INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

RIYAS QURANA

 FOUR POEMS BY

RIYAS QURANA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


1. UPON THE TABLE THE TEA
TURNING COLD
When the Past and the Future met,
I created anew a tea-shop there.
Placing a table there
and two chairs too
facing each other
I waited for ages.
They didn’t come.
I say it just for the sake of telling.
For, none had promised to come.
It is here that the complication comes to be.
How to continue the poem
Recounting the poem from an angle unthought of by you
No possibility is seen.
Hence, forced to act,
I grab at two persons going that way
and make them sit in the chairs.
One of the, a male
The other, female.
This simple knot
Caused a spark in me.
Hurriedly I place a lone cup of tea
Upon the table.
Now, see there _
a situation has come to be
where they can be conceived as lovers.
After that I did nothing.
But, even if proved that they are no lovers
making it impossible to believe it,
things took shape on their own
Each one suggesting that the other should drink the tea,
with none drinking the tea turning cold upon the table
is indeed an embarrassing situation between
two Strangers.
Oh, We know very well.
But, doesn’t this very situation help many
to guess it to be the magical game of love?
Both rising
leave for their respective work
in their different ways.
In fact this is how the poem was about to conclude
Yet, keeping our Tamil viewers in mind
I had changed the verdict
as follows:
The vapour coming out of the tea-cup upon he table
constructed a boundary-line between them.
After remaining silent for too long
they parted ways –
She heading towards Future
and he heading toward Past.
Here
I have also set a melancholic tune
only a few can hear it.
As I may have to write it twice
I have given the climax as the title.

மேசையின் மீது தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது

பழங்காலமும் எதிர்காலமும்
சந்தித்துக் கொண்டபோது;;;;>
அந்த இடத்தில் புதிதாய்
ஒரு தேனீர்க் கடையை உருவாக்கினேன்.
அழகிய மேசையொன்றும்
எதிரெதிரே இருக்கும்படி
இரண்டு கதிரைகளையும் போட்டுவிட்டு
நீண்ட நேரமாக காத்திருந்தேன்
அவர்கள் வரவில்லை
சும்மா ஒரு பேச்சுக்குத்தான்
இதைச் சொல்கிறேன்
வருவதாக யாரும் சொல்லியிருக்கவில்லை
இந்த இடத்தில்தான்
சிக்கல் வருகிறது
மேலும் எப்படி கவிதையைத் தொடர்வது
நீங்கள் நினைக்காத புறத்திலிருந்து
கவிதையை விபரித்துச் செல்ல
எந்த முகாந்திரமும் தென்படவில்லை
வேறு வழியின்றி
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த
இரண்டு நபர்களைப் பிடித்து
கதிரைகளில் உட்கார வைக்கிறேன்
ஒருவர் பெண்
மற்றவர் ஆண்
இந்த எளிய சரடு
என்னிடம் ஒரு பொறியை உருவாக்கியது
நான் அவசரமாக
ஒரேயொரு தேனீர்க் கோப்பையை
மேசையின் மீது வைக்கிறேன்
இப்போது பாருங்கள்
காதலர்கள் என நினைக்கும்படி
ஒரு சூழல் உருவாகியிருக்கிறதல்லவா
அதன் பிறகு
நான் எதுவுமே செய்யவில்லை
ஆனால்> அவர்கள் காதலர்கள் அல்ல
என்று நிரூபிக்கப்பட்டாலும்
நம்ப முடியாதபடி எல்லாமே நடந்தன
தேனீரை யார் அருந்துவதென
ஒருவருக்கொருவர் பரிந்துரைப்பதும்
இருவரும் குடிக்காமல் மேசையின் மீது
தேனீர் ஆறிக்கொண்டிருப்பதும்
முன்பின் அறியாதவர்களுக்கு இடையிலான
ஒரு சங்கடமான நிலை என்பதை
நாம் நன்கறிவோம்
ஆனால், அதுவே காதலின்
ஒருவித மாய விளையாட்டென
யூகிக்க பலருக்கு உதவுகிறதல்லவா
இருவரும் எழுந்து
அவரவர் வழியில்
அவரவர் வேலைக்குச் செல்கின்றனர்.
உண்மையில் இப்படித்தான்
கவிதை முடிவடைய இருந்தது
எனினும்,நமது தமிழ் பார்வையாளர்களை
கவனத்தில் கொண்டு
தீர்ப்பை மாற்றி எழுதினேன்
கீழுள்ளவாறு;;;:
மேசையிலிருந்த தேனீர்க் கோப்பையிலிருந்து
கிளம்பிக் கொண்டிருக்கும் ஆவி
அவர்களுக்கிடையில்
ஒரு எல்லைக்கோட்டை கட்டியெழுப்பியது
மிக நெடிய மௌனத்திற்குப் பிறகு
அவள் எதிர்காலத்தை நோக்கியும்
அவன் இறந்த காலத்தை நோக்கியும்
பிரிந்து சென்றனர்
இந்த இடத்தில் சோகமான ஒரு இசையையும்
எழுதியிருக்கிறேன்
சிலருக்குத்தான் அது கேட்கும்
இரண்டு முறை எழுத நேரும் என்பதால்
கிளைமாக்ஸை தலைப்பாக வைத்திருக்கிறேன்


