asked for things magnificent
Just a handful of peace,
Why feeling shy of viewing
the haplessness of directions lost.
Even after clinging fast
No melting of heart at all?
Even while being tossed at
by wind all too harsh _
such radiance?
I have offered you Pongal
with casuarinas of confusion confounded brain
scattered all over
Please have it.
For the compassion of your blessings to
How many more days will I languish
You who feed the worm and insect
O, Pemmaane? why hesitate?
Though a slave
Still a human – right?
How many more times I would be telling myself
That dawn is indeed round the corner
Does everything happen
with Your hearty sanction
Have mercy
Maya
Just one thing
I say, O hear -
Testing my patience any further
Don’t force me to curse and swear.

Ravi Subramaniyan


என்னாட்டவர்க்கும் இறைவா
--------------------------
அடைத்த
நெடுங்கதவைத் திற
உன்னதங்களா கேட்டேன்
உள்ளங்கையில் தேங்குமளவு
நிம்மதிதானே
திசைகள் தொலைத்த
நிராதரவைக் காணவா கூச்சம்
சிக்கென பிடித்த பின்னும்
மனமிலையோ
மூர்க்கக் காற்றில்
அலைக்கழியும் வேளையிலுமா
மந்தகாசம்
மயங்கிக் கலங்கிய
சித்த முந்திரிகளைத் தூவித்தான் பொங்கலிட்டு வந்தேன்
ஏற்றுக்கொள்
அருளின் தயை துலங்க
இன்னும் எத்தனை நாட்கள்
துயருவேன்
புழுவிற்கும் பூச்சிக்கும்
உணவளிக்கும் உனக்கு தயக்கமென்ன பெம்மானே
அடிமைதானென்றாலும்
மனிதனில்லையா
விடியும் விடியுமென
எத்தனை முறை
சொல்லிக்கொள்வேன்
சகலமும்
நின் திருவுளச் சம்மதந்தானா
மனமிரங்கு
மாயா
ஒன்றே ஒன்றுதான்
சொல்வேன்
மேலும் பொறுமையைச் சோதித்து
என்னைச் சாபமிட வைத்துவிடாதே.

ரவி சுப்ரமணியன்

PINK’S DISTRESS

The mobile that doesn’t come alive
with your call
turns me an abandoned urchin
Can anyone quench hunger by
merely watching the images
Day and night goes by
with the caresses of words sent
soundless – Oh my….
without piling up reasons
for the hapless being who keeps waiting
for words
ever again
console it
Removing the wait and turn melting to the core
what at all the words are doing there
leaving a pink-hued heart
in anguish utmost….
Ravi Subramaniyan

பிங்கின் படபடப்பு
-----------------
நின் அழைப்பால்
ஒளிரா அலைபேசி
அனாதையாக்குகிறது
நிழற்படங்கள் பார்த்தே
பசியாற முடியுமா
ஒலியற்று அனுப்பும் சொல்லின்
வருடல்களிலேயே
நீள்கின்றன பொழுதுகள்
மறுபடி மறுபடி
சொல்லுக்குக் காத்திருக்கும் ஜீவனுக்குக்
காரணங்களை அடுக்காமல்
சாந்தம் செய்
காத்திருப்பை விலக்கி நெகிழ்ந்து குழைக்காமல்
அங்கே என்னதான் செய்துகொண்டிருக்கின்றன
அந்தச் சொற்கள்
இங்கே ஒரு பிங்க் நிற இதயத்தைப்
பரிதவிக்க விட்டுவிட்டு.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE