INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

FAHIMA JAN

 A POEM BY

FAHIMA JAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

FARE THEE WELL

In the rain trickling early morn with darkness lingering
I am leafing through your notes of reminiscences
Amidst the roots of the wet lawn
Remains the torrential downpour of yesterday.
In the hapless island where rivers flood
None has ever welcomed this rain.
From you I take the blanket of parting
And cover me.
The wealth that my rivers have borne along
I offered it all to you.
So as not to be dragged off
in the flash flood that springs out of blue
the trees that my shore has grown
would stay all entangled in unknown creepers.
In the Summer that would come tomorrow
for the soaked soil to dry
my voice for ever
would be springing and surging
through the banks of your rivers.
(*A short note on the poem: A lecturer after serving in a college for very many years, lighting and igniting the hearts of many a student leaves the institution and goes on promotion to some other college. This poem reflects her thoughts (wishing the very best to her students) on taking leave.

2. விடைபெறல்

மழை கசிந்து கொண்டிருக்கும்
இருள் தேங்கிய அதிகாலையில்
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்
பிசு பிசுக்கும் புல் வெளியின்
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது
நேற்றைய பெரு மழை
நதிகள் பெருக்கெடுத்தோடும்
நிர்க்கதி மிகுந்த தீவில்
இந்த மழையை
யாருமே வரவேற்றதில்லை
உங்களிடமிருந்து
பிரிவின் போர்வை எடுத்து
எனை மூடுகிறேன்
என் நதி சுமந்து வந்த
திரவியங்களனைத்தையும்
உங்களிடமே கொடுத்தேன்
திடுமென வருமோர்
காட்டாற்று வெள்ளத்தில்
என் கரை வளர்த்த மரங்கள்
இழுபட்டுச் செல்லாதிருக்கப்
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்
நனைந்த பூமி உலர்ந்திட
நாளை வரும் கோடையில்
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்
என்றென்றைக்குமான
என் குரலோசை

- ஃபஹீமா ஜஹான்

‘விடைபெறல்’ கவிதை பற்றிய குறிப்பு
நீண்ட காலமாக ஒரு பாடசாலையில் பல மாணவர்களுக்கும் கற்பித்து, அம் மாணவர்களது வாழ்வில் ஒளியூட்டிய ஆசிரியை வேறு கல்லூரிக்கு பதவி உயர்வு பெற்று இடம் மாறிச் செல்கிறார். தான் கற்பித்த மாணவர்களுக்கான ஆசிரியையின் மன ஓட்டத்துடனான கவிதை இது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024