(2)

In between the stone-made thousand stallions
A few wolves
with glowing eyes
tongue hanging out
awaiting always ready for leaping
that too was a statue
a kid draws nearer and goes beyond
leaping through the sleeping circles
that which grabbed the child by mouth
was wolf said some
strreet-dog said some
‘After thousands of year
once, that too, just today
the child and the wolf turning alive
escaped from here
-thus the researcher ended his note.

கற்களால் செய்யப்பட்ட
ஓராயிரம் குதிரைகளின் இடையிடையே
கொஞ்ச ஓநாய்கள்
பளபளப்பான கண்கள்
நாக்கு வெளியே தொங்க
எந்த நேரமும் பாயக்கூடிய
தயார் நிலையில் காத்திருக்கின்றன
அதுவும் சிலைதான்
அதை எட்டிக்கடந்து
செல்கிறது ஒரு குழந்தை
உறங்கிக்கொண்டிருந்த
வட்டங்களில் ஊடே பாய்ந்து
குழந்தையை கவ்வியது
ஓநாய் என்றனர் சிலர்
தெருநாய் என்றனர் சிலர்
பல்லாயிரமாண்டுகளின் பின்
ஒரு முறை அதுவும் இன்றுதான்
குழந்தையும் ஒரு ஓநாயும்
இங்கிருந்து உயிர் பெற்று
தப்பிச் சென்றது என
தனது குறிப்பை முடிவுக்கு
கொண்டுவந்தான் அந்த ஆய்வாளன்.

றியாஸ் குரானா

(3)
As there is no difference between Sky and Myself
all that you have to do is just one thing.
Those who associate with me
should not take away the Stars
or the Moon…
While returning
you can open the cloud and take
raindrops to your heart’s content.
It is for you that I mix words so nicely
and prepare raindrops.
Please stick just one drop
somewhere upon a leaf.
That would guide her.

எனக்கும் வானத்திற்கும்
எந்த வித்தியாசமும் இல்லை என்பதால்,
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
என்னோடு பழகுபவர்கள்
நட்சத்திரங்களையோ
வெண்ணிலவையோ
எடுத்துச் செல்லக்கூடாது.
திரும்பிச் செல்லும் வழியில்
மேகத்தை திறந்து
விரும்பியளவு
மழைத்துளிகளை எடுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்காகவே,
சொற்களை பிசைந்து
மழைத்துளிகளை தயார் செய்கிறேன்.
ஒரு துளியை மட்டும்
எங்காவதொரு இலையில்
ஒட்டிவிடுங்கள். அவளுக்கு அது வழிகாட்டும்.

(4)
Birds wander
They wander noisily
For ages it has been quite so – no....
Trouble-makers are those who say
that they wander having lost their way
and that they keep shrieking
asking to show the return trail
They deem it fit
to intrude in the life of birds _
Damn it


பறவைகள் பறக்கின்றன
சத்தமிட்டு அலைகின்றன
காலங்காலமாக அப்படிதானே
வழி தவறியதால் பறந்து அலைவதாயும்
வழி கேட்டு சத்தமிடுவதாயும்
நினைப்பவர்களாலே பிரச்சினை
பறவைகளின் வாழ்வில்
குறுக்கிட்டு தொலைக்கிறார்கள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